உள்ளடக்கத்துக்குச் செல்

பல்லா பூனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பல்லா பூனை
Pallas's cat[1]
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பெலினே
பேரினம்:
ஓட்டோகோலோபசு

பிராண்ட்டி, 1841
இனம்:
ஓ. மேனுல்
இருசொற் பெயரீடு
ஓட்டோகோலோபசு மேனுல்
(பல்லாசு, 1776)
பல்லா பூனை வாழும் பகுதி
வேறு பெயர்கள்

பெலிசு மேனுல்

பல்லா பூனை (Pallas's cat ) என்பது ஒரு சிறிய காட்டுப் பூனை ஆகும். இது மத்திய ஆசியாவில் காணப்படுகிறது. இவை வாழ்விடம் சீரழிவு, வேட்டையாடுதல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அச்சுறு நிலையை அண்மித்த இனம் என்று 2002 முதல் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் அறிவித்துள்ளது.[1] இந்தியாவில் லடாக், ஜம்மு காஷ்மீர் போன்ற பகுதிகளில் காணப்படுகிறது.

பல்லா பூனையின் முகம்

பண்புகள்

[தொகு]

பல்லா பூனைகள் வீட்டுப் பூனை அளவு உள்ளது. இதன் தலை முதல் உடல் வரை 46 முதல் 65 செமீ (18 முதல் 26 அங்குலம்) நீளமுடையது. வாலின் நீளம் 21 முதல் 31 செமீ (8.3 - 12.2 அங்குலம்) நீளமுடையது. இதன் எடை 2.5 முதல் 4.5 கி.கிராம் (5.5 -9.9.பவுண்டு) ஆகும். இதற்கு அடர்த்தியான நீண்ட வாலும், வால் முழுக்க கருப்பு வளையங்களும், முனையில் கொத்தான கருப்பு முடியும் இருக்கும். இதன் காதுகள் சிறியன. முகத்திலும், உடலின் பின் புறமும் உள்ள ஒரு இணைப் பட்டைகள் இதன் தனித்தன்மையினை காட்டுகிறது. இது சிறிய பாலூட்டிகள், பறவைகள் போன்றவற்றை உண்ணும். இந்த பூனைகள் பாறைகள் மிகுந்த பகுதியில் வாழ்வதற்கு இதன் நிறம் துணை செய்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Ross, S., Barashkova, Y., Farhadinia, M. F., Appel, A., Riordan, P., Sanderson, J. & Munkhtsog, B. (2015). "Otocolobus manul". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2015.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். {{cite web}}: Invalid |ref=harv (help)CS1 maint: multiple names: authors list (link)


"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லா_பூனை&oldid=3445611" இலிருந்து மீள்விக்கப்பட்டது