அசினோனிக்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசினோனிக்சு
புதைப்படிவ காலம்:PlioceneHolocene, 3–0 Ma
Cheetah, Acinonyx jubatus
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
அசினோனிக்சு
சிற்றினங்கள்
  • அசினோனிக்சு அய்ச்சா
  • அசினோனிக்சு இண்டர்மீடியசு
  • அசினோனிக்சு சூபாடசு
  • அசினோனிக்சு பார்தினென்சிசு
வேறு பெயர்கள்
  • சினைலூரசு வாக்னர், 1830
  • சினோபெலிசு லெசன், 1842
  • குபேர் போய்தர்டு, 1842
  • குபர்டா கிரே, 1843
  • குபார்டசு துவெர்னாய், 1834
  • பாராசினோனிக்சு கிரெட்சூய், 1929

அசினோனிக்சு (Acinonyx) என்பது பூனை குடும்பத்தில் உள்ள ஒரு பேரினமாகும். இப்பேரினத்தில் உயிருடன் உள்ள ஒரே ஒரு சிற்றினம் சிவிங்கிப்புலி (அ. சூபாடசு) ஆகும். இது ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் திறந்த புல்வெளிகளில் வாழ்கிறது.[1]

சிறுத்தை போன்ற பூனைகளின் பல புதைபடிவ எச்சங்கள் பிலியோசீன் மற்றும் நடு பிளீசுடோசீனின் பிற்பகுதியில் தோண்டியெடுக்கப்பட்டன.[2] இந்த பூனைகள் சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் காணப்பட்டன. மிராசினோனிக்சு பேரினத்தில் வகைப்படுத்தப்பட்ட பல ஒத்த சிற்றினங்கள், இதே காலகட்டத்தில் வட அமெரிக்காவில் வாழ்ந்தன. இவை பூமா பேரினத்துடன் மிகவும் நெருக்கமாகத் தொடர்புடையதாக இருக்கலாம்.[1]

வகைப்பாட்டியல்[தொகு]

அசினோனிக்சு[3] பேரினம் 1828-ல் ஜோசுவா புரூக்சு என்பவரால் முன்மொழியப்பட்டது.

18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்கும் இடையில், பின்வரும் அசினோனிக்சு சிற்றினங்கள் மற்றும் துணையினங்கள் விவரிக்கப்பட்டுள்ளன:

  • 1777-ல் ஜோஹன் கிறிஸ்டியன் டேனியல் வான் சிரெபர் விவரித்த பெலிசு சூபாட்டசு காம்டே டி பப்பன் மற்றும் தாமஸ் பென்னன்ட் ஆகியோரின் முந்தைய விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டது.[4]
    • 1821-ல் கிரிபித் விவரித்த பெலிசு வெனாட்டிகா இந்திய சிவிங்கிப்புலியின் ஓவியத்தை அடிப்படையாகக் கொண்டது.[5]
    • 1855-ல் பிட்சிங்கரால் சைனைலூரசு சோமெரிங்கி என்பது தெற்கு சூடானில் உள்ள கோர்டோபனிலிருந்து தியோடர் வான் ஹியூக்லின் டியர்கார்டன் ஷான்ப்ரூனுக்கு கொண்டு வரப்பட்ட ஒரு ஆண் சிவிங்கிப்புலி ஆகும்.[6]
    • 1913-ல் ஹில்சைமர் எழுதிய <i id="mwRw">அசினோனிக்சு கெக்கி</i> என்பது பெர்லின் விலங்கியல் பூங்காவில் உள்ள செனிகலில் உள்ள சிவிங்கிப்புலி ஆகும். இதற்கு இந்த மிருகக்காட்சிசாலையின் இயக்குநரின் நினைவாகப் பெயரிடப்பட்டது.[7]

1993ஆம் ஆண்டில், அசினோனிக்சு ஒற்றைத் தொகுதிமரபு உயிரினத் தோற்றத் துணைக் குடும்பமான அசினோனிசினேவில் வைக்கப்பட்டது. மூலக்கூறு தொகுதிப் பிறப்பு பகுப்பாய்வு இதனைப் பூமா பேரினத்தின் சகோதர குழுவாகக் காட்டுகிறது. மேலும் இது இப்போது பெலினே என்ற துணைக் குடும்பத்திற்குள் வைக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, பின்வரும் புதை படிவ அசினோனிக்சு சிற்றினங்கள் விவரிக்கப்பட்டுள்ளன:

  • அ. பார்டினென்சிசு பெரும் சிவிங்கிப்புலி -1828-ல் குரோய்செட் எட் ஜோபர்ட் மூலம் [8]
  • அ. இன்டர்மீடியசு-1954-ல் தேனியசு[9]
  • . ஐச்சா-1997-ல் ஜெராட்சு[10]
  • அ. குர்தெனி-2009-ல் கிறிசுடியன்சென் மற்றும் மசாக்

"லின்க்சியா சிவிங்கிப்புலி " ஆரம்பத்தில் சீனாவில் உள்ள பிலியோசீன் அடுக்குகளிலிருந்து காணப்பட்ட மண்டை ஓட்டின் அடிப்படையில் விவரிக்கப்பட்டது. மேலும் இது மிகவும் பழமையான பேரினத்தின் உறுப்பினராகக் கூறப்பட்டது. 2012ஆம் ஆண்டில், அ. குர்தேனி ஒரு சிற்றினமாகச் செல்லாததாக்கப்பட்டது, ஒப்புவகை என்பது மியோசீன்-வயதுடைய துண்டுகளால் ஆன போலியானது எனத் தீர்மானிக்கப்பட்டது.[11][12]

மேலும் பார்க்கவும்[தொகு]

  • மிராசினோனிக்ஸ் இனத்தைச் சேர்ந்த அமெரிக்க சிறுத்தைகள்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Krausman, P. R.; Morales, S. M. (2005). "Acinonyx jubatus". Mammalian Species (771): 1–6. doi:10.1644/1545-1410(2005)771[0001:aj]2.0.co;2. http://www.science.smith.edu/departments/biology/VHAYSSEN/msi/pdf/i1545-1410-771-1-1.pdf. பார்த்த நாள்: 2 July 2015. 
  2. Hemmer, H.; Kahlke, R.-D.; Keller, T. (2008). "Cheetahs in the Middle Pleistocene of Europe: Acinonyx pardinensis (sensu lato) intermedius (Thenius, 1954) from the Mosbach Sands (Wiesbaden, Hessen, Germany)". Neues Jahrbuch für Geologie und Paläontologie, Abhandlungen 249 (3): 345–356. doi:10.1127/0077-7749/2008/0249-0345. 
  3. Brookes, J. (1828). "Section Carnivora". A catalogue of the Anatomical and Zoological Museum of Joshua Brookes. London: Richard Taylor. பக். 16. https://archive.org/details/b22475886/page/16. 
  4. Schreber, J. C. D. (1777). "Der Gepard". Die Säugthiere in Abbildungen nach der Natur mit Beschreibungen (Dritter Theil). Erlangen: Wolfgang Walther. பக். 392–393. https://digi.ub.uni-heidelberg.de/diglit/schreber1875textbd3/0112/image. 
  5. Griffith, E. (1821). "Felis venatica". General and particular descriptions of the vertebrated animals, arranged conformably to the modern discoveries and improvements in zoology. Order Carnivora. London: Baldwin, Cradock and Joy. https://archive.org/details/generalparticula00grif/page/n149. 
  6. Fitzinger, L. (1855). "Bericht an die kaiserliche Akademie der Wissenchaften über die von dem Herrn Consultatsverweser Dr. Theodor v. Heuglin für die kaiserliche Menagerie zu Schönbrunn mitgebrachten lebenden Thiere". Sitzungsberichte der Kaiserlichen Akademie der Wissenschaften. Mathematisch-Naturwissenschaftliche Classe 17: 242–253. https://archive.org/details/sitzungsbericht171855kais/page/244. 
  7. Hilzheimer, M. (1913). "Über neue Gepparden nebst Bemerkungen über die Nomenklatur dieser Tiere". Sitzungsberichte der Gesellschaft Naturforschender Freunde zu Berlin (5): 283–292. https://archive.org/details/sitzungsberichte1913gese/page/n311. 
  8. Croizet, J. B.; Jobert, A. C. G. (1862). Recherches sur les ossemens fossiles du département du Puy-de-Dôme. Paris: Chez les principaux libraires. 
  9. Thenius, E. (1954). "Gepardreste aus dem Altquartär von Hundsheim in Niederösterreich". Neues Jahrbuch für Geologie und Paläontologie, Monatshefte: 225–238. 
  10. Geraads, D. (1997). "Carnivores du Pliocène terminalde Ahl al Oughlam (Casablanca, Maroc)". Geobios 30 (1): 127–164. doi:10.1016/s0016-6995(97)80263-x. https://www.researchgate.net/publication/280858487. 
  11. Knevitt, O. (2011). "Five Greatest Palaeontology Fakes Of All Time #5: The Linxia Cheetah". Science 2.0. பார்க்கப்பட்ட நாள் 13 January 2013.
  12. Mazák, J. H. (2012). "Retraction for Christiansen and Mazák. A primitive Late Pliocene cheetah, and evolution of the cheetah lineage". Proceedings of the National Academy of Sciences of the United States of America 109 (37): 15072. doi:10.1073/pnas.1211510109. பப்மெட்:22908293. Bibcode: 2012PNAS..10915072.. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசினோனிக்சு&oldid=3621445" இலிருந்து மீள்விக்கப்பட்டது