எகிப்தின் இருபத்தி ஏழாம் வம்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிந்தைய கால எகிப்திய இராச்சியம்
27-வது வம்சம்
𐎸𐎭𐎼𐎠𐎹
(பழைய பாரசீக மொழியில்-Mudrāya)
எகிப்திய மாகாணம், அகாமனிசியப் பேரரசு
[[எகிப்தின் இருபத்தி ஆறாம் வம்சம்|]]
கிமு 525–கிமு 404 [[எகிப்தின் இருபத்தி எட்டாம் வம்சம்|]]

Flag of எகிப்தின் இருபத்தி ஏழாம் வம்சம்


Standard of Cyrus the Great

Location of எகிப்தின் இருபத்தி ஏழாம் வம்சம்
Location of எகிப்தின் இருபத்தி ஏழாம் வம்சம்
அகாமனிசியப் பேரரசின் மேற்கு மாகாணமாக எகிப்து[1][2][3][4]
பார்வோன்
 •  கிமு 525-522 இரண்டாம் காம்பிசெஸ் (முதல்)
 •  கிமு 423-404 இரண்டாம் டேரியஸ் (இறுதி)
வரலாற்றுக் காலம் அகாமனிசியப் பேரரசுக் காலம்
 •  பெலுசியம் போர் (கிமு 525) கிமு 525
 •  அமியுர்தயுஸ் புரட்சி கிமு 404
எகிப்தியர்களை கயிற்றால் கட்டி, பார்வோனை மட்டும் அகாமனிசியப் பேரரசர் ஈட்டியால் குத்தும் காட்சி [5][6][7]

எகிப்தின் இருபத்தி ஏழாம் வம்சத்தினர் (Twenty-seventh Dynasty of Egypt or Dynasty XXVII, alternatively 27th Dynasty or Dynasty 27) ஆண்ட பிந்தைய கால எகிப்தை பாரசீக அகாமனிசியப் பேரரசின் மேற்கு எல்லை மாகாணம் என்றும் அழைப்பர். (First Egyptian Satrapy)[8]இருபத்தி ஏழாவது வம்சத்தினர் கிமு 525 முதல் கிமு 404 முடிய 121 ஆண்டுகள் எகிப்தை ஆண்ட பாரசீகர்கள் ஆவார். இப்பாரசீக வம்ச பேரரசை, அமியுர்தயுஸ் எனும் எகிப்திய மன்னர் கிமு 404-இல் செய்த பெரும் மக்கள் புரட்சி மூலம் எகிப்தில் உள்ள பாரசீகர்களை விரட்டியடித்து, எகிப்தில் இருபத்தி எட்டாம் வம்சத்தை நிறுவினார்.[9]

வரலாறு[தொகு]

கிமு 525-இல் பாரசீக அகாமனிசியப் பேரரசர் இரண்டாம் காம்பிசெஸ், எகிப்தின் இருபத்தி ஆறாம் வம்ச பார்வோன் மூன்றாம் சாம்திக்கை வென்றுவென்று எகிப்தின் பார்வோனாக முடிசூடிக் கொண்டு, எகிப்தை அகாமனிசியப் பேரரசின் ஒரு மாகாணமாக ஆக்கினார். கிமு 404-இல் எகிப்தின் அகாமனிசியப் பார்வோன் இரண்டாம் டேரியஸ் ஆட்சியின் போது, எகிப்திய வம்சத்தின் அமியுர்தயுஸ் என்பவர் பெரும் கிளர்ச்சி செய்து, எகிப்தில் பாரசீக அகமானிசியப் பேரரசின் ஆட்சி நீக்கி, எகிப்தில் இருபத்தி எட்டாம் வம்சத்தின் ஆட்சியை நிறுவினார்.

எகிப்திய பார்வோன் முதலாம் டேரியஸ் சிற்பம், சூசா நகரம்[10]
அகாமனிசியப் பேரரசர் முதலாம் செர்கசின் எகிப்திய வீரன், கிமு 470

27-வது வம்ச பார்வோன்கள்[தொகு]

பார்வோன் பெயர் உருவம் ஆட்சிக் காலம் குறிப்பு
இரண்டாம் காம்பிசெஸ் கிமு 525-522 கிமு 525-இல் எகிப்திய பார்வோன் மூன்றாம் சாம்திக்கை வென்று எகிப்தை கைப்பற்றியவர்
பார்த்தியா கிமு 522 சாத்தியமான வஞ்சகர்
மூன்றாம் பெதுபாஸ்திஸ் கிமு 522/521-520 அகமானிசியப் பேரரசின் பார்வோனுக்கு எதிராக புரட்சி செய்தவர்
முதலாம் டேரியஸ் கிமு 522-486
நான்காம் சாம்திக் கிமு 480 அகாமனிசிய பார்வோன்களுக்கு எதிராக புரட்சி செய்தவர்
முதலாம் செர்கஸ் கிமு 486-465
அர்தபானஸ் கிமு 465–464 முதலாம் செர்கசை கொன்றவர். பின்னர் முதலாம் அர்தசெராக்சால் கொல்லப்பட்டவர்.
முதலாம் அர்தசெராக்சஸ் கிமு 465-424
இரண்டாம் செராக்சஸ் கிமு 425-424 எகிப்தின் அரியணையைக் கோரியவர்
சோக்தியானஸ் கிமு 424-423 எகிப்தின் அரியணையக் கோரியவர்
இரண்டாம் டேரியஸ் கிமு 423-404 28=ஆம் வம்ச பார்வோன்கள்

பண்டைய எகிப்திய வம்சங்கள்[தொகு]

பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. O'Brien, Patrick Karl (2002). Atlas of World History (in ஆங்கிலம்). Oxford University Press. pp. 42–43. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195219210.
  2. Philip's Atlas of World History. 1999.
  3. Davidson, Peter (2018). Atlas of Empires: The World's Great Powers from Ancient Times to Today (in ஆங்கிலம்). i5 Publishing LLC. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781620082881.
  4. Barraclough, Geoffrey (1989). The Times Atlas of World History (in ஆங்கிலம்). Times Books. p. 79. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0723003041.
  5. "a Persian hero slaughtering an Egyptian pharaoh while leading four other Egyptian captives" Hartley, Charles W.; Yazicioğlu, G. Bike; Smith, Adam T. (2012). The Archaeology of Power and Politics in Eurasia: Regimes and Revolutions (in ஆங்கிலம்). Cambridge University Press. p. ix, photograph 4.6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781139789387.
  6. "Victor, apparently wearing the tall Persian headdress rather than a crown, leads four bareheaded Egyptian captives by a rope tied to his belt. Victor spears a figure wearing Egyptian type crown." in Root, Margaret Cool (1979). The king and kingship in Achaemenid art: essays on the creation of an iconography of empire (in ஆங்கிலம்). Diffusion, E.J. Brill. p. 182. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789004039025.
  7. "Another seal, also from Egypt, shows a Persian king, his left hand grasping an Egyptian with an Egyptian hairdo (pschent), whom he thrusts through with his lance while holding four prisoners with a rope around their necks." Briant, Pierre (2002). From Cyrus to Alexander: A History of the Persian Empire (in ஆங்கிலம்). Eisenbrauns. p. 215. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781575061207.
  8. electricpulp.com. "ACHAEMENID SATRAPIES – Encyclopaedia Iranica". www.iranicaonline.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-09-30.
  9. Twenty Seventh Dynasty of Egypt
  10. Razmjou, Shahrokh (1954). Ars orientalis; the arts of Islam and the East. Freer Gallery of Art. pp. 81–101.

வெளி இணைப்புகள்[தொகு]