பாராடாக்சூரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாராடாக்சூரசு[1]
Paradox hermaph 060924 ltn.jpg
ஆசிய மரநாய்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: கார்னிவோரா
குடும்பம்: விவேரிடே
பேரினம்: பாராடாக்சூரசு
சிற்றினங்கள்

அட்டவணையினை காண்க

Paradoxurus range.png
பாராடாக்சூரசு பரம்பல்

பாராடாக்சூரசு (Paradoxurus) என்பது மூன்று மரநாய்களை உள்ளடக்கிய பாலூட்டிப் பேரினம் ஆகும். இவை விவேரிட் குடும்பத்தினைச் சார்ந்தது என பிரெடரிக் குவியெர் 1822-ல்[2] முதலில் விவரித்தார். பாராடாக்சூரசு சிற்றினங்கள் அகன்ற தலையுடன், நாசித்துளையினைச் சுற்றி பெரிய அளவிலான முடியில்லா பகுதியினைக் கொண்ட முகவாய் நடுவில் ஆழமாக வரிப்பள்ளத்துடன் காணப்படும். இவற்றின் பெரிய காதுகள் நுனியில் வளைந்து காணப்படும். வால் கிட்டத்தட்டத் தலை மற்றும் உடலைப் போலவே நீளமானது.

ஆசிய மரநாய், பொன்னிற மரநாய் மற்றும் பழுப்பு புனுகுப்பூனை ஆகியவை இந்தப் பேரினத்தின் கீழ் வரும் மூன்று சிற்றினங்கள் ஆகும்.[1]

சிறப்பியல்புகள்[தொகு]

பாராடாக்சூரசு சிற்றினங்கள் ஒரு பரந்த தலை, ஒரு பெரிய முகவாய், குறுகிய முகவாயின் நடுவில் ஆழமான பள்ளங்களுடன் கூடியன. இவற்றின் பெரிய காதுகள் நுனியில் வளைந்து காணப்படும். உட்புற முகடுகளும் பர்சேகளும் நன்கு வளர்ந்தவை. மண்டை ஓடு குறிப்பிடத்தக்கத் தசை வடிவத்தை வெளிப்படுத்துகிறது. இதனுடைய பல் சூத்திரம் . ஆகும். வால் கிட்டத்தட்டத் தலை மற்றும் உடலை நீளத்திலும், சில சமயங்களில் உடலைவிட மிகவும் நீளமாகவும், பின் பாதத்தைப் போல ஆறு மடங்கு நீளம் வரை இருக்கும்.

வகைப்பாட்டியல்[தொகு]

2005ஆம் ஆண்டு வரை, இந்த பேரினமானது தென்கிழக்காசியாவைச் சேர்ந்த மூன்று சிற்றினங்களை உள்ளடக்கியதாக வரையறுக்கப்பட்டது:[1]

பெயர் படம் பரம்பல்
ஆசிய மரநாய், பா. கெர்மாப்ரோடிடசு (பாலாசு, 1777) Asian Palm Civet (14157389395).jpg Asian Palm Civet area.png
பொன்னிற மரநாய், பா. ஜீலோனென்சிசு பாலாசு, 1778 Paradoxurus zeylonensis 2.jpg இலங்கை
பழுப்பு பனை புனுகுப்பூனை, பா. ஜெர்டோனி பிளான்போர்டு, 1885 [3] Brown palm civet.jpg மேற்கு தொடர்ச்சி மலைகள், இந்தியா

2009ஆம் ஆண்டில், இலங்கையில் மட்டுமே வாழக்கூடிய அகணிய உயிரிகளான பொன்னிற மரநாய் (பா. ஆரியசு, குவியர், 1822), இலங்கை பழுப்பு பனை புனுகுப்பூனை (பா. மொன்டானசு, கெலார்ட், 1852) மற்றும் தங்க உலர் மண்டல பனை புனுகுப்பூனை (பா. செடெனோசெப்பாலசு, குரோவெசு மற்றும் பலர், 2009), இதில் சேர்க்கப் பரிந்துரைக்கப்பட்டது.[4] ஆனால் அடுத்தடுத்த ஆய்வில், மிகக் குறைந்த மரபணு வேறுபாடு மற்றும் பொன்னிற மரநாயில் புவியியல் சார்ந்த அமைப்பு காணப்படாததால் முன்மொழியப்பட்ட கருத்து ஆதரவு பெறவில்லை.[5] உருவவியல் தரவுகளின் ஒப்பீடு, ஆசியப் பனை மரநாய் மூன்று முக்கிய கிளைகளை உள்ளடக்கியது. இவை தனித்தனி சிற்றினங்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும். அதாவது இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் ஒன்று (ஆசிய மரநாய், பாராடாக்சூரசு கெர்மாப்ரோடிடசு சென்சு சிடிக்டோ), சுமத்திரா, சாவகம் மற்றும் பிற சிறிய தீவுகளில் காணப்படுவது (பாராடாக்சூரசு முசங்கா), மற்றும் பிலிப்பைன்ஸ் மற்றும் மெந்தாவாய் தீவுகள் பதிலாட்புலத்தில் காணப்படுவது (பாராடாக்சூரசு பிலிப்பீன்சு).[5] இருப்பினும், மரபணு தரவு சிற்றினங்கள் நிலை வேறுபாட்டை ஆதரிக்கவில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Wozencraft, W. Christopher (16 November 2005). "Order Carnivora (pp. 532-628)". in Wilson, Don E., and Reeder, DeeAnn M., eds. Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ). Baltimore: Johns Hopkins University Press, 2 vols. (2142 pp.). பக். 550–551. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8018-8221-0. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=14000316. 
  2. Cuvier, F. (1822). "Du genre Paradoxure et de deux espèces nouvelles qui s'y rapportent". Mémoires du Muséum d'Histoire Naturelle Paris 9: 41–48. https://archive.org/stream/mmoiresdumus91822mus#page/n55/mode/2up. 
  3. Blanford, W. T. (1885). "A Monograph of the Genus Paradoxurus, F. Cuvier". Proceedings of the Zoological Society of London 53 (4): 780–808. doi:10.1111/j.1096-3642.1885.tb02921.x. https://archive.org/stream/proceedingsofgen85zool#page/802/mode/1up. 
  4. Groves, C. P.; Rajapaksha, C.; Mamemandra-Arachchi, K. (2009). "The taxonomy of the endemic golden palm civet of Sri Lanka". Zoological Journal of the Linnean Society 155: 238–251. doi:10.1111/j.1096-3642.2008.00451.x. http://www.lakdasun.org/forum/doc_base/endemic_golden_palm_civet_of_sri_lanka.pdf. பார்த்த நாள்: 2021-12-21. 
  5. 5.0 5.1 Veron, G.; Patou, M.-L.; Tóth, M.; Goonatilake, M.; Jennings, A. P. (2015). "How many species of Paradoxurus civets are there? New insights from India and Sri Lanka". Journal of Zoological Systematics and Evolutionary Research 53 (2): 161–174. doi:10.1111/jzs.12085. https://www.researchgate.net/publication/267696617. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாராடாக்சூரசு&oldid=3490027" இருந்து மீள்விக்கப்பட்டது