நான்காம் அர்சினோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நான்காம் அர்சினோ
Jacopo Tintoretto - The Liberation of Arsinoe - WGA22667.jpg
அர்சினோவின் விடுதலைச் சித்திரம், ஆண்டு 1555–1556 - ஓவியர் ஜோகோபோ தின்தோரெத்தோ
பண்டைய எகிப்தின் தாலமி வம்ச இராணி
ஆட்சிக்காலம்கிமு 48
பனிரெண்டாம் தாலமியுடன் (டிசம்பர் கிமு 48 – 47)
முன்னையவர்பதிமூன்றாம் தாலமி மற்றும் ஏழாம் கிளியோபாற்றா
பின்னையவர்பதிநான்காம் தாலமி மற்றும் ஏழாம் கிளியோபாற்றா
பிறப்புbetw. கிமு 68–63
அலெக்சாந்திரியா, கீழ் எகிப்து
இறப்புகிமு 41
எபேசஸ், தற்காலத் துருக்கி
புதைத்த இடம்
அரசமரபுதாலமி
தந்தைபனிரெண்டாம் தாலமி
தாய்அறியப்படவில்லை

நான்காம் அர்சினோ (Arsinoë IV), எலனியக் காலத்தில் பண்டைய எகிப்தை ஆண்ட தாலமி வம்சத்தின் இராணி ஆவார். நான்காம் அர்சினோ தாலமி மன்னர் பனிரெண்டாம் தாலமியின் 6 குழந்தைகளில் நான்காவது குழந்தையும், இளைய மகளும் ஆவார்.[1][2][3]

எகிப்தில் நிலவிய உள்நாட்டுப் போரினால் ஏழாம் கிளியோபாற்றா, எகிப்தை விட்டு வெளியேறிதால், எகிப்திய பார்வோன் பதிமூன்றாம் தாலமி தனது மற்றொரு சகோதரியும், மனைவியுமான நான்காம் அர்சினோவுடன் எகிப்தை கிமு 48 – 47 முடிய ஆண்டார்.

வடக்கு எகிப்தில் உள்ள அலெக்சாந்திரியாவை, கிமு 47ல் ஏழாம் கிளியோபாற்றா உதவியுடன், உரோமைப் பேரரசர் ஜுலியஸ் சீசர் தலைமையிலான கிரேக்கப் படைகள் முற்றுகை இட்ட போது, நான்காம் அர்சினோ போர்க் கைதியாக பிடிக்கப்படடு, உரோம் நகரத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் நான்காம் அர்சினோ தற்கால துருக்கியின் எபேசஸ் நகரத்திற்கு நாடு கடத்தப்பட்டார். இவரது கல்லறை எபேசஸ் நகரத்தில் உள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Arsinoe IV
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்காம்_அர்சினோ&oldid=3588669" இருந்து மீள்விக்கப்பட்டது