ஒலிங்கிட்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒலிங்கிட்டோ
Olinguito
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
ப. நெபிலீனா; B. neblina
இருசொற் பெயரீடு
பசாரிசியோன் நெபிலினா
Bassaricyon neblina

ஃகெல்கன், 2013 (Helgen, 2013)

ஒலிங்கிட்டோ (Olinguito) என்பது 2013 ஆம் ஆண்டு கண்டுபிடித்து அறிவியல் முறைப்படி நிறுவப்பட்ட ஒரு புதிய ஊனுண்ணி பாலூட்டி விலங்குஇனமாகும். இவ்விலங்கு தென்னமெரிக்காவில் ஈக்குவெடோர், கொலம்பியா ஆகிய நாடுகளில் உள்ள பனிமூட்டக் காடுகளில் காணப்படுகின்ற இரவில் இரை தேடும் ஒரு சிறிய விலங்கு. இவ்விலங்கின் அறிவியல் பெயர் பசாரிசியோன் நெபிலீனா (Bassaricyon neblina) என்பதாகும். இவ்விலங்கின் பெயர் எசுப்பானிய மொழியில் சிறிய ஒலிங்கோ (olingo) என்பதாகும். இவ்விலங்கு பசாரிசியோன் பேரினத்தைச் சேர்ந்த ஒன்று. இப்பேரினம் "முன்னையநாய்" எனப்பொருள்படும் புரோசியோனிடே (Procyonidae) குடும்பத்தைச் சேர்ந்தது. புரோ என்பது முன்பு என்றும் சியோன் (cyon) என்பது நாய் என்றும் கிரேக்க மொழியில் பொருள்படும். இந்த புரோசியோனிடே குடும்பத்தில் அமெரிக்காவில் மட்டுமே காணப்படும் இராக்கூன் முதலான விலங்குகள் உள்ளன. இந்தப் புதிய விலங்காகிய ஒலிங்கிட்டோவின் கண்டுபிடிப்பை ஆகத்து 15, 2013 அன்று அறிவித்தார்கள்[1][2]

விளக்கம்[தொகு]

இந்த ஒலிங்கிட்டோ விலங்கு ஒலிங்கோ (olingo), கிங்கச்சூ (kinkajou) ஆகிய விலங்குகளில் இருந்து வேறானது. இதன் சராசரி எடை 1.1 கிலோ கிராம். இவ்விலங்கு அனைத்துண்ணி ஆனால் பெரும்பாலும் கனிகளையும், பூச்சிகளையும் தேனையும் உண்கின்றன.[3]. ஒலிங்கிட்டோ தனியாக வாழும், இரவில் இரைதேடும் விலங்காக உள்ளது. இவை தன் காலத்தை மரத்தின் மீதே கழிக்கின்றன.[2][4] இவை ஒரு நேரத்தில் ஒற்றைக் குட்டியை ஈனுவதாகத் தெரிகின்றது[2][4][5]

வாழிடமும் பரவலும்[தொகு]

இந்த உயிரினத்தைத் தென்னமெரிக்காவில் உள்ள ஈக்குவெடோர், கொலம்பியா ஆகியநாட்டுகளில் வடமேற்கே உள்ள பனிமூட்டக் காடுகளில் கண்டுபிடித்துள்ளனர்[1][4][5] இந்த உயிரினம் தற்பொழுது தீவாய்ப்புகள் ஏதும் இல்லாமல் உள்ளது.[1] ஆனால் இவ்விலங்கு வாழக்கூடிய புலத்தில் 40% காடழிப்புகள் ஏற்பட்டுள்ளன.[1][3]

ஒலிங்கிட்டோ வாழிடமும் பரவலும். தென்னமெரிக்காவில் ஈக்குவடோர், கொலம்பியா ஆகிய நாடுகளில் மேற்கே உள்ள மனிமூட்ட மழைக்காடுகளில் வாழ்கின்றன இவை.

கண்டுபிடிப்பு[தொகு]

இக்கண்டுபிடிப்பை ஆகத்து 15, 2013 அன்று சுமித்ஃசோனிய தேசிய இயற்கை வரலாற்றுக் கண்காட்சியகத்தின் பாலூட்டித் தொகுப்பின் பொறுப்பாளர் கிறித்தோஃபர் ஃகெல்கென் என்பாரும், ஒலிங்கோ விலங்கின் சிறப்பறிவாளரான உரோலன்டு கேசு (Roland Kays ) என்பாரும் அவருடைய உடனுழைப்பாளர்களும் அறிவித்தனர்.[1][2][6][7][8]. ஃகெல்கன் சிக்காகோ ஃபீல்டு அருங்காட்சியகத்தில் மறைந்து கிடந்த இந்த விலங்கின் பழைய சேமிப்புகளில் இருந்து மரபணு (டி.என்.ஏ) சோதனைகள் செய்து புதிய விலங்கு என்று உறுதிப்படுத்தினார்[5]

இந்தக் கண்டுபிடிபே கடந்த 35 ஆண்டுகளில் அமெரிக்கக் கண்டங்களில் கண்டுபிடித்த முதல் ஊனுண்ணி வகுப்பைச் சேர்ந்தது[குறிப்பு 1][1][2][2] இந்த உயிரினத்தை முன்னரே பொதுவில் காட்சிப்படுத்தப் பட்டிருந்த பொழுதும், பல முறை பலரால் காணப்பட்டிருந்தபோதும் இதனை அறியாதிருந்ததற்கான காரணம், இதனை இன்னொரு விலங்கான ஒலிங்கோ என்பதாகக் கருதிக் குழப்பம் ஏற்பட்டு இருந்தது. ஓர் எடுத்துக்காட்டு, இரிங்கெரல் (Ringerl) என்று பெயரிட்டு அழைக்கப்பட்ட ஓர் ஒலிங்கிட்டோ வாசிங்டன் டி.சி தேசிய உயிர்க்காட்சியகத்தில் ஓராண்டாகக் காட்சிப்படுத்தப் பட்டு இருந்தது. வேறு பல உயிர்க்காட்சியகங்களுக்கும் இரவலாக உலா வந்தது[2][9] ஆய்வாளர்கள் இது வேறு தனியான உயிரினம் என்று அறியாமல் ஒலிங்கோவுடன் சேர்த்து இனப்பெருக்கம் செய்ய முயன்று தோற்றனர்[2]. இரிங்கெரல் 1976 இல் இறந்து போனது[10]

குறிப்புகள்[தொகு]

 1. The olinguito is omnivorous: only some Carnivoran species are carnivores. (Additional explanation in the linked Wikipedia articles, including Carnivoran diet specializations.)

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Stromberg, Joseph (August 15, 2013). "For the First Time in 35 Years, A New Carnivorous Mammal Species is Discovered in the American Continents". Smithsonian Magazine. Archived from the original on ஜனவரி 9, 2014. பார்க்கப்பட்ட நாள் August 15, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 Roland Kays. Press conference at North Carolina Museum of Natural Sciences. Livestream (video). August 15, 2013 [1] பரணிடப்பட்டது 2014-05-08 at the வந்தவழி இயந்திரம்
 3. 3.0 3.1 Landau, Elizabeth (August 15, 2013). "New cute furry mammal species discovered". CNN. பார்க்கப்பட்ட நாள் August 15, 2013.
 4. 4.0 4.1 4.2 Helgen, Kristofer M.; Pinto, Miguel; Kays, Roland; Helgen, Lauren; Tsuchiya, Mirian; Quinn, Aleta; Wilson, Don; Maldonado, Jesus (2013). "Taxonomic revision of the olingos (Bassaricyon), with description of a new species, the Olinguito". ZooKeys 324: 1. doi:10.3897/zookeys.324.5827. 
 5. 5.0 5.1 5.2 O'Brien, Jane (August 15, 2013). "Olinguito: 'Overlooked' mammal carnivore is major discovery". BBC News. பார்க்கப்பட்ட நாள் August 15, 2013.
 6. Kim, Meeri (16 August 2013). "Smithsonian unearths a new species of mammal: The olinguito". Washington Post. http://www.washingtonpost.com/national/health-science/smithsonian-unearths-a-new-species-of-carnivore---the-olinguito/2013/08/15/2fb13b6c-051a-11e3-a07f-49ddc7417125_story.html. பார்த்த நாள்: 16 August 2013. 
 7. "New animal discovered in Andes". WRAL. http://www.wral.com/news/local/video/12780040. பார்த்த நாள்: 16 August 2013. 
 8. "A new mammal. Peekaboo". The Economist. August 17, 2013. பார்க்கப்பட்ட நாள் August 15, 2013.
 9. Sample, Ian. Carnivore 'teddy bear' emerges from the mists of Ecuador. Guardian. Thursday 15 August 2013 [2]
 10. Borenstein, Seth (August 15, 2013). "Adorable New Mammal Species Found 'In Plain Sight'". ABC News. http://abcnews.go.com/Technology/wireStory/adorable-mammal-species-found-plain-sight-19967921. பார்த்த நாள்: August 15, 2013. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலிங்கிட்டோ&oldid=3547015" இலிருந்து மீள்விக்கப்பட்டது