எகிப்தின் ஒன்பதாம் வம்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிமு 2160–கிமு 2130
தலைநகரம்ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா
பேசப்படும் மொழிகள்எகிப்திய மொழி
சமயம்
பண்டைய எகிப்திய சமயம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்வெண்கலக் காலம்
• தொடக்கம்
கிமு 2160
• முடிவு
கிமு 2130
முந்தையது
பின்னையது
[[எகிப்தின் எட்டாம் வம்சம்]]
[[எகிப்தின் பத்தாம் வம்சம்]]

எகிப்தின் ஒன்பதாம் வம்சம் (Ninth Dynasty of Egypt - Dynasty IX) எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தில் விளகிய வம்சங்களில் ஒன்றாகும். பிற வம்சகங்ள் முறையே எகிப்தின் ஏழாம் வம்சம் முதல் துவக்க கால எகிப்தின் பதினொன்றாம் வம்சம் வரை ஆகும். [1]இவ்வம்சத்தை நிறுவியவர் அக்தோஸ் ஆவார். இவ்வம்சத்தவர்களின் தலைநகரம் ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா ஆகும். இவ்வம்சத்தினர் பண்டைய எகிப்தின் பகுதிகளை கிமு 2160 முதல் கிமு 2130 முடிய 30 ஆண்டுகள் ஆண்டனர். இவ்வம்சத்தின் தொடர்ச்சியாக எகிப்தின் பத்தாம் வம்சம் விளங்கியது. இவ்வம்ச ஆட்சியில் மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்து ஒன்றுபட்டு விளங்கவில்லை.[2]

ஆட்சியாளர்கள்[தொகு]

இவ்வம்ச ஆட்சியாளர்களின் பெயர்கள் தெளிவாக அறியப்படவில்லை

  1. முதலாம் மெரிப்பிரே கெட்டி
  2. நெபர்கரே VII
  3. இரண்டாம் நெபர்கௌர் கெட்டி
  4. மெர்ரி
  5. செட்

பண்டைய எகிப்திய வம்சங்கள்[தொகு]

பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Shaw, Ian, தொகுப்பாசிரியர் (2000). The Oxford History of Ancient Egypt. Oxford University Press. பக். 480. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-815034-2. https://archive.org/details/oxfordhisto00shaw/page/480. 
  2. Sir Alan Gardiner, Egypt of the Pharaohs, Oxford University Press, 1961, pp. 112-13.
முன்னர்
எகிப்தின் எட்டாம் வம்சம்
எகிப்தின் ஒன்பதாம் வம்சம்
கிமு 2160 – 2130
பின்னர்
எகிப்தின் பத்தாம் வம்சம்