பூனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Gnathostomata
பூனை
Cat
புதைப்படிவ காலம்:9,500 ஆண்டுகளுக்கு முன்பு – தற்போது
Domestic cat cropped.jpg
பூனைகளின் வேறு படிமங்கள்
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: ஊனுண்ணி
குடும்பம்: பூனை
பேரினம்: பெலிசு
இனம்: F. catus[1]
இருசொற் பெயரீடு
Felis catus[1]
லின்னேயசு, 1758[2]
வேறு பெயர்கள்
  • Catus domesticus Erxleben, 1777[3]
  • F. angorensis Gmelin, 1788
  • F. vulgaris Fischer, 1829

பூனை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஓர் ஊனுண்ணி ஆகும். பூனைகள் மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகள் சைவ உணவையும் உண்கின்றன. பூனைகள் பண்டைய எகிப்தில் வழிபாட்டு விலங்குகளாக இருந்து வந்ததால், அவைகளை பொதுவாக வீட்டில் வளர்த்து வணங்கினர். பூனைகள் இறந்தால் அதற்கும் பிரமிடுகள் கட்டி, சில எலிகளையும் பாடம் செய்து எகிப்தியர்கள் புதைத்துள்ளனர். அரசர்களுடன் அவர்களது பூனைகளுக்கும் பிரமிடுகளில் இடங்கள் ஒதுக்கப்பட்டன.

உடற்கூறியல்[தொகு]

ஆண் பூனையின் உடற்கூறுகள்

பூனைகள் பொதுவாக 2.5 லிருந்து 7 கிலோகிராம் வரை (5.5–16 இறாத்தல்) எடை கொண்டவையாக இருக்கின்றன. சிறிய அளவிலான பூனைகள் 1.8 கிலோ கிராமுக்குக் (4.0 இறாத்தல்) குறைவாகக் காணப்படும். மெய்ன் கூன் (Maine Coon) போன்ற சிலவகைப் பூனையினங்கள் எப்போதாவது 11 கிலோகிராமுக்கும் கூடுதலாக வளர்கின்றன. உலக சாதனையாக 21 கிலோகிராம் எடையுடைய பூனைகளும் இருந்திருக்கின்றன. அதேபோல உலகிலேயே மிகச்சிறிய வயதான பூனையின் எடை கிட்டத்தட்ட 1 கிலோவாக இருந்துள்ளது [4][5].பெரல் பூனைகள் அவை உட்கொள்ளும் குறையளவு உணவுகளால் எடை குறைந்தும் மெலிந்தும் காணப்படும் [5] . போஸ்டன் பகுதியில் சராசரி ஆண் பெரல் பூனையின் எடை 4 கிலோகிராம். சராசரி பெண் பெரல் பூனையின் (Feral cats) எடை 3 கிலோகிராம் [6] . பூனைகளின் சராசரி உயரம் 23 முதல் 25 செ.மீ (9-10 அங்குலம்) மற்றும் தலை/உடல் நீளம் 46 செ.மீ (18 அங்குலம்) ஆகும். பொதுவாக ஆண் பூனைகள் பெண் பூனைகளை விட பெரிதாகக் காணப்படும். பூனையின் வால் சராரியாக 30 செ.மீ (12 இங்குலம்) நீளமுடையதாக இருக்கும்[7].

பூனைகளுக்கு 30 முள்ளந்தண்டு எலும்புகள் உண்டு (மனிதனுக்கு 33). நுண்ணிய கேள்விப்புலனைக் கொண்ட பூனைகளின் காதுகளில் 32 தசை நார்கள் காணப்படுகிறது. பூனைகளின் அதிகூடிய சத்த அதிர்வுகள் 64 கிலோஹேர்ட்ஸ்.நாளாந்தம் 12-16 மணி நேரம் உறங்கும். சாதாரணமாக உடல் வெப்பநிலை, 38 – 39 செல்சியசு (101 – 102.2 பாரன்ஃகைட்) வரைக் காணப்படும். பூனைகள் விரைவான இனப்பெருக்க விகிதம் கொண்டவை.

மிதக்கும் விலா எலும்புகளால் பூனையின் முன்னங்கால்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதனால் தம் தலை நுழையும் எந்த சிறிய இடத்திலும் பூனைகளின் உடல் நுழையும். முன்னங்கால்களிலில் ஐந்து நகங்களும், பின்னங்கால்களில் நான்கு நகங்களும் பூனைகள் கொண்டு இருக்கும். பூனைகள் நடக்கும் போது ஓசை கடத்தாமலிருக்கும் வகையில் மெத்தை போன்ற பாத அமைப்பைப் பெற்றுள்ளது. நுகரும் புலன், மனிதனை விட 14 மடங்கு அதிகம். பூனைகளின் நாக்கில் இனிப்புச் சுவையை அறியும் நுகர்மொட்டுகள் இல்லாததால், பூனைகளால் இனிப்புச் சுவையை அறிய இயலாது. மரபணு மற்றத்தினால் இத்திறனை பூனைகள் இழந்துவிட்டன. மற்ற சுவைகளை பூனைகள் அறியும். பூனைகள் இரு மாதங்கள் வரை தமது குட்டிகளைச் சுமக்கும். ஒரு பூனை தமது வாழ்நாளில் 150 குட்டிகள் வரை ஈனும்.

பூனையின் மண்டை ஓடு

வழக்கமான பாலூட்டிகளிலிருந்து பூனையின் மண்டையோடு மாறுபட்டுள்ளது. மிகப்பெரிய கண்டாங்கு குழிகளும் (eye sockets) பலமான மற்றும் சிறப்புவாய்ந்த தாடைகளும் பூனையை மற்ற விலங்குகளிலிருந்து வேறுபடுத்துகிறது[8]:35. தாடையிலுள்ள 35 பற்களும் இறையுணவை கொள்ளும் வகையிலும் மாமிசத்தைக் துண்டாக்கிக் கிழிக்கும் வகையிலும் தகவமைந்துள்ளன. இரண்டு நீளமான கோரைப்பற்களால் இரையின் கழுத்தில் மரணத்தை விளைவிக்கக்கூடிய அழுத்தம் மிகுந்த கடியினை முதுகெலும்புகள் மற்றும் தண்டுவடத்தில் ஏற்படுத்தி துண்டித்து அதனை துளைக்கும் அளவுக்குச் சேதத்தை உண்டாக்குகிறது. இதனால் இறை மீளமுடியாத பக்கவாதத்தால் நிலைகுலைந்து இறக்க நேரிடுகிறது[9].மற்ற பூனையினங்களைக் காட்டிலும் வீட்டுப் பூனைகளுக்குக் குறுகிய இடைவெளி கொண்ட கோரைப்பற்கள் காணப்படுகிறது. இவ்வமைப்பு அது விரும்பி உண்ணும் மிகச்சிறிய முதுகெலும்பு கொண்ட கொறிக்கும் விலங்குகள் (rodents) விலங்குகளை லாவகமாகப் பிடிக்க உதவுகிறது[9] . முன்கடைவாய்ப்பல் மற்றும் முதல் கடைவாய்ப்பல் இரண்டும் இணைந்து வாயின் இருபுறமும் சோடியாக அமைந்து மாமிசத்தைத் துண்டு துண்டாகக் கத்தரிக்கோல் போன்று நறுக்குகின்ற பணியைச் செய்கின்றன. பூனைகள் உணவூட்டத்தில் திறமையானதாக உள்ளன. அவற்றால் பூனைகள் 'சிறிய கடைவாய்ப்பற்களால் உணவை மெல்ல முடியாது என்பதால் இவ்வகையான பற்கள் அமைப்பும் ஊட்டமுறையும் இன்றியமையாததாக இருக்கின்றன, பூனைகள் பெரும்பாலும் உணவினை மென்று திண்பதற்குப் தகுதியானவை அல்ல[8]:37.

ஆரோக்கியம்[தொகு]

சமீபத்திய ஆண்டுகளில் பூனைகளின் சராசரி ஆயுட்காலம் உயர்ந்துள்ளது. 1980 களின் முற்பகுதியில், பூனையின் சராசரி ஆயுட்காலம் 7 வருடங்களாகவிருந்தது. 1995 இல் 9.4 ஆண்டுகள் உயர்ந்து, 2014 இல் 12-15 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. எனினும் பூனைகள் 30 வயது வரை உயிர்வாழ்ந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. உலகின் வயதான பூனை, க்ரீம் பஃப், 38 வயதில் இறந்தது.

வியாதிகள்[தொகு]

தொற்று நோய்கள், ஒட்டுண்ணிகள், காயங்கள் மற்றும் நாட்பட்ட நோய் உள்ளிட்ட பல வகையான சுகாதாரப் பிரச்சினைகள் பூனைகளை பாதிக்கலாம். பல நோய்களுக்குத் தடுப்பூசிகள் கிடைக்கின்றன, மேலும் உள்நாட்டுப் பூனைகளுக்கு வழக்கமாக புழுக்கள் மற்றும் பறவைகள் போன்ற ஒட்டுண்ணிகளை அகற்ற சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. ராடென்டிசைடு, பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் போன்ற வெளிப்படையான ஆபத்துக்களுக்குக் கூடுதலாக, பூனைகள் தங்கள் மனித பாதுகாப்பாளர்களால் பாதுகாப்பாகக் கருதப்படுகிற பல இரசாயன விஷத்தால் பாதிக்கப்படலாம். பூனைகளில் நச்சுத்தன்மையினால் பாதிக்கபடக் காரணம் மிகவும் பொதுவான இரசாயனங்களான எலி பாஷானம் முதலியவை அதற்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.

உணர்வுகள்[தொகு]

புகைப்படக் கருவியின் ஒளி மின்னலை எதிரொளிக்கும் பூனையின் கண்யிலுள்ள டபீட்டம் லூசிடம் tapetum lucidum

பூனைகள் சிறந்த இரவுப்பார்வையைக் கொண்டுள்ளன. குறைந்த அளவிலான ஒளியை டபீட்டம் லூசிடம் என்ற இமைப்பானது கண்ணின் விழித்திகை்குப் பின்னால் குவிப்பதால் குறைந்த அல்லது மங்கலான ஒளியிலும் துள்ளியமான பார்வைத்திறன் கொண்டுள்ளன [10]. இவை மனிதனுக்குப் பார்க்கத் தேவைப்படும் ஒளியில் ஆறில் ஒரு பங்கு ஒளியிலேயே பார்க்கக்கூடிய திறன் படைத்தவை. பூனைகள் சிறந்த கேட்கும் திறனைக் கொண்டுள்ளதுடன் அவற்றால் பரந்த அளவிலான மீத்திறன் கொண்ட ஒலிகளையும் கேட்க முடியும். இவற்றால் மனிதன், நாய் என்பவற்றை விட உயர் சுருதியினாலான ஒலிகளைத் தெளிவாகக் கேட்க முடியும்[11][12].

பூனை வளர்ப்பு[தொகு]

பூனைகள் 10,000 ஆண்டுகளாக மனிதனால் பழக்கப்படுத்தப்படுவதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். முதன் முதலில் ஆப்ரிக்கர்களே பூனைகளை பழக்கப்படுத்தினர். ஆரம்பத்தில் எலிகள் உண்பதற்காகவே பூனைகள் பழக்கப்படுத்தப்பட்டன. பின்னர் அவை மனிதனுடன் பழகும் விதத்தினால் ஈர்க்கப்பட்டு வளர்க்கத் தொடங்கியுள்ளனர்.

இயல்பு[தொகு]

பூனைகள் இயல்பாக மாமிசப்பட்சிகள் ஆகும். சிறிய வகை பாலூட்டிகளை வேட்டையாடுவதில் கைத்தேர்ந்தவை. சிறிய தூரம் மட்டுமே வேகமாக இரையை விரட்டிச் சென்று துரத்தும் திறன் பெற்றவை.

பூனைகள் தனிமை விரும்பிகளாகும். எனவே நாய்கள், சிங்கங்கள் போல் அல்லாமல், புலிகள், சிறுத்தைகளைப் போல இனத்துடனும், மனிதர்களிடமும் தனித்தே இருக்கும். நாய்கள் போன்று சிறப்புக் கவனங்களை பூனைகள் எதிர்பார்ப்பதில்லை. பூனைகள் அதிகம் விளையாடும் திறன் பெற்றவை. அவை விளையாடுவதே அவற்றை வேட்டைக்காரர்களாக மாற்றுகிறது.

பழகும் முறை[தொகு]

பூனைகள் வெகுவாக மனிதனிடம் பழகக்கூடியவை. தனது அன்பினை வெளிப்படுத்த வாலை ஆட்டி, உரசித் தெரியப்படுத்தும். பெயர் சொல்லி அழைத்தால், கொஞ்சினால், சிரித்தால் புரிந்து கொள்ளும் திறன் பூனைகளுக்கு உண்டு. தம்மை வளர்ப்போரின் அருகே அடிக்கடி வந்து படுத்துக் கொள்வதும் உண்டு.

வகைகள்[தொகு]

பூனைகளில் இரண்டு வகைகள் உள்ளன. அவை காட்டுப்பூனை, மற்றும் வீட்டுப்பூனை என்பனவாகும். காட்டுப்பூனை என்பது மாமிசம் மட்டுமே உண்ணும். வீட்டில் வளர்க்கப்படும் வீட்டுப்பூனையானது சைவ உணவையும் உண்ணும்.

பொதுவாக அனைத்து ஆண் பூனைகளும் டாம் என்று அழைக்கப்படுகின்றன, அனைத்து பெண் பூனைகளும் ராணி என்று அழைக்கப்படுகின்றன. பூனைக் குட்டிகள் கிட்டன், கிட்டி, புசிகேட் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றன.

சுத்தம்[தொகு]

பூனையின் நாக்கில் இருக்கும் மொட்டுக்கள் தன்சுத்தம் செய்ய உதவுகின்றன.
பூனையின் நாக்கு விளக்கப் படம்

பூனைகள் மிகுந்த தன்சுத்தம் உடையவையாகும். பூனைகள் தனது ரோமங்களை நக்கி முழுமையாகச் சுத்தம் செய்யும். சுத்தம் செய்யும் போது நாக்கில் ஒட்டிக் கொண்டு வரும் ரோமங்களைப் பந்து போல் வாயில் எடுக்கும் திறன் பெற்றவை பூனைகளாகும்.

உணவு[தொகு]

பூனைகள் மாமிசப் பட்சிகளாகும். வீட்டில் உள்ள பூனைகளுக்கு உணவு சரியான விகிதாச்சாரத்தில் கிடைக்கப் பெற வேண்டும். நாய்கள் உண்ணும் உணவை பூனைகள் சாப்பிடுமேயானால் அதன் பார்வை குறைபடும்.

புகழ் பெற்றவர்களின் பூனைகள்[தொகு]

  • நபிகள் நாயகம் பூனைகளை வளர்த்து வந்தார்.
  • போப் xvi பெனிடிக் பூனையை தன் சகோதரன் போல் வளர்த்துள்ளார்.
  • எர்லைட் ஹெர்மிங்வே என்னும் அமெரிக்கக் கவிஞர் மரபணு குறைபாடுடைய பூனைகளை வள்ர்த்துள்ளார்.அதனால் மரபணு குறைபாடுடைய பூனைகளுக்கு ஹெர்மிங்வே பூனைகள் என்று கூறுவது வழக்கம் ஆனது.
  • முன்னால் அமெரிக்க ஜனாதிபதியான பில்கின்டன் சாக்ஸ் என்று ஒரு பூனை வளர்த்து வந்தார். ஜனாதிபதியின் பிரத்தியேக அறை, பத்திரிக்கையாளர் அறை என எங்கும் செல்லும் வசதியையும் அது பெற்றிருந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Linnaeus, C. (1758). "Felis Catus" (in la). Systema naturae per regna tria naturae: secundum classes, ordines, genera, species, cum characteribus, differentiis, synonymis, locis. 1 (Tenth reformed ). Holmiae: Laurentii Salvii. பக். 42. https://archive.org/details/mobot31753000798865/page/42. 
  2. Wozencraft, W. Christopher (16 November 2005). "Order Carnivora (pp. 532-628)". in Wilson, Don E., and Reeder, DeeAnn M., eds. Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ). Baltimore: Johns Hopkins University Press, 2 vols. (2142 pp.). பக். 534–535. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8018-8221-0. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=14000031. 
  3. Erxleben, J. C. P. (1777). "Felis Catus domesticus". Systema regni animalis per classes, ordines, genera, species, varietates cvm synonymia et historia animalivm. Classis I. Mammalia. Lipsiae: Weygandt. பக். 520–521. https://archive.org/details/iochristpolycerx00erxl/page/520. 
  4. Hartwell, Sarah (2002 – 2011). "Dwarf, Midget and Miniature Cats (Including 'Tea-cup' Cats)". MessyBeast.com. self-published. 27 January 2015 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |year= (உதவி)[self-published source]
  5. 5.0 5.1 Wilson, Julia (2002 – 2008). "Cat World Records". Cat-World.com.au. self-published. 1 August 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 September 2012 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |year= (உதவி)[self-published source]
  6. "Feline Veterinary care by The Boston Cat Hospital/Feline Fast Cats". The Boston Cat Hospital. 10 January 2013 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Domestic Cat". Animal Bytes. SeaWorld Parks and Entertainment. 2011. 17 December 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 14 December 2011 அன்று பார்க்கப்பட்டது.வார்ப்புரு:Tertiary
  8. 8.0 8.1 *Case, Linda P. (2003). The Cat: Its Behavior, Nutrition, and Health. Ames, IA: Iowa State University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8138-0331-4. 
  9. 9.0 9.1 Smith, Patricia; Tchernov, Eitan (1992). Structure, Function and Evolution of teeth. Freund Publishing House Ltd.. பக். 217. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:965-222-270-4. 
  10. Ollivier, F. J.; Samuelson, D. A.; Brooks, D. E.; Lewis, P. A.; Kallberg, M. E.; Komaromy, A. M. (2004). "Comparative Morphology of the Tapetum Lucidum (among Selected Species)". Veterinary Ophthalmology 7 (1): 11–22. doi:10.1111/j.1463-5224.2004.00318.x. பப்மெட்:14738502. 
  11. Heffner, Rickye S. (November 2004). "Primate hearing from a mammalian perspective". The Anatomical Record Part A: Discoveries in Molecular, Cellular, and Evolutionary Biology 281 (1): 1111–1122. doi:10.1002/ar.a.20117. பப்மெட்:15472899. http://psychology.utoledo.edu/images/users/74/Primate%20Hearing%20from%20a%20Mammalian%20Perspective.pdf. பார்த்த நாள்: 20 August 2009. 
  12. Heffner, Henry E. (May 1998). "Auditory awareness". Applied Animal Behaviour Science 57 (3–4): 259–268. doi:10.1016/S0168-1591(98)00101-4. 

வெளியிணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பூனை&oldid=3631534" இருந்து மீள்விக்கப்பட்டது