எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புது எகிப்து இராச்சியம்
19-வது வம்சம்
கிமு 1292 - கிமு 1189
தலைநகரம்தீபை, பின்னர் மெம்பிசு மற்றும் பை-ராமேசஸ்
சமயம் பண்டைய எகிப்திய சமயம்
அரசாங்கம் முடியாட்சி

எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம் (Nineteenth Dynasty of Egypt (Dynasty XIX) புது எகிப்து இராச்சியத்தை கிமு 1292 முதல் கிமு 1189 முடிய 103 ஆண்டுகள் ஆண்ட இரண்டாவது வம்சம் ஆகும்.[1] பத்தென்பாவது வம்சத்தினரும், இருபதாம் வம்சத்தினர், எகிப்தின் புது இராச்சியத்தை ஆண்ட காலத்தை இராமசேசியம் காலம் என்பர். இவ்வம்சத்தின் புகழ் பெற்ற மன்னர் பார்வோன் இரண்டாம் ராமேசஸ் ஆவார். இரண்டாம் ராமேசஸ் காலத்தின் அல்-உக்சுர் கோயில் கட்டும் பணியில் ஈடுபட்டார். மேலும் கீழ் எகிப்தின் நைல் நதி வடிநிலத்தில் பை-ராமேசஸ் எனும் புதிய தலைநகரைக் கட்டினார்.

பண்டைய அண்மை கிழக்கின் இட்டைட்டு பேரரசின் படைகளிடமிருந்து, இவ்வம்சத்தினர் புது எகிப்திய இராச்சியத்தை தற்காத்துக் கொண்டனர்

ஆட்சியாளர்கள்[தொகு]

  1. முதலாம் ராமேசஸ் - (கிமு 1292 – 1290)
  2. முதலாம் சேத்தி - (கிமு 1290 – 1279)
  3. இரண்டாம் ராமேசஸ் - (கிமு 1279 – 1213)
  4. மெர்நெப்தா - (கிமு 1213 – 1203)
  5. அமென்மெஸ்ஸி - (கிமு 1203 – 1199)
  6. இரண்டாம் சேத்தி - (கிமு 1203 – 1197
  7. சிப்டா - (கிமு 1197 - 1191)
  8. அரசி டூஸ்ரெத் - (கிமு 1191 - 1189)

படக்காட்சிகள்[தொகு]

பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]