எகிப்தின் இருபத்தி ஆறாம் வம்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிமு 664–கிமு 525
தலைநகரம்சைஸ்
பேசப்படும் மொழிகள்எகிப்திய மொழி
சமயம்
பண்டைய எகிப்திய சமயம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்பாரம்பரியக் காலம்
• Established
கிமு 664
• Disestablished
கிமு 525
முந்தையது
பின்னையது
[[எகிப்தின் இருபத்தி ஐந்தாம் வம்சம்]]
[[எகிப்தின் இருபத்தி ஏழாம் வம்சம்]]

எகிப்தின் இருபத்தி ஆறாம் வம்சம் (Twenty-sixth Dynasty of Egypt or Dynasty XXVI, 26th Dynasty or Dynasty 26) பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை ஆண்ட முதல் எகிப்திய வம்சம ஆகும். இவ்வம்சத்தினர் கீழ் எகிப்தில் (வடக்கு எகிப்து) பாயும் நைல் நதி வடிநிலத்தில் அமைந்த சைஸ் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு கிமு 664 முதல் கிமு 525 முடிய 139 ஆண்டுகள் ஆண்டனர். கிமு 525-இல் பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசினர் பண்டைய எகிப்தை கைப்பற்றினர். இத்துடன் பண்டைய எகிப்தில் எகிப்திய மக்களின் அரச வம்சம் முடிவுற்றது.

வரலாறு[தொகு]

கிமு 656-இல் பண்டைய அண்மை கிழக்கின் புது அசிரியப் பேரரசின் பகுதிகளை கைப்பற்ற எகிப்தின் 25-வது வம்சத்தவர்கள முயன்ற போது, புது அசிரிய இராச்சியத்தின் பேரரசர் அசூர்பனிபால், 25-ஆம் வம்சத்தின் படையினரை விர்ட்டியடித்ததுடன், இவ்வம்சத்தினர் ஆண்ட குஷ் இராச்சியம், மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்து பகுதிகளை கைப்பற்றினார். அசிரியர்கள் குஷ் இராச்சியம் மற்றும் எகிப்திய பகுதிகளை ஆள்வதற்கு இருபத்தி ஆறாம் வம்சத்தவர்களை தங்களுக்கு அடங்கிய சிற்றரசர்களாக நியமித்தனர். 26-வது வம்சமே எகிப்தியர்களின் இறுதி வம்சம் ஆகும். பின்னர் கிமு 525-இல் பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசினர் பண்டைய எகிப்தை கைப்பற்றினர். இத்துடன் பண்டைய எகிப்தில் எகிப்திய மக்களின் அரச வம்சம் முடிவுற்றது..[1]

கலை[தொகு]

26-வது வம்ச பார்வோன்கள்[தொகு]

எகிப்தின் 26-வது வம்ச மன்னர்கள், இருபத்தி நான்காம் வம்சத்தவர்களின் வழித்தோன்றல்கள் ஆவார்.[2]

பார்வோன் பெயர் உருவம் ஆட்சிக் காலம் பட்டப் பெயர் கல்லறை மனைவியர் குறிப்புகள்
முதலாம் சாம்திக் Psammetique Ier TPabasa.jpg கிமு 664–610 வகிபிரே சைஸ் மெகிடென்வெஸ்கேத் குஷ் இராச்சியத்திரை வென்று மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்தை ஒன்றிணைத்தார்.
இரண்டாம் நெச்சோ
Necho-KnellingStatue BrooklynMuseum.png
கிமு 610–595 நவெஹெமிபிரே பைபிள் நூலில் இவரது பெயர் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது.
இரண்டாம் சாம்திக்
Sphinx Psammetique II 1104.jpg
கிமு 595–589 நெபெரிபிரே தகுயித்
ஆப்பிரீஸ்
Apries.jpg
கிமு 589–570 ஹாய்ப்பிரே
இரண்டாம் அக்மோஸ் Farao Amasis.JPG கிமு 570–526 கெனெம்-இப்-ரே சைஸ்
மூன்றாம் சாம்திக்
Head of Osiris-E 10706 (Louvre Museum).jpg
கிமு 526–525 அன்கேன்ரே

26-வது வமசத்தின் காலவரிசை[தொகு]

Psamtik IIIAmasis IIWahibre HaaibrePsamtik IINecho IIPsamtik I

பண்டைய எகிப்திய வம்சங்கள்[தொகு]

பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Aidan Dodson, Dyan Hilton. The Complete Royal Families of Ancient Egypt. The American University in Cairo Press, London 2004
  2. Twenty Sixth Dynasty of Egypt

ஆதார நூற்பட்டியல்[தொகு]