ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா
ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா Ϩⲛⲏⲥ | |
---|---|
மாற்றுப் பெயர் | ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா |
இருப்பிடம் | பெனி சூயப் ஆளுநகரம், எகிப்து |
ஆயத்தொலைகள் | 29°5′8″N 30°56′4″E / 29.08556°N 30.93444°E |
வகை | பண்டைய நகரம் |
ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா (Heracleopolis Magna or Heracleopolis) மேல் எகிப்தில் அமைந்த பண்டைய நகரம் மற்றும் தொல்லியல் களம் ஆகும். இது தற்கால் எகிப்தின் பெனி சூயப் ஆளுநகரத்தில் உள்ளது. [1] 9-ஆம் வம்சம், 10-ஆம் வம்சம் மற்றும் 23-ஆம் வம்சத்தவர்களுக்கு ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா தலைநகரமாக இருந்தது.
பழைய எகிப்து இராச்சியத்தில்
[தொகு]கிமு 2181 முதல் கிமு 2055 முடிய எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தின் போது இந்நகரம் புகழுடன் விளங்கியது.[2] பழைய எகிப்து இராச்சியம் (கிமு 2686 – கிமு 2181) சீர்குழைந்த போது பண்டைய எகிப்து மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்து என இரண்டாகப் பிரிந்தது. இதனால் ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா நகரம் கீழ் எகிப்தின் முதன்மை நகரமாக விளங்கியது.[1] எகிப்தின் ஒன்பதாம் வம்சம் மற்றும் பத்தாம் வம்சத்தவர்கள் (கிமு2160–2025) ஆட்சிக் காலத்தில் ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா நகரம் அரசியல் அதிகார மையமாக விளங்கியது. [1] ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த இவ்வம்சத்தவர்கள், தீபையை தலைநகராகக்கொண்ட மேல் எகிப்திய வம்சத்தவர்களுடன் பிணக்கு கொண்டனர். [2]
எகிப்தின் மத்தியகால இராச்சியத்தில் (கிமு 2055–1650)
[தொகு]எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்திற்கும், மத்திய கால இராச்சியத்தின் துவக்கத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா நகரம் எகிப்திய சமயத்தின் மையமாக விளங்கியது. ஹெரிசாப் கடவுளை வழிபட்டதுடன், அக்கடவுளுக்கு கோயில்கள் கட்டப்பட்டது. [2] மத்திய கால இராச்சியத்தை ஆண்ட 11-ஆம் வம்ச பார்வோன் இரண்டாம் மெண்டுகொதேப், ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா நகரத்தை கைப்பற்றி, அதன ஆட்சியாளர்களையும் வென்றார்.[3]
மூன்றாம் இடைநிலைக் காலத்தில் (கிமு 1069–747)
[தொகு]எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலத்தின் (கிமு 1069–747) போது ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா நகரம் எழுச்சியடைந்து மீண்டும் முக்கியத்துவம் பெற்றது. இந்நகரம் சமயம், அரசியல் ஆகியவைகளின் மையமாக திகழ்ந்தது.[2]
தாலமி பேரரசில் எகிப்து (கிமு 322–30)
[தொகு]கிரேக்கர்களின் தாலமி பேரரசில் (கிமு 332–30), பண்டைய எகிப்து இருந்த போது, ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா நகரம் முக்கிய பண்பாட்டு மற்றும் சமய மையமாக விளங்கியது. எகிப்தினை ஆண்ட கிரேக்கர்கள் தங்களது சமயக் கடவுள்களுடன், எகிப்தியக் கடவுள்களுடன் ஒப்பிட்டு அறிந்தனர். [2]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 An Introduction to the Archaeology of Ancient Egypt, 2008. Oxford: Blackwell Publishing. 2008.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 The Princeton Dictionary of Ancient Egypt, 2008. Princeton: Princeton University Press. 2008.
- ↑ Van De Mieroop, Marc (2011). A History of Ancient Egypt (1st ed.). Chichester, West Sussex, UK: Wiley-Blackwell. pp. 97, 99. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4051-6070-4.
வெளி இணைப்புகள்
[தொகு]Pleiades ID: https://pleiades.stoa.org/places/736920