உள்ளடக்கத்துக்குச் செல்

போர்க்கள கற்பலகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போர்க்களக் காட்சியின் கற்பலகை
முகப்புப் பக்கம்
பின்பக்கம்

போர்க்களக் காட்சி கற்பலகை (Battlefield Palette) (இதனை கழுகு கற்பலகை, ஒட்டகச்சிவிங்கி கற்பலகை அல்லது அல்லது சிங்கக் கற்பலகை என்றும் அழைப்பர்)[1]இப்போர்க்கள கற்பலகை பண்டைய எகிப்தின் நக்காடா பண்பாட்டின் மூன்றாம் நக்காடா (கிமு 3,200 – கிமு 3,100) காலத்தைச் சேர்ந்தது.[2][3]இரண்டு துண்டுகளாக உடைந்துள்ள இப்போர்க்கள கற்பலகை, தற்போது ஐக்கிய இராச்சியத்தின் பிரித்தானிய அருங்காட்சியகம் மற்றும் அஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த அழகிய கற்பலகை பண்டைய எகிப்தின் 12 போர்க்களக் காட்சிகளையும், சடங்குகளையும் விவரிக்கிறது. இது பண்டைய எகிப்திய மொழியின் படவெழுத்துகள் கொண்டுள்ள முதல் கல்வெட்டு கற்பலகையாகும். இக்கற்பலகையில் எகிப்திய வீரர்கள் மற்றும் எதிரி நாடான லிபியாவின் நிர்வாண நிலை போர்க் கைதிகளின் உருவங்களும், 9 விற்களும் கொண்டுள்ளது. 9 விற்கள் வெளிநாட்டு பழங்குடி எதிரிகளைக் குறிக்கிறது.

பண்டைய எகிப்தியக் கற்பலகையில் போர்களக் காட்சிகள்

[தொகு]
இரண்டு துண்டுகளாக உடைந்த போர்க்கள கற்பலகையின் முன்பக்கத்தின் மேற்புறக் காட்சி
முன்பக்கத்தின் கீழ்புறக் காட்சி (28 x 20 செ மீ)

போர்க்களக் கள கற்பலகையில் ஒப்பனைப் பொருளைக் கலப்பதற்கான வட்ட வடிவப் பகுதி உள்ளது. இது போர்க்களக் காட்சியையும், எகிப்திய மொழியின் படவெழுத்துகளையும் கொண்டுள்ளது. இக்கற்பலகையில் ஓய்வெடுக்கும் பறவை, மனிதனை கொல்லும் சிங்கம், கழுகுகின் வியத்தகு உருவம், இரண்டு மான்கள், பழங்களுடன் கூடிய ஒரு பனை மரம், பாபிரஸ் செடிகள், எதிரிநாடான லிபியாவின் நிர்வாண நிலை போர்க்கைதியின்[4] உருவமும், கைதிக்குப் பின்புறம் எகிப்திய வீரனின் உருவமும் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.[4] இக்கற்பலகை வரலாற்றுக்கு முந்தைய எகிப்தின் வரலாற்றை எடுத்துக்காட்டுகிறது.[5][6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Battlefield palette – Corpus of Egyptian Late Predynastic Palettes". xoomer.virgilio.it. பார்க்கப்பட்ட நாள் 2018-02-28.
  2. Giuliano, Charles. "The Dawn of Egyptian Art – Berkshire Fine Arts". www.berkshirefinearts.com. பார்க்கப்பட்ட நாள் 2018-02-28.
  3. "The Battlefield Palette". British Museum (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-02-28.
  4. 4.0 4.1 Davis, Whitney; Davis, George C. and Helen N. Pardee Professor of Art Historyancient Modern & Theory Whitney; Davis, Whitney M. (1992). Masking the Blow: The Scene of Representation in Late Prehistoric Egyptian Art (in ஆங்கிலம்). University of California Press. p. 264. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-07488-0.
  5. Brovarski, Edward (in en). REFLECTIONS ON THE BATTLEFIELD AND LIBYAN BOOTY PALETTES. https://www.academia.edu/28433861/REFLECTIONS_ON_THE_BATTLEFIELD_AND_LIBYAN_BOOTY_PALETTES. 
  6. "Cairo Museum". Archived from the original on 2021-10-25. பார்க்கப்பட்ட நாள் 2021-10-25.
  7. "A little higher, a figure dressed in a long, embroidered robe leads a prisoner." in Bazin, Germain (1976). The History of World Sculpture (in ஆங்கிலம்). Chartwell Books. p. 100. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-89009-089-3.
  8. Kelder, Jorrit (2017). Narmer, scorpion and the representation of the early Egyptian court: Published in Origini n. XXXV/2013. Rivista annuale del Dipartimento di Scienze dell’Antichità – “Sapienza” Università di Roma | Preistoria e protostoria delle civiltà antiche – Prehistory and protohistory of ancient civilizations (in ஆங்கிலம்). Gangemi Editore. p. 152. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-88-492-4791-6.
  9. Brovarski, Edward (in en). REFLECTIONS ON THE BATTLEFIELD AND LIBYAN BOOTY PALETTES. p. 89. https://www.academia.edu/28433861/REFLECTIONS_ON_THE_BATTLEFIELD_AND_LIBYAN_BOOTY_PALETTES. 

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Battlefield Palette
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்க்கள_கற்பலகை&oldid=3791622" இலிருந்து மீள்விக்கப்பட்டது