கோட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கோட்டி
Coati
White-nosed Coati Nasua narica
White-nosed Coati Nasua narica
காப்பு நிலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு பாலூட்டி
வரிசை: ஊனுண்ணி
குடும்பம்: Procyonidae
பேரினம்: Nasua and Nasuella
Range map

கோட்டி பாலூட்டி வகையைச் சேர்ந்த ஊனுண்ணும் ஒரு விலங்கு. இவை பல மணி நேரங்களை இரை தேடிச் செல்வதிலேயே செலவிடும். பல வகையான உணவு வகைகளை உண்ணும். புழுக்கள், பல்லிகள், சிலந்திகள், எலிகள், பழங்கள், ஏன் பறவைகளின் முட்டைகள் என எல்லாவற்றையும் கபளீகரம் செய்கின்றன.


இந்த கோட்டிகள், இரவில் நடமாடும் ஊனுண்ணியான ரக்கூன் குடும்பத்தைச் சேர்ந்தவை. ஆனால், இதன் உடலும் வாலும் கொஞ்சம் நீளம். இதன் மூக்கு நீளமாக இருந்தாலும் வளைந்துகொடுக்கும் தன்மையுடையது. இதன் உடல் சுமார் 66 சென்டிமீட்டர் நீளம் என்றால் அதன் வால் இன்னொரு 66 சென்டிமீட்டர் நீளமுடையது. இது ஒரு வெப்பமண்டல பாலூட்டி. பொதுவாக தென்மேற்கு அமெரிக்காவிலிருந்து வட ஆர்ஜெண்டீனா வரையுள்ள பகுதிகளில் காணப்படுகிறது.


பெண் கோட்டிகள் கூட்டம் கூட்டமாக செல்லும். ஒவ்வொரு கூட்டத்திலும் சுமார் 20 கோட்டிகள் இருக்கும். ஆண் கோட்டிகளோ தனிமை விரும்பிகள். இனப் பெருக்க காலத்தின்போது ஓர் ஆண் கோட்டி பெண் கூட்டத்திற்குள் புகுந்து கொள்ளும். சினைக் கோட்டிகளெல்லாம் இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு மரங்களில் கூடு கட்ட கிளம்பிடும். ஒவ்வொரு பெண் கோட்டிக்கும் மூன்று அல்லது நான்கு குட்டிகள் பிறக்கும். பிரவசம் முடிந்து ஆறு வாரங்களுக்குப் பிறகு அம்மா கோட்டிகள் குட்டிகளைக் கூட்டிக் கொண்டு பழைய கூட்டத்துடன் சேர்ந்து கொள்ளும். புசுபுசுவென்று இருக்கும் இந்தக் குட்டி கோட்டிகள் பார்ப்பதற்கு பந்து உருண்டு வருவது போல் காட்சியளிக்கும்.


காடுகளில் உணவு தேடித் திரியும்போது இந்த கோட்டிகள் எப்போதும் மோப்பம் பிடித்துகொண்டு மண்ணை தோண்டிக்கொண்டும் இருக்கும். இதனால் விவசாயிகளுக்கு இவற்றால் மிகவும் இடையூறு இருக்கும். சோளக் காடுகளும் கோழி பண்ணைகளும் இவற்றினால் இலகுவில் அழிக்கப்படும். வேட்டைக்காரர்களையும் இவை இலகுவில் ஏமாற்றிவிடும். இந்தத் தந்திரமான பிராணிகள் வேட்டைக்காரர்களைப் பார்த்தவுடன் மரப்பொந்துகளில் புகுந்துவிடும். அப்படி முடியாவிட்டால் துப்பாக்கி சத்தம் அல்லது கைதட்டும் சத்தம் கேட்டவுடன் கீழே விழுந்து செத்துவிட்டது போல் நடிக்கும். அதை எடுத்து செல்ல வேட்டைக்காரன் கிட்டே வருவதற்குள் ஓடிவிடும்![மேற்கோள் தேவை]

மேற்கோள்கள்[தொகு]

  1. Chundawat, R.S., Habib, B., Karanth, U., Kawanishi, K., Ahmad Khan, J., Lynam, T., Miquelle, D., Nyhus, P., Sunarto, Tilson, R. & Sonam Wang (2008). Panthera tigris. 2008 சிவப்புப் பட்டியல். ஐயுசிஎன் 2008. Retrieved on 9 October 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டி&oldid=1553069" இருந்து மீள்விக்கப்பட்டது