மார்க் ஆண்டனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்க் ஆண்டனி
Marcus Antonius marble bust in the Vatican Museums.jpg
மார்க் ஆண்டனியின் சிற்பம், உரோம், வாட்டிகன் அருங்காட்சியகம்
உரோமைக் குடியரசை ஆண்ட மூவரில் இரண்டாமவர்
பதவியில்
27 நவம்பர் 43 கிமு – 31 டிசமபர் 33 கிமு
உடன் பணியாற்றுபவர் அகஸ்ட்டஸ் மற்றும் மார்கஸ் அயிமிலியஸ் லெபிடஸ்
உரோமைக் குடியரசின் ஆட்சிக் குழு உறுப்பினர்
பதவியில்
கிமு 1 சனவரி 34 – கிமு 31 டிசம்பர் 34
உடன் பணியாற்றுபவர் லூசியஸ் செரிபொனியஸ் லிபோ
முன்னவர் லூசியஸ் கார்னிபிசியஸ் மற்றும் செக்ஸ்டஸ் பொம்பி
பின்வந்தவர் அகஸ்ட்டஸ் மற்றும் லூசியஸ் வோல்காதியுஸ் துல்லஸ்
பதவியில்
கிமு 1 சனவரி 44 – கிமு 31 டிசம்பர் 44
உடன் பணியாற்றுபவர் ஜூலியஸ் சீசர்
முன்னவர் ஜூலியஸ் சீசர்
பின்வந்தவர் அவுலஸ் ஹிர்தியுஸ் மற்றும் கயூஸ் விபுஸ் பன்சா சிட்ரோனியஸ்
நீதியரசர், உரோமைக் குடியரசு
பதவியில்
கிமு 48 – கிமு 48
சர்வாதிகாரி ஜூலியஸ் சீசர்
முன்னவர் லுசியஸ் வெலெரியஸ் பிளாக்கஸ்
பின்வந்தவர் மார்கஸ் அயிமிலியஸ் லெபிடஸ்
உரோமைக் குடியரசின் தீர்ப்பாயம்
பதவியில்
கிமு 1 சனவரி 49 – கிமு 7 சனவரி 49
ஏழாம் கிளியோபாற்றா
பதவியில்
கிமு 32 – கிமு 30
தனிநபர் தகவல்
பிறப்பு கிமு 14 சனவரி 83
உரோம், உரோமைக் குடியரசு
இறப்பு கிமு 1 ஆகஸ்டு 30 (வயது 53)
அலெக்சாந்திரியா, தாலமி எகிப்து
இறப்பிற்கான
காரணம்
தற்கொலை
தேசியம் ரோமானியர்
அரசியல் கட்சி பொதுமக்கள் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) ஏழாம் கிளியோபாற்றா மற்றும் பலர் (கிமு 32–30)
பெற்றோர் மார்கஸ் அன்டோனி கிரிடிக்கஸ் மற்றும் ஜூலியா (தாய்)
பணி போர்ப்படைத் தலைவர் மற்றும் அரசியல்வாதி
படைத்துறைப் பணி
பற்றிணைவு Roman Military banner.svg உரோமைக் குடியரசு
கிளை ரோம் இராணுவம்
பணி ஆண்டுகள் கிமு 54–30
தர வரிசை புரோகோன்சுல்
படைத்துறைப் பணி 13-ஆம் லெஜியோ ஜெமினா
சமர்கள்/போர்கள்
 • காலிக் போர்கள்
  • அலிசியா சண்டை
 • சீசரின் உள்நாட்டுப் போர்
  • டைராச்சியம் சண்டை
  • பார்சலஸ் சண்டை
  • ரோம் கிளர்ச்சிகள்
 • முதினா சண்டை
  • கொல்லோரம் சண்டை
  • முதினா சண்டை
 • விடுதலை முன்னணியினரின் உள்நாட்டுப் போர்
  • பிலிப்பிச் சண்டை
 • பார்த்தியர்களுக்கு எதிரான் போர்
 • உரோமைக் குடியரசிற்கு எதிரான் எதிரான இறுதிப் போர்
  • ஆக்டியம் சண்டை

மார்க் ஆண்டனி (Marcus Antonius{{#tag:ref |Marcus Antonius Marci filius Marci nepos) பண்டைய ரோம் நாட்டின் சிறந்த அரசியல்வாதியும், தலைமைப் போர்ப் படைத் தலைவரும் ஆவார். உரோமைக் குடியரசை நிறுவதற்கு காரணமான மூவரில் இவர் இரண்டாமவர். பின்னர் உரோமைப் பேரரசு நிறுவ காரணமானவர்களில் ஒருவர் ஆவார். இவர் ஜூலியஸ் சீசரின் ஆதரவாளரும், உரோமைக் குடியரசின் தலைமைப் படைத்தலைவர்களில் ஒருவர்.ஜூலியஸ் சீசர் இவரை இத்தாலி, கிரீஸ், வட ஆப்பிரிக்கா மற்றும் ஸ்பெயின் பகுதிகளின் நிர்வாகியாக நியமித்தார்.

கிமு 44-இல் ஜூலியஸ் சீசரின் கொலைக்குப் பின்னர், இவர் அகஸ்ட்டஸ் மற்றும் மார்கஸ் அயிமிலியஸ்சுடன் இணைந்து மூவர் அணி கொண்ட சர்வாதிகார இரண்டாம் உரோமைக் குடியரசை நிறுவியர். கிமு 42-இல் சீசரைக் கொன்ற விடுதலைப் போராளிகளைக் வென்று, இந்த மூவர் அணியினர் உரோமைக் குடியரசை தங்களுக்குள் பிரித்துக் கொண்டு ஆண்டனர்.[1] மார்க் ஆண்டனிக்கு ரோமைப் பேரரசின், எகிப்தின் ஏழாம் கிளியோபாற்றா ஆண்ட தாலமி இராச்சியம் உள்ளிட்ட கிழக்கு மாகாணங்களின் ஆட்சியாளர் ஆனார். பார்த்தியப் பேரரசுக்கு எதிரான போரிகளின் போது, மார்க் ஆண்டனி ரோமைப் படைகளின் தலைமைப் படைத் தலைவராக இருந்தார்.

அகஸ்ட்டசின் சகோதரியை மார்க் ஆண்டனி திருமணம் கொண்டார். கிமு 40-இல் அகஸ்ட்டஸ் மற்றும் மார்க் ஆண்டனிக்கும் இடையே உரோமைக் குடியரசின் அதிகாரத்தைக் கைப்பற்ற உள்நாட்டுப் போர் ஏற்பட்டது. இதனிடையே மார்க் ஆண்டனி எகிப்தின் ஏழாம் கிளியோபாற்றாவை திருமணம் செய்து கொண்டு 3 குழந்தைகளைப் பெற்றார்.[2] இதனால் ஆண்டனிக்கு, அகஸ்டசுடனான பிணக்குகள் மேலும் பெரிதானது.

கிமு 36-இல் உரோமைக் குடியரசின் மூவர் அணியிலிருந்து மார்கஸ் லெபிடஸ் (Marcus Aemilius Lepidus) நீக்கப்பட்டார். கிமு 33-இல் மார்க் ஆண்டனிக்கும் அகஸ்டஸ்க்கும் இடையே வெறுப்புணர்வுகள் வளர்ந்ததால், உரோமைக் குடியரசை ஆண்ட மூவர் அணி உடைந்தது. கிமு 31-இல் உரோமைக் குடியரசின் செனட் சபையில், எகிப்தின் தாலமி இராச்சியத்தை ஆண்டு கொண்டிருந்த ஏழாம் கிளியோபாற்றா மீது போர் தொடுக்கவும், உரோமைக் குடியரசிற்கு எதிராக மார்க் ஆண்டனி சதிச்செயல்களில் ஈடுபட்ட சதிகாரர் எனத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உரோமைக் குடியரசின் அகஸ்ட்டஸ் படைகள், ஆக்டியம் போரில் மார்க் ஆண்டனியின் படைகளை வென்றது. இதனால் உரோமைக் குடியரசிலிருந்து மார்க் ஆண்டனியும், கிளியோபாட்ராவும் எகிப்திற்கு தப்பி ஓடி, அங்கு தற்கொலை செய்து கொண்டு இறந்தனர்.[3] [4]ark

மார்க் ஆண்டனியின் இறப்பிற்குப் பின்னர் எதிரிகள் அற்ற அகஸ்ட்டஸ் மட்டுமே உரோம் குடியரசை ஆண்டார். உரோமைக் குடியரசை கிமு 27-இல் உரோமைப் பேரரசாக அறிவித்த அகஸ்ட்டஸ் அதன் முதல் பேரரசரானர்.

கொலையுன்ட ஜூலியஸ் சீசரின் உடலுக்கு முன்னர், மார்க் ஆண்டனி உரை நிகழ்த்துதல்

மேற்கோள்கள்[தொகு]

முதன்மை ஆதாரங்கள்[தொகு]

பிற ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Marcus Antonius
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்க்_ஆண்டனி&oldid=3639160" இருந்து மீள்விக்கப்பட்டது