ஆய், பார்வோன்
ஆய் | |
---|---|
ஆய் | |
![]() துட்டன்காமனின் வாய்திறப்புச் சடங்கில், சிறுத்தைத் தோல் உடுத்தி, நீல நிற மணிமகுடம் சூடிய எகிப்திய பார்வோன் ஆய் | |
எகிப்தின் பாரோ | |
ஆட்சிக்காலம் | கிமு 1323–1319 அல்லது கிமு 1327–1323 , எகிப்தின் பதினெட்டாம் வம்சம் |
முன்னவர் | துட்டன்காமன் |
பின்னவர் | ஹொரெம்ஹெப் |
| |
துணைவி(யர்) | தேயு |
பிள்ளைகள் | நெஃபர்டீட்டீ |
இறப்பு | கிமு 1319 அல்லது 1323 |
அடக்கம் | மன்னர்களின் சமவெளியில் மேற்கில், கல்லறை எண் 23 |
நினைவுச் சின்னங்கள் | அமர்னாவின் தெற்கு குவிமாடம் |
ஆய் (Ay), பண்டைய எகிப்தின் புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட பதினெட்டாம் வம்சத்தின் இறுதி பார்வோனுக்கு முந்திய பார்வோன் ஆவார். ஆய் பண்டைய எகிப்தை கிமு 1323–1319 அல்லது கிமு 1327– அல்லது கிமு 1323 வரை 4 ஆண்டுகள் மட்டுமே ஆண்டார்.[1]ஆய்யின மகளும், பார்வோன் அக்கெனதெனின் பட்டத்தரசியுமான புகழ்பெற்ற நெஃபர்டீட்டீ எகிப்தை ஆண்டார்.
வரலாறு[தொகு]
எகிப்தின் பதினெட்டாம் வம்சத்தின் இறுதி இரு மன்னர்களான ஆய் மற்றும் ஹொரெம்ஹெப் ஆகியோர் பார்வோன் துட்டன்காமன் அரண்மனை அதிகாரிகளாக இருந்தவர்கள். மன்னர் துட்டகாமனின் விதவைச் சகோதரியை மணந்தவர் ஆய் ஆவார். துட்டன்காமனுக்குப் பின்னர் எகிப்தின் அரியணை ஏறிய ஆய், வாரிசு இன்றி குறுகிய காலம் மட்டுமே ஆண்டார். மன்னர் ஆய்யை, எகிப்தின் படைத்தலைவர் ஹொரெம்ஹெப், இராணுவப் புரட்சியின் மூலம், ஆய்யை அரியணையிலிருந்து நீக்கி தானே எகிப்தின் மன்னரானார். ஆண் குழந்தை இல்லாத மனன்ர் ஹோரேம்ஹெப், முதலாம் ராமேசஸ் என்பவரை தனது வாரிசாக அறிவித்து இறந்தார். கிமு 1292-இல் அரியணை ஏறிய முதலாம் ராமேசஸ் 19-ஆம் வம்ச பார்வோன் ஆக முடிசூட்டிக் கொண்டார்.
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Erik Hornung, Rolf Krauss & David Warburton (editors), Ancient Egyptian Chronology (Handbook of Oriental Studies), Brill: 2006, p. 493