ஜெதெப்பிரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜெதெப்பிரே
Djedefra, Radjedef, Ratoises,[1] Rhampsinit, Rhauosis[2]
ஜெதப்பிரேவின் தலைச்சிற்பம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 2566 - 2558, (8 ஆண்டுகள்), நான்காம் வம்சம்
முன்னவர்கூபு
பின்னவர்காப்ரா
துணைவி(யர்)2
பிள்ளைகள்6
தந்தைகூபு
அடக்கம்ஜெதெப்பிரே பிரமிடு, அபு ரவாஷ், கீசா, வடக்கு எகிப்து[3]
நினைவுச் சின்னங்கள்ஜெதெப்பிரே பிரமிடு


ஜெதப்பிரே (Djedefre (also known as Djedefra and Radjedef) பண்டைய எகிப்தின் பழைய இராச்சியத்தை ஆண்ட நான்காம் வம்சத்தின் மூன்றாம் பார்வோன் ஆவார். இவர் கூபுவிற்குப் பின்னர் எகிப்தின் பழைய இராச்சியத்தை கிமு 2566 முதல் 2558 முடிய 8 ஆண்டுகள் ஆண்டார். இவர் சூரியக் கடவுளான இராவின் மகன் எனப்பொருள்படும் படியாக சா-இரா என்ற அரசப் பட்டப் பெயரை அறிமுகப்படுத்தினார். இவர் தனது கல்லறைக்கான பிரமிடை கீசா நகரத்திற்கு வடக்கே எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அபு ரவாஷ் எனும் நகரத்தில் ஜெதெப்பிரே பிரமிடு கட்டினார். கல்லறையில் இவர் தனது பட்டத்து இராணி இரண்டாம் ஹெடேப்பியரசின் உருவத்தை ஸ்பிங்ஸ் வடிவத்தில் அமைத்தார்.

ஜெதப்பிரே தனது பெயரையும், பட்டப் பெயர்களையும் பொறித்த சேக்தா சிலை
அபிதோஸ் மன்னர்கள் பட்டியலில் இரா-ஜெதப்பிரேவின் பெயர்
கருங்கல்லில் ஜெதப்பிரேவின் தலைச்சிற்பம்


இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kim Ryholt: The political Situation in Egypt during the second intermediate Period: c. 1800 - 1550 B.C., Museum Tusculanum Press, Copenhagen 1997, ISBN 87-7289-421-0; William Gillian Waddell: Manetho (The Loeb classical Library)
  2. Alan B. Lloyd: Herodotus, book II.
  3. The riddle of the Spinx

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Djedefra
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெதெப்பிரே&oldid=3280980" இருந்து மீள்விக்கப்பட்டது