உள்ளடக்கத்துக்குச் செல்

எகிப்தின் இருபத்தி ஐந்தாம் வம்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிமு 744–கிமு 656
தலைநகரம்நபதா
பேசப்படும் மொழிகள்எகிப்திய மொழி
சமயம்
பண்டைய எகிப்திய சமயம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்பாரம்பரியக் காலம்
• தொடக்கம்
கிமு 744
• முடிவு
கிமு 656
முந்தையது
பின்னையது
[[எகிப்தின் இருபத்தி நான்காம் வம்சம்]]
[[எகிப்தின் இருபத்தி ஆறாம் வம்சம்]]
குஷ் இராச்சியத்தினரின் 25-வது வம்சத்தினர் ஆண்ட பண்டைய எகிப்து


எகிப்தின் இருபத்தி ஐந்தாம் வம்சம் (Twenty-fifth Dynasty of Egypt or Dynasty XXV, alternatively 25th Dynasty or Dynasty 25) இதனை நூபியர்களின் குஷ் வம்சம் என்றும் அழைப்பர். இது எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலத்தின் இறுதி வம்சம் ஆகும். எகிப்தியர் அல்லாத இவ்வம்சத்தினர் மேல் எகிப்தின் (தெற்கு எகிப்து) நபதா நகரத்தை தலைநகராகக் பண்டைய எகிப்தை கிமு 744 முதல் கிமு 656 முடிய 88 ஆண்டுகள் ஆண்டனர். [1] இவ்வம்சத்தை நிறுவிய மன்னர் பியே ஆவார். இவ்வம்சத்தின் இறுதி பார்வோன் தந்தமானி ஆவார்.


புது எகிப்திய இராச்சியத்திற்குப் பின்னர் இவ்வம்சத்தினர் மட்டும் தங்களது குஷ் இராச்சியத்துடன், மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்து பகுதிகளை இணைத்து ஆண்டனர்.இவ்வம்சத்தினர் எகிப்திய பண்பாட்டை ஏற்றுக்கொண்டாலும், தங்களது குஷ் இராச்சியத்தின் பண்பாட்டையும் எகிப்தில் கலந்தனர்.[2] இவ்வம்சத்தினர் நூபியா எனப்படும் தற்கால சூடான் பகுதிகளில், பண்டைய எகிப்தியரைப் போன்றே தங்களுக்கான கல்லறைப் பிரமிடுகளை கட்டிக்கொண்டனர்.[3][4][5]

கிமு 656-இல் பண்டைய அண்மை கிழக்கின் புது அசிரியப் பேரரசின் பகுதிகளை கைப்பற்ற 25-வது வம்சத்தவர்கள முயன்ற போது, புது அசிரிய இராச்சியத்தின் பேரரசர் அசூர்பனிபால், இவ்வம்சத்தின் படையினரை விர்ட்டியடித்ததுடன், இவ்வம்சத்தினர் ஆண்ட குஷ் இராச்சியம், மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்து பகுதிகளை கைப்பற்றினார். அசிரியர்கள் குஷ் இராச்சியம் மற்றும் எகிப்திய பகுதிகளை ஆள்வதற்கு இருபத்தி ஆறாம் வம்சத்தவர்களை தங்களுக்கு அடங்கிய சிற்றரசர்களாக நியமித்தனர். 26-வது வம்சமே எகிப்தியர்களின் இறுதி வம்சம் ஆகும். பின்னர் அகாமனிசியப் பேரரசினர் எகிப்தை கைப்பற்றினர். இத்துடன் பண்டைய எகிப்தில் எகிப்திய மகக்ளின் அரச வம்சம் முடிவுற்றதுடன் பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தின் காலம் கிமு 664 முதல் கிமு 332 வரை நிலவியது.

கலை மற்றும் கட்டிடக் கலை

[தொகு]

25-வது வம்சத்தின் பார்வோன்கள்

[தொகு]
பார்வோன் உருவம் அரியணைப் பெயர் ஆட்சிக் காலம் பிரமிடு குறிப்புகள்
பியே
யுசிமரே கிமு 744–714  குர்ரு 17
செபித்கு ஜெத்கரே கிமு 714–705  குர்ரு 18
சபாகா நெபர்-கரே கிமு 705–690  குர்ரு 15
தகர்க்கா
குநெபர்தும்ரே கிமு 690–664  நூரி 1
தந்தமானி
பக்கரே கிமு 664–656  குர்ரு 16 கிமு 656-இல் 26-வது வம்ச மன்னர் முதலாம் சாம்திக் மேல் எகிப்தின் தீபை நகரத்தைக் கைப்பற்றினார்.

25-வது வம்ச அரச குடும்பத்தவர்களின் கல்லறை பிரமிடுகள் நூபியாவின் எல்-குர்ரி[6] மற்றும் நூரி[7] பகுதிகளில் உள்ளது.[8]

25-வது வம்ச வரலாற்றுக் கால வரிசை

[தொகு]
TantamaniTaharqaShabakaShebitkuPiye

பண்டைய எகிப்திய வம்சங்கள்

[தொகு]

பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Török, László (1998). The Kingdom of Kush: Handbook of the Napatan-Meroitic Civilization. Leiden: BRILL. p. 132. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-10448-8.
  2. Bonnet, Charles (2006). The Nubian Pharaohs. New York: The American University in Cairo Press. pp. 142–154. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-977-416-010-3.
  3. Mokhtar, G. (1990). General History of Africa. California, USA: University of California Press. pp. 161–163. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-06697-9.
  4. Emberling, Geoff (2011). Nubia: Ancient Kingdoms of Africa. New York: Institute for the Study of the Ancient World. pp. 9–11. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-615-48102-9.
  5. Silverman, David (1997). Ancient Egypt. New York: Oxford University Press. pp. 36–37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-521270-3.
  6. El-Kurru
  7. Nuri
  8. Dows Dunham, Notes on the History of Kush 850 BC-A. D. 350, American Journal of Archaeology, Vol. 50, No. 3 (July - September , 1946), pp. 378-388

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]