உள்ளடக்கத்துக்குச் செல்

ஐக்சோஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எகிப்தின் இடைநிலைக் காலத்தில் (கிமு 1650 - கிமு 1580) பண்டைய எகிப்தில் ஐக்சோசுகளின் (ஆட்சிக் காலம்:கிமு 1630 - கிமு 1523), எகிப்தின் பதினைந்தாம் வம்ச ஆட்சியின் வரைபடம் (அடர் மஞ்சள் நிறம்)

.

ஐக்சோஸ் அல்லது ஐக்சோஸ் வம்சம் (Hyksos) (/ˈhɪksɒs/; எகிப்தியம் ḥqꜣ(w)-ḫꜣswt, (எகிப்திய உச்சரிப்பு::heqa khasut) ஆட்சிக் காலம்:கிமு 1630 - கிமு 1523), எகிப்திய மொழியில் பண்டைய எகிப்திய இராச்சியத்தின் கீழ் எகிப்து மற்றும் சினாய் தீபகற்பத்தின் பெரும் பகுதிகளை 107 ஆண்டுகள் ஆண்ட போனீசியா நாட்டின் பிலிஸ்திய மக்களின் ஆட்சியாளர்கள் ஆவார்.[1]இவர்களை எகிப்தியர்கள் எகிப்திய மொழியில் வேற்று நாட்டவர்கள் எனப்பொருள்படும் படி, ஐக்சோஸ் என அழைப்பர். பண்டைய அண்மை கிழக்கின் போனீசியா நாட்டவர்களை எகிப்திய மக்கள் ஐக்சோஸ் என அழைத்தனர்.

பின்னர் ஐக்சோஸ் மக்கள் கீழ் எகிப்தின் எகிப்தின் பதினான்காம் வம்சத்தவர்களை வென்று, தங்களை எகிப்தின் எகிப்தின் பதினைந்தாம் வம்சத்தினர் என அறிவித்துக் கொண்டு பண்டைய எகிப்தின் மேல் எகிப்து, கீழ் எகிப்து மற்றும் சினாய் தீபகற்பம் பகுதிகளை கிமு 1630 முதல் கிமு 1523 முடிய 107 ஆண்டுகள் ஆண்டனர். [2]

எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலத்தின் (கிமு 1650 - கிமு 1580) போது எகிப்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் வாரிசுரிமைப் பிணக்குகளும், பார்வோன்களுக்கு அடங்காது தன்னிச்சையாக செயல்படும் போக்கு அதிகம் நிலவியது. இதனை பயன்படுத்திக் கொண்ட எகிப்துக்கு வெளியே உள்ள போனீசியா தேசத்தவர்கள் கீழ் எகிப்தின் மற்றும் சினாய் தீபகற்பம் போன்ற பகுதிகளைக் கைப்பற்றி ஆண்டனர்.

வரலாறு

[தொகு]

கிமு 1800- 1720க்கு இடைப்பட்ட காலத்தில் கீழ் எகிப்தை ஆண்ட எகிப்தின் பதிமூன்றாம் வம்ச ஆட்சியில் இருந்த இட்ஜ்தாவி நகரத்தை கைப்பற்றி, போனீசியா நாட்டின் பிலிஸ்திய மக்கள் பெரும் கூட்டமாக நைல் நதியின் கிழக்கு வடிநிலம மற்றும் சினாய் தீபகற்ப பகுதியில் குடிபெயர்ந்து, பதிமூன்றாம் வம்சத்தவர்களை வென்று ஆட்சி அமைத்தனர். மேலும் இவர்கள் தங்களை எகிப்தின் 14-ஆம் வம்சத்தவர்கள் என அழைத்துக் கொண்டனர்.[3] The power of the 13th and 14th Dynasties progressively waned, perhaps due to famine and plague.[4][5]கிமு 1650-இல் ஐக்சோஸ் மக்கள் மேல் எகிப்தின் பதினான்காம் வம்ச ஆட்சியையும் கைப்பற்றினர்.

ஐக்கோஸ் பெயர்க் காரணம்

[தொகு]
Hyksos / Hykussos படவெழுத்துக்களில்
S38N29
Z4
N25
X1 Z1
S38N29
Z4
Aa1M12S29X1
N25

ḥqȝ(w)-ḫȝst / ḥqȝ(w)-ḫȝswt[6]
Heqa-chaset / Heqa-chasut[6]
Ruler(s) of the foreign countries[6]
GreekHykussos (Ὑκουσσώς, Ὑκσώς, Ὑξώς)[7]

ஐக்கோஸ் எனும் சொல்லிற்கு எகிப்திய மொழியில் பண்டைய அண்மை கிழக்கு நாட்டவர் எனப்பொருளாகும்.[8]

பெனி ஹசன் கல்லறையில் பண்டைய அண்மை கிழக்கு நாட்டவர்கள் எகிப்திற்கு வருகை தரும் காட்சி, பெனி ஹசன் கல்லறைக் காட்சி

இதனையும் காண்க

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. [https://www.britannica.com/topic/Hyksos-Egyptian-dynasty Hyksos EGYPTIAN DYNASTY]
  2. "Hyksos (Egyptian dynasty)". Encyclopædia Britannica Online. Encyclopædia Britannica, Inc. பார்க்கப்பட்ட நாள் 8 September 2012.
  3. "Egypt: Middle Kingdom and Second Intermediate Period (2050-1550 BC))". www.cemml.colostate.edu. Archived from the original on 2016-04-17. பார்க்கப்பட்ட நாள் 2020-02-20.
  4. Ryholt, K. S. B.; Bülow-Jacobsen, Adam (1997). The Political Situation in Egypt During the Second Intermediate Period, C. 1800-1550 B.C. Museum Tusculanum Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-87-7289-421-8.
  5. Manfred Bietak: Egypt and Canaan During the Middle Bronze Age, BASOR 281 (1991), pp. 21-72 see in particular page 38
  6. 6.0 6.1 6.2 Rainer Hannig: Großes Handwörterbuch Ägyptisch-Deutsch : (2800-950 v. Chr.). von Zabern, Mainz 2006, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-8053-1771-9, p. 606 and 628–629.
  7. Folker Siegert: Flavius Josephus: Über die Ursprünglichkeit des Judentums. p. 111.
  8. Lorenzo Rocci (1993). Vocabolario Greco-Italiano (in இத்தாலியன்). Città di Castello (Perugia): Società Editrice Dante Alighieri.[need quotation to verify]; this word was not quoted in the A Greek-English Lexicon editions of 1853 and of 1893.
    And also the full acronym used for title of Manetho's work

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஐக்சோஸ்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐக்சோஸ்&oldid=3611978" இலிருந்து மீள்விக்கப்பட்டது