நான்காம் தாலமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நான்காம் தாலமி
கிரேக்கம்: Πτολεμαῖος Φιλοπάτωρ
வார்ப்புரு:Lang-egy[1]
பார்வோன் நான்காம் தாலமி வெளியிட்ட தங்க நாணயம்
பண்டைய எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்சம்
ஆட்சிக்காலம்கிமு 221 – 204, தாலமி வம்சம்
முன்னவர்மூன்றாம் தாலமி
பின்னவர்ஐந்தாம் தாலமி
துணைவி(யர்)மூன்றாம் அர்சினோ
பிள்ளைகள்ஐந்தாம் தாலமி
தந்தைமூன்றாம் தாலமி
தாய்இரண்டாம் பெரெனிஸ்
பிறப்புகிமு 244 [2]
இறப்புகிமு 204 (வயது 40)
கிமு 218-இல் எகிப்தும், பிற மத்திய தரைக் கடல் நாடுகளும்
நான்காம் தாலமியின் உருவம் பொறித்த நாணயம்

நான்காம் தாலமி (Ptolemy IV Philopator)[note 1](பிறப்பு:கிமு 244 – இறப்பு:கிமு 204), பண்டைய எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்சத்தின் மன்னர் ஆவார். இவர் எகிப்தை கிமு 221 முதல் கிமு 204 முடிய 17 ஆண்டுகள் ஆண்டார்.

தபோசிரிஸ் மக்னா நகரத்தை நிறுவுதல்[தொகு]

பார்வோன் இரண்டாம் தாலமி மற்றும் நான்காம் தாலமி, வடக்கு எகிப்தில் உள்ள அலெக்சாந்திரியா நகரத்திற்கு வெளிப்புறத்தில் ஒசிரிசு கடவுள் வழிபாட்டிற்கு கோயில் கட்டவும், சமயச் சடங்குகள் நடத்தவும் கிமு 280-270களில் தபோசிரிஸ் மக்னா எனும் புதிய நகரத்தை நிறுவினர்.

அகழாய்வுகள்[தொகு]

பிப்ரவரி, 2021-இல் அலெக்சாந்திரியா நகரத்திற்கு வெளிப்புறத்தில் அமைந்த பண்டைய தபோசிரிஸ் மக்னா நகரத்தில் நடைபெற்ற அகழாய்வில், 2,000 ஆண்டுகள் பழமையான, தாலமி வம்ச காலத்து, 16 மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் இரண்டு மம்மிகளின் வாயில் தங்க நாக்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பண்டைய எகிப்தியர்கள் இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கையின் போது எகிப்தியக் கடவுள் ஒசிரிசுடன் பேசுவதற்காக இந்த நாக்கு பொருத்தியதாக அறியப்படுகிறது. [3][4][5][6]

நான்காம் சிரியா போர் (கிமு 219–217)[தொகு]

கிமு 221-இல் செலூக்கியப் பேரரசர் மூன்றாம் ஆண்டியோசூஸ் தாலமி பேரரசின் பகுதியான சிரியா மீது போர் தொடுத்தார். 217 -இல் நடைபெற்ற பெரும் போரில் நான்காம் தாலமி, செலூக்கியப் படைகளை வீழ்த்தி மூன்றாம் ஆண்டியோசூசுடன் அமைதி உடன்படிக்கை செய்து கொண்டார்.

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]பிழை காட்டு: <ref> tags exist for a group named "note", but no corresponding <references group="note"/> tag was found

"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்காம்_தாலமி&oldid=3359543" இருந்து மீள்விக்கப்பட்டது