பாலைவன நரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலைவன நரி
விர்சீனியா விலங்குப் பூங்காவில் உள்ள ஒரு பாலைவவன நரி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: ஊனுண்ணி
குடும்பம்: நாய்க் குடும்பம்
பேரினம்: நரி'
இனம்: பாலைவன நரி
வாழிடம்

பாலைவன நரி (Fennec fox) என்பது பாலைவனத்தில் வாழும் நரி இனம் ஆகும். இது சகாரா, சினாய் தீபகற்பம், அரவா பாலைவனம் மற்றும் அரேபியப் பாலைவனம் ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றது.[1] இது நாய்க்குடும்பத்தில் உள்ள இனங்கள் அனைத்திலும் மிகச்சிறிய உருவுடையதாகும்.[2]

பாதுகாப்பு[தொகு]

பாலைவன நரி, அழிந்து வரும் உயிரினங்களில் காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் பன்னாட்டு வர்த்தகம் பற்றிய மாநாடுபின் இணைப்பு II-ல் பட்டியலிடப்பட்டுள்ளது. இது மொராக்கோவில் (மேற்கு சகாரா உட்பட), அல்சீரியா, தூனிசியா மற்றும் எகிப்தில் பாதுகாக்கப்படுகிறது, இங்கு இது பல பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.[3]

கலாச்சார சித்தரிப்புகள்[தொகு]

பாலைவன நரி அல்சீரியாவின் தேசிய விலங்கு ஆகும்.[4] இது அல்சீரியா தேசிய கால்பந்து அணியின் புனைப்பெயராகவும் உள்ளது ("லெசு பெனெக்சு").[5]

"A greyscale sketch of a group of long eared foxes on a rocky outcrop in a desert. There is a crumbling brick building to the left and two of the foxes are on lookout."
"குசுடாவ் முட்செல், 1876-ல் வரைந்த பாலைவன நரிகளின் ஓவியம்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலைவன_நரி&oldid=3615961" இருந்து மீள்விக்கப்பட்டது