பர்மிய தரைக்கரடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பர்மிய தரைக்கரடி
Burmese ferret badger.png
ஜனோவா தேசிய அருங்காட்சியகத்தில் ஏற்றப்பட்ட பர்மிய தரைக்கரடி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: கார்னிவோரா
குடும்பம்: மசுடெல்லிடே
பேரினம்: மெலோகேலே
இனம்: மெ. பெர்சோனாடா
இருசொற் பெயரீடு
மெலோகேலே பெர்சோனாடா
கிலேயர், 1831
Burmese Ferret-badger area.png
பர்மிய தரைக்கரடி காணப்படும் இடங்கள்

பர்மிய தரைக்கரடி ஒரு ஊனுண்ணும் பாலூட்டி ஆகும். இது பெரும்பாலும் தரைக்கரடி என்றும் அழைக்கப்படுகிறது.

விளக்கம்[தொகு]

பர்மிய தரைக்கரடியின் உடல் நீளம் 35–40 சென்டி மீட்டர் (14–16 அங்குலம்) ஆகும். இதன் வால் நீளம் 15–21 சென்டி மீட்டர் (5.9–8.3 அங்குலம்) நீளமுடையது. உடல் எடையானது 1.5 முதல் 3 கிலோ கிராம் (3.3–6.6 பவுண்டு) வரை இருக்கும். இதனுடைய உடல் உரோமங்கள் பழுப்பு முதல் அடர் பழுப்பு வரை, வெள்ளை முதுகுப் பட்டையுடன் காணப்படும். முகம் கருப்பு மற்றும் வெள்ளை திட்டுகளுடன் காணப்படும். இது ஒவ்வொரு கரடிகளுக்கிடையே வேறுபடும். வாலின் பின்பகுதி வெண்மையாக இருக்கும்.[2]

துணையினங்கள்[தொகு]

மூன்று துணையினங்கள் இச்சிற்றினத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவை:[2]

  1. மெ. பெ. பெர்சோனாடா, வடகிழக்கு இந்தியா மற்றும் வங்காளதேசம் முதல் தெற்கு மியான்மர் மற்றும் தாய்லாந்து வரை
  2. மெ. பெ. நிபாலென்சிசு, நேபாளம்
  3. மெ. பெ. பியர்ரி, கம்போடியா, தெற்கு சீனா, லாவோஸ் மற்றும் வியட்நாம்.

வெளி இணைப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Melogale personata". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008. Database entry includes a brief justification of why this species is of data deficient
  2. 2.0 2.1 Lariviére, S. & Jennings, A. P. (2009). Family Mustelidae (Weasels and Relatives). In: Wilson, D. E., Mittermeier, R. A., (Hrsg.). Handbook of the Mammals of the World. Volume 1: Carnivores. Lynx Edicions, 2009. ISBN 978-84-96553-49-1


"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்மிய_தரைக்கரடி&oldid=3490486" இருந்து மீள்விக்கப்பட்டது