கடல் சிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கடல்சிங்கம்
புதைப்படிவ காலம்:Late Oligocene-Holocene
Sealion052006.JPG
California sea lion (Zalophus californianus)
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: ஊனுண்ணி
துணைவரிசை: கலிபோர்னியா
பெருங்குடும்பம்: பின்னிபேடியா
குடும்பம்: Otariidae
துணைக்குடும்பம்: Otariinae
Genera

Eumetopias
Neophoca
Otaria
Phocarctos
Zalophus

கடல் சிங்கங்கள் (Sea lions) என்பது கடல் வாழ் துடுப்புகாலிகள் குடும்பத்தைச் சேர்ந்த பாலூட்டிகள் ஆகும். கடல் சிங்கங்கள் இரண்டு சிறிய வெளிக் காதுகள், துடுப்பு போன்ற நீண்ட நான்கு கால்கள், தடித்த மேல் தோல், அடர்த்தியான சிறிய முடிகளும், கொழுப்பு அடர்ந்த உடலும் கொண்ட ஊனுண்ணிகளாகும். துடுப்பு போன்ற கால்களால் கடல் சிங்கங்கள் கடல் நீரில் நன்கு நீந்த இயலும். இதன் முக்கிய இரைகள் கடல் மீன்கள், மெல்லுடலிகள் மற்றும் நண்டுகளாகும்.

கடல்சிங்கங்கள் வட துருவம் மற்றும் தென் துருவக் கடற்கரைகளிலும், வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலிலும் மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா, தெற்கு நியூசிலாந்து கடற்கரைகளிலும் காணப்படுகிறது. [1] கடல் சிங்கங்களில் வாழ்நாள் 20-30 ஆண்டுகளாகும்.

ஆண் கடல் சிங்கத்தின் அதிக பட்ச எடை 300 கிலோ கிராம், நீளம் 8 அடியாகும். பெண் கடல் சிங்கத்தின் அதிக பட்ச எடை 100 கிலோ கிராம், நீளம் 6 அடியாகும். ஸ்டெல்லர் வகை கடல் சிங்கத்தின் அதி கூடிய எடை 1000 கி கி., மற்றும் நீளம் 10 அடியாகும். கடல் சிங்கங்கள் ஒரே நேரத்தில் தன் உடல் எடையில் 5-8% (15–35 lb (6.8–15.9 kg)) வரையிலான உணவை உண்ணக்கூடியது.

ஸ்டெல்லார் கடல் சிங்கங்கள், அலாஸ்கா

வெளிப்புற காதுகள் கொண்ட கடல்சிங்கங்களின் குடும்பத்தில் கடல்நாய்கள் மற்றும் நீண்ட தந்தம் போன்ற இரண்டு பற்களைக் கொண்ட பனிக்கடல் யானை அடங்கியுள்ளது.[2] கடல் சிங்கங்கள் சனவரி முதல் மார்ச் முடிய உள்ள காலத்தில் கடற்கரைகளில் குட்டியிடுகிறது. உலகில் தற்போது 1,65,000 கடல் சிங்கங்கள் இருப்பதாக கணக்கிட்டுள்ளனர்.

மனிதனுடான உறவுகள்[தொகு]

வித்தை காண்பிக்கும் கடல் சிங்கங்கள், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா

20ஆம் நூற்றாண்டின் நடுவில் வேட்டைக்காரர்களால் பெருமளவு கடல் சிங்கங்கள் கொல்லப்பட்டது.[3] தற்போது அனைத்து நாடுகளும் கடல் சிங்கங்களை வேட்டையாடுவதை தடை செய்துள்ள போதும், சுற்றுச் சூழல் காரணமாக கடல் சிங்கங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. உலகில் பல நாடுகளில் கடல் சிங்கங்களுக்கு விளையாட்டு பயிற்சிகள் வழங்கி, காட்சிக் கூடங்களில் மக்கள் முன்னிலையில் வித்தை காட்டுகிறார்கள். கடலில் நீந்தும் மனிதர்களை கடல் சிங்கங்கள் தாக்குவதில்லை.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளின் சுற்றுலாத்துறை கடல் சிங்கங்களால் வளர்ந்து வருகிறது.

படக்காட்சியகம்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "California Sea Lion – SeaWorld Info Book". SeaWorld. பார்த்த நாள் 26 December 2013.
  2. Wynen, L.P.; Goldsworthy, SD; Insley, SJ; Adams, M; Bickham, JW; Francis, J; Gallo, JP; Hoelzel, AR et al. (2001). "Phylogenetic relationships within the eared seals (Otariidae: Carnivora): implications for the historical biogeography of the family". Mol. Phylog. Evol. 21 (2): 270–284. doi:10.1006/mpev.2001.1012. பப்மெட் 11697921. 
  3. Zenteno, Lisette; Borella, Florencia; Otero, Julieta Gómez; Piana, Ernesto; Belardi, Juan Bautista; Borrero, Luis Alberto; Saporiti, Fabiana; Cardona, Luis et al. (1 June 2015). "Shifting niches of marine predators due to human exploitation: the diet of the South American sea lion (Otaria flavescens) since the late Holocene as a case study". Paleobiology 41 (3): 387–401. doi:10.1017/pab.2015.9. ISSN 1938-5331. 

மேல் வாசிப்பிற்கு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்_சிங்கம்&oldid=2115576" இருந்து மீள்விக்கப்பட்டது