உள்ளடக்கத்துக்குச் செல்

இரண்டாம் மெண்டுகொதேப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்டாம் மெண்டுகொதேப்
இரண்டாம் மெண்டுகொதேப்பின் நினைவுச் சின்னம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்2061–2010 கிமு, எகிப்தின் பதினொன்றாம் வம்சம்
முன்னவர்மூன்றாம் இண்டெப்
பின்னவர்மூன்றாம் மெண்டுகொதேப்
  • Prenomen: Nebhepetre
    Nb-ḥ3pt-Rˁ
    The Lord of the rudder is Ra[1]
    L2
    t
    M23
    t
    <
    ra
    nb
    P8
    >
  • Nomen: Mentuhotep
    Mn-ṯw-ḥtp
    Montu is content[2]
    G39N5<
    mn
    n
    TwHtp
    t p
    >
  • Horus name: Shematawy
    Šm3-t3.w(j)
    இரண்டு நிலப்பரப்புகளை ஒன்றிணைதவர்
  • G5
    F36N16
    N16
  • நெப்டி பெயர்: Shematawy
    Šm3-t3.w(j)
    இரண்டு நிலப்பரப்புகளை ஒன்றிணைதவர்
  • G16
    F36N16
    N16
  • Golden Horus: Biknebu Qashuti
    Bjk-nbw-q3-šwtj
    The Golden Falcon, lofty in plumes
    N29 G5
    S12
    S9


    Abydos King List
    Nebhepetre
    Nb-ḥ3pt-Rˁ
    The Lord of the rudder is Ra
    <
    N5
    V30
    P8
    >

    Karnak king list
    Nebhepetre
    Nb-ḥ3pt-Rˁ
    The Lord of the rudder is Ra
    <
    N5
    V30
    P8
    >

    Turin King List
    Nebhepetre
    Nb-ḥ3pt-Rˁ
    The Lord of the rudder is Ra
    V10AN5
    V30
    P8G7HASH
    [3]

துணைவி(யர்)தேம், இரண்டாம் நெபெரு, அஷாயத், ஹென்கெனெத், கவித், கேம்சித், சதே
பிள்ளைகள்மூன்றாம் மெண்டுகொதேப்
தந்தைமூன்றாம் இண்டெப்
தாய்இராணி இயா
இறப்புகிமு 1995
அடக்கம்தேர் எல் பகாரி

இரண்டாம் மெண்டுகொதேப் (Nebhepetre Mentuhotep II) (ஆட்சிக் காலம்:கிமு 2061 - 2010) எகிப்தின் மத்தியகால இராச்சியத்தை ஆண்ட பதினொன்றாம் வம்சத்தின் பார்வோன் ஆவார். இப்பார்வோன் எகிப்தை ஐம்பத்தொன்று (51) ஆண்டுகள் ஆண்ட பெருமை கொண்டவர். இவர் தனது முப்பத்தி ஒன்பதாம் வயதில் எகிப்தின் அரியணை ஏறி, மேல் எகிப்தையும், கீழ் எகிப்தையும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைத்து எகிப்தின் முதல் இடைநிலைக் கால ஆட்சியை முடிவிற்கு கொண்டு வந்தார். மேலும் பார்வோன் இரண்டாம் மெண்டுகொதேப் எகிப்தின் மத்தியகால இராச்சியத்தை நிறுவியவராகக் கருதப்படுகிறார்.

குடும்பம்

[தொகு]
உயரமான இரண்டாம் மெண்டுகொதேப், வலது பக்கம் மகன் மூன்றாம் இண்டெப் மற்றும் கருவூலத் தலைவர் கேத்தி, இடது பக்கம் இராணி இயா, பாறை ஓவியம்

எகிப்தின் பதினொன்றாம் வம்ச பார்வோன் மூன்றாம் இண்டெப் - இராணி இயாவிற்கும் பிறந்தவர் இரண்டாம் மெண்டுகொதேப். [4][5][6] [7] மன்னர் இரண்டாம் மெண்டுகொதேப்பிற்கு தேம், இரண்டாம் நெபெரு, அஷாயத், ஹென்ஹெனேத், கவித், கேம்சித், சடே என ஏழு மனைவியரும், மூன்றாம் மெண்டுகொதேப் எனும் ஆண் குழந்தையும் இருந்தனர். மெண்டுகொதேப்பின் மறைவிற்குப் பின்னர் அவரது உடலுடன் அவரது மனைவியர்களின் உடல்கள் தேர்-எல்-பகாரி கல்லறைக் கோயிலில் அடக்கம் செய்யப்பட்டது.[8]

ஆட்சி

[தொகு]

இரண்டாம் மெண்டுகொதேப் எகிப்தின் மத்திய கால இராச்சியத்தை நிறுவி எகிப்தை ஐம்பத்தி ஒன்று ஆண்டுகள் ஆண்டதாகக் கருதப்படுகிறார்.[9]

இரண்டாம் மெண்டுகொதேப்பின் வண்ணம் தீட்டப்பட்ட சிற்பம், எகிப்திய அருங்காட்சியகம், கெய்ரோ

துவக்க ஆட்சிக் காலம்

[தொகு]

இரண்டாம் மெண்டுகொதேப் தீபை நகரத்தில் அரியணை ஏறிய போது, தன் முன்னோர்கள் மேல் எகிப்தை ஒன்றிணைத்திருந்தனர். இரண்டாம் மெண்டுகொதேப்பின் 14 ஆண்டு ஆட்சிக் காலத்தில் எகிப்து இராச்சியம் அமைதியுடன் விளங்கியது.

எகிப்தை ஒன்றிணைத்தல்

[தொகு]

இரண்டாம் மெண்டுகொதேப்பின் 14-வது ஆண்டு கால ஆட்சியின் போது, மேல் எகிப்தின் ஹெராக்லியோபோலிஸ் நகரத்தின் எகிப்தின் பத்தாம் வம்சத்தவர்கள் மேல் எகிப்தை கைப்பற்ற முயற்சி செய்தனர்.

லக்சர் நகரத்தில் 1920-இல் புகழ்பெற்ற போர்வீரர்களின் தேர்-எல்-பகாரி[10] கல்லறைக் கோயில் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கல்லறையில் போரில் இறந்த மெண்டுகொதேப்பின் 60 படைவீரர்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்தனர். [11]

இப்போரில் கீழ் எகிப்தின் ஆட்சியாளர் இறக்கவே, இரண்டாம் மெண்டுகொதேப் தனது முப்பத்தி ஒன்பதாவது வயதில் கீழ் எகிப்தை, மேல் எகிப்துடன் ஒன்றிணைத்து, பண்டைய எகிப்தை ஒரு குடையின் கீழ் ஆண்டார்.[12] இதனால் எகிப்திய மக்கள் மெண்டுகொதேப்பை கடவுளாகப் பார்த்தனர்.[13]

இரண்டாம் மெண்டுகொதேப்ப்ன் உருளை முத்திரை

எகிப்திற்கு வெளியே இராணுவ நடவடிக்கைகள்

[தொகு]

முதல் இடைநிலைக் காலத்தின் போது எகிப்திலிருந்து தன்னாட்சி பெற்றிருந்த நூபியா மற்றும் குஷ் இராச்சியஙக்ளை இரண்டாம் மெண்டுகொதேப் இராணுவ நடவடிக்கைகள் மூலம் கைப்பற்றினார்.[14] மேலும் பண்டைய அண்மை கிழக்கின் கானான் நாட்டின் மீது படையெடுத்து எகிப்துடன் இணைத்தார். மெண்டுகோதேப்பின் கருவூலத் தலைவர் கேத்தி என்பவர், பார்வோனுக்காக சேத் எனும் திருவிழாவை கொண்டாடினார்.

அரச நிர்வாகத்தை சீரமைத்தல்

[தொகு]

எகிப்தின் முதல் இடைநிலைக் காலம் மற்றும் இரண்டாம் மெண்டுகொதேப்பின் ஆட்சியில் 42 எகிப்திய மாநிலங்களின் ஆளுநர்கள் உள்ளூர் ஆட்சி அதிகாரத்தில் முக்கிய இடம் வகித்தனர். எகிப்தின் ஆறாம் வம்ச ஆட்சிக் காலத்திலிருந்து, இம்மாநில ஆளுநர்கள் பதவி பரம்பரை வாரிசு அடிப்படையில் அமைந்தது. எகிப்திய இராச்சியங்கள் வீழ்ச்சியடைந்த காலங்களில் இம்மாநில ஆளுநர்கள் தன்னாட்சியுடன் தங்கள் பகுதிகள் ஆள்வார்கள். இரண்டாம் மெண்டுகொதேப் பரம்பரை வாரிசு அடிப்படையிலான மாநில ஆளுநர் பதவிகளை ஒழித்து, அதற்கு பதிலாக மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்திலும் தனது அரச குடும்பத்தவர்களை ஆளுநர்களாக நியமித்து, வலிமை மிக்க மைய அரசை நிறுவினார்.[15]

மெண்டுகொதேப்பின் அரச பட்டங்கள்

மெண்டுகொதேப் அரச குடும்பத்தவர்கள் கொண்ட நடமாடும் படையை உருவாக்கி உள்ளூர் பரம்பரை ஆளுநர்களின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தினார்.[16] இறுதியாக உள்ளூர் ஆளுநர்கள் பலம் குன்றினர். இறுதியாக பார்வோன் இரண்டாம் மெண்டுகொதேப் கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.[17]

நினைவுச் சின்னங்கள்

[தொகு]

இரண்டாம் மெண்டுகொதேப் நிறுவிய பல நினைவுச் சின்னங்களில் தற்போது ஒருசில மட்டும் எஞ்சியுள்ளது. அவைகளில் இரண்டாம் மெண்டுகொதேப்பின் நல்ல நிலையில் இருந்த அடக்கத் தலம் 2014-இல் கண்டுபிடிக்கப்பட்டது. பெரும்பாலான கோயில் மேல் எகிப்தின் அஸ்வான் போன்ற நகரங்களில் கண்டுபிடிக்கப்பட்டது. [18] [19]

இரண்டாம் மெண்டுகொதேப்பின் கல்லறைக் கோயில் படவெழுத்துக்களில்
G25Aa1Q1Z1
Z1
Z1
<
N5nbP8
>

3ḫ-swt-nb-ḥpt-Rˁ AkhsutnebhepetRe
"Transfigured are the places of Nebhepetre"
G25stt
Z2
M17Y5
N35
G7O24

3ḫ-swt-Jmn Akhsutamun
"Transfigured are the places of அமூன்"[20]

மெண்டுகொதேப்பின் அடக்கத் தலம்

[தொகு]
I மெண்டுகொதேப்பின் கல்லறைக் கோயிலின் வரைபடம்

இரண்டாம் மெண்டுகொதேப்பின் கல்லறை கட்டிடக் கலைநயத்துடன் கட்டப்படவில்லை எனினும், சமய நோக்கில் முக்கியத்தும் வாய்ந்தது ஆகும். [21]இவரது கல்லறையில் இவரது உருவச் சிலையுடன், எகிப்திய கடவுளில் ஒருவரான ஒசைரிசின் சிலையும் இடம் பெற்றிருந்தது.[22]மேலும் கல்லறையில் நீண்ட உதடுகள், கண்கள் மற்றும் மெல்லிய உடல்கள் கொண்ட சித்திரங்கள் கலைநயத்துடன் வரையப்பட்டுள்ளது.[23] இவரது உருவச் சிலைக்கு எதிரே இவரது மனைவிகளின் ஓவியங்களும் உள்ளது.[24]

அமைவிடம்

[தொகு]

மெண்டுகொதேப்பின் கல்லறை தீபை நகரத்தில் பாயும் நைல் ஆற்றின் மேற்கு கரையில் உள்ள தேர் எல் பகாரி சிறு மலையுச்சியில் உள்ளது.

கண்டுபிடிப்பு மற்றும் அகழாய்வுகள்

[தொகு]

பத்தொன்பதாம நூறாறாண்டின் துவக்கத்தில், இரண்டாம் மெண்டுகொதேப்பின் கல்லறைக் கோயில் கட்டிடங்கள் பெரும் சிதிலங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது. கிபி 1859-இல் டப்ரின் மற்றும் அவரது உதவியாளர்கள், மெண்டுகொதேப்பின் மண்டபத்தை அகழாய்வில் கண்டுபிடித்தனர். மண்டபத்தின் சிதிலங்களை ஆராயும் போது, மெண்டுகொதேப்பின் இராணிகளில் ஒருவரான தேமின் கல்லறையை கண்டுபிடித்தனர்.

இறுதியாக 1898-இல் ஹேவர்டு கார்ட்டர் என்பவர் பாப்-எல்-ஹோசன் கல்லறையை கண்டுபிடித்தார். [25]அக்கல்லறையில் அமர்ந்த நிலையில் பார்வோனின் சிலையை கண்டுபிடித்தார்.[26]

முக்கியமான அகழாய்வு ஹென்றி எட்வர்டு நவில்லி தலைமையில், எகிப்தின் அரசுக்காக 1903 முதல் 1907 முடிய நடைபெற்றது. மீண்டும் 1920 முதல் 1931 முடிய ஹெர்பர்ட் வின்லாக் தலைமையில் அகழ்வாய்வு நடைபெற்றது. [27] இறுதியாக 1967 முதல் 1971 முடிய அர்னால்டு தலைமையிலான ஜெர்மானிய அகழாய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.[28]

மகுடம் சூடிய இரண்டாம் மெண்டுகொதேப்பின் மணற்கல் சிற்பம்

படக்காட்சிகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. XIth Dynasty
  2. Peter Clayton: Chronicle of the Pharaohs: The Reign-by-Reign Record of the Rulers and Dynasties of Ancient Egypt, Thames & Hudson, p. 72. 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-500-28628-0
  3. Alan H. Gardiner: The royal canon of Turin.
  4. Clere, J.J.; Vandier, J. Textes de la premiere periode intermediaire et de la XIeme dynasty. Bibliotheca Aegyptiaca X. Vol. 1. Complete Stele on p. 21
  5. Gauthier, Henri (1906). "Quelques remarques sur la XIe dynastie.". BIFAO (5): 39. 
  6. Tyldesley, Joyce (2006). Chronicle of the Queens of Egypt. London, UK: Thames & Hudson. pp. 66-68. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-500-05145-3.
  7. Silke Roth, Koenigsmutter, p. 189
  8. Dodson, Aidan Marc; Hilton, Dyan (February 2010) [September 2004]. The complete royal families of ancient Egypt. London, UK: Thames and Hudson.
  9. [1]
  10. Deir el-Bahari
  11. Callender, In: Ian Shaw (edit.), Oxford History of Ancient Egypt, p. 140.
  12. Grajetzki, The Middle Kingdom, p. 19
  13. M. Collier, B. Manley and R. Parkinson; How to Read Egyptian Hieroglyphs: A Step-by-Step Guide to Teach Yourself
  14. Callender, In: Ian Shaw (edit.), Oxford History of Ancient Egypt, p. 140.
  15. , Callender, In Ian Shaw (edit.), Oxford History of Ancient Egypt, p. 140-141.
  16. Callender, In: Ian Shaw (edit.), Oxford History of Ancient Egypt, p. 140-141.
  17. Callender, In: Ian Shaw (edit.), Oxford History of Ancient Egypt, p. 140-141.
  18. Grajetzki, The Middle Kingdom, p. 20-21
  19. Callender, In: Ian Shaw (edit.): The Oxford History of Ancient Egypt p.127
  20. Dieter Arnold Mentuhotep. vol. 2, p.90.
  21. Byron Esely Shafer (Editor), Temples of Ancient Egypt, p.74, Cornell University Press; 2nd Revised edition, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8014-3399-1 [2]
  22. Osiride statuary
  23. Callender, In: Ian Shaw (edit.): The Oxford History of Ancient Egypt p. 144
  24. Callender, In: Ian Shaw (edit.): The Oxford History of Ancient Egypt p. 144
  25. "Discovery of Bab el-Hosan". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2019-12-21.
  26. Discovery of the Bab el-Hosan cache
  27. D. Arnold: Mentuhotep. vol. 1, p. 70f.
  28. D. Arnold: Der Tempel des Königs Mentuhotep in Deir el-Bahari. 3 vols.

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]




"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_மெண்டுகொதேப்&oldid=4060841" இலிருந்து மீள்விக்கப்பட்டது