உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெத்கரே இசேசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெத்கரே இசேசி
ஜெத்கரே இசேசியின் குறுங்கல்வெட்டு
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 2436 - கிமு 2404 முடிய 32 ஆண்டுகள், ஐந்தாம் வம்சம்
முன்னவர்மென்கௌஹோர் கையூ
பின்னவர்உனாஸ்
துணைவி(யர்)சேத்திப்ஹோர்
பிள்ளைகள்நெசெர்கௌஹோர் , கேகேரெத்நெப்தி , மீரத்-இசேசி, ஹெட்ஜெத்நெபு, நெப்திமெப்ரெஸ் ♀
ரயிம்கா,கேயும்த்ஜென்னென்ட், இசேசி-ஆங்க்
அடக்கம்ஜெத்கரே இசேசியின் பிரமிடு, சக்காரா

ஜெத்கரே இசேசி (Djedkare Isesi) எகிப்தின் பழைய இராச்சியத்தை ஆண்ட ஐந்தாம் வம்சத்தின் எட்டாவது பார்வோன் ஆவார். இவர் பழைய எகிப்து இராச்சியத்தை கிமு 2436 முதல் கிமு 2404 முடிய 32 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார். இவருக்குப் பின் உனாஸ் அரியணை ஏறினார்.

பார்வோன் ஜெத்கரே இசேசி ஆட்சியின் போது, மத்திய கிழக்கின் லெவண்ட் கடற்கரை நகரங்களுடன் வர்த்தக உறவுகளை பேணினார். மேலும் கானானில் தண்டனைத் தாக்குதல்களை நடத்தினார். சக்காரா நகரத்தில் உள்ள பிரமிடில் ஜெத்கரே இசேசியின் மம்மி அடக்கம் செய்யப்பட்டது. தற்போது இப்பிரமிடு பாழடைந்துள்ளது.

1940களில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டபோது, புதைகுழியில் ஜெத்கரே இசேசியின் மம்மி கண்டுபிடிக்கப்பட்டது. மம்மியை பரிசோதித்ததில் அவர் தனது ஐம்பதாவது வயதில் இறந்துவிட்டார் என்பது தெரியவந்தது. அவரது மரணத்தைத் தொடர்ந்து, அவர் எகிப்திய மக்களின் ஒரு வழிபாட்டின் பொருளாக இருந்தார். இந்த வழிபாடு, பழைய இராச்சியத்தின் இறுதி வரை நீடித்தது. ஆறாவது வம்சத்தின் நடுப்பகுதியில் அவர் குறிப்பாக உயர் மதிப்பிற்குரியவராகத் தோன்றினார். தொல்பொருள் சான்றுகள் ஜெத்கரே இசேசியின் இறுதி சடங்குகள், புது எகிப்து இராச்சியம் (கிமு 1550 - கிமு 1077) காலம் வரை தொடர்ந்தது.

படக்காட்சிகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 Leprohon 2013, ப. 40.
  2. Clayton 1994, ப. 61.
  3. Leprohon 2013, ப. 40, Footnote 63.
  4. Mariette 1864, ப. 15.

ஆதார நூற்பட்டியல்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Djedkare Isesi
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
முன்னர்
மென்கௌஹோர் கையூ
எகிப்தின் பார்வோன்
ஐந்தாம் வம்சம்
பின்னர்


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெத்கரே_இசேசி&oldid=3848765" இலிருந்து மீள்விக்கப்பட்டது