முதலாம் தூத்மோஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முதலாம் தூத்மோஸ்
முதலாம் தூத்மோசின் சிலை (பிரித்தானிய அருங்காட்சியகம்)
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்ஏறத்தாழ கி மு 1506 – 1493, எகிப்தின் 18-வது வம்சத்தின் மூன்றாவது பார்வோன்
முன்னவர்முதலாம் அமென்கோதோப்
பின்னவர்முதலாம் தூத்மோஸ்
துணைவி(யர்)ராணி அக்மோஸ் மற்றும் முத்னோப்ரெட்
பிள்ளைகள்இரண்டாம் தூத்மோஸ், ஹாட்செப்சுத், இளவரசன் அமென்மோஸ், வட்ஜ்மோஸ்
தந்தைமுதலாம் அமென்கோதோப் (எனக் கருதப்படுகிறது)
தாய்சென்செனெப்
இறப்புகி மு 1493
அடக்கம்மன்னர்களின் சமவெளியின் கல்லறை எண் KV38, பின்னர் KV20
நினைவுச் சின்னங்கள்கர்னக் நகரத்தில் நான்காம் மற்றும் ஐந்தாம் பைலோன் மன்னர்களின் இரண்டு நினைவுச் சதுரத் தூபிகளும்; கூரையின் மேற்பரப்பைத் தாங்கும் தூண்கள் உடைய மண்டபமும்.
கல்லறையில் இருந்த முதலாம் தூத்மோசின் மம்மியை, அவரது மகள் ஹாட்செப்சுத் மறுசீரமைத்து, காவி நிற படிகக் கல் சவப்பெட்டி, பாஸ்டன் நுண் கலைகளின் அருங்காட்சியகம்
முதலாம் தூத்மோஸ் கர்னக் நகரத்தில் நிறுவிய கூரையின் மேற்பரப்பைத் தாங்கும் தூண்கள் உடைய மண்டபம்

முதலாம் தூத்மோஸ் (Thutmose I) (தோத்மெஸ், தூத்மோசிஸ் முதலாம் தூத்மோசிஸ் என பல பெயரிகளிலும் அழைக்கப்படுபவர்). தூத் என்பதற்கு பண்டைய எகிப்திய மொழியில் பிறந்தவன் எனப்பொருளாகும். முதலாம் தூத்மோஸ் புது எகிப்திய இராச்சியத்தின் எகிப்தின் பதினெட்டாம் அரச குலத்தின் மூன்றாவது பார்வோன் எனப்படும் மன்னர் ஆவார்.[2]

மன்னர் முதலாம் அமென்கோதோப் இறந்த பின் பட்டத்திற்கு வந்த முதலாம் தூத்மோஸ், தனது படைகளை அனுப்பி, லெவண்ட் மற்றும் எகிப்தின் தெற்குப் பகுதியில் உள்ள, தற்கால சூடானின் வடக்குப் பகுதியில் உள்ள நுபியா பகுதிகளைக் கைப்பற்றினார்.

முதலாம் தூத்மோஸ், மன்னர்களின் சமவெளியின் தீபை மற்றும் அல்-உக்சுர் பகுதிகளில் பல எகிப்தியக் கடவுளர்களின் கோயில்களையும், இறந்து போன எகிப்திய மன்னர்கள் மற்றும் மன்னர் குடும்பத்தினர்களின் சடங்களை மம்மி முறையில் பதப்படுத்தி பிரமிடு வடிவிலான பெரிய கட்டிடங்களைக் கட்டி அதில் அடக்கம் செய்தார்.

முதலாம் தூத்மோஸ், எகிப்தை கி மு 1506 முதல் 1493 முடிய அல்லது கி மு 1526 முதல் 1513 முடிய ஆண்டார் என இருவேறு கருத்துகள் உள்ளது.[3][4] முதலாம் தூத்மோசின் மறைவிற்குப் பின் அவரது மகன் இரண்டாம் தூத்மோசசும், பின்னர் அவரது மகள் ஹாட்செப்சுத்தும் எகிப்தை ஆண்டனர்.

பண்டைய எகிப்தின் மிகப் பெரும் அடைவுகளில் குறிப்பிடத்தக்கது அல்-உக்சுர் கோயில், அல்-உக்சுர், அதாவது "அரண்மனைகள்") எனப்படும் மன்னர்களின் சமவெளி மற்றும் கர்னக் எனப்படும் அரசியர் பள்ளத்தாக்கு என்பன அடங்கும்.

கட்டிடத் திட்டங்கள்[தொகு]

முதலாம் தூத்மோசின் உயரமான உருவச்சிலை, எகிப்திய அருங்காட்சியகம்
மன்னர் முதலாம் தூத்மோஸ் எழுப்பிய நான்முகக் கூர்நுனிக்கம்பம், இடம்; கர்னக்

தூத்மோஸ் தனது ஆட்சிக் காலத்தில் பல எகிப்தியக் கோயில்களையும், கல்லறைகளையும் கட்டினார். கர்னக் இடமிடத்தில், கட்டிடக் கலைஞர் இனேனியின் மேற்பார்வையில் மிகப்பெரிய அளவிலான கட்டிடங்கள் கட்டப்பட்டது.[5]

இறப்பும், அடக்கமும்[தொகு]

முதலாம் தூத்மோஸ் மறைந்த பின் அவரது சடலம் மம்மி முறையில் பதப்படுத்தி மன்னர்களின் சமவெளியில் உள்ள கல்லறை கட்டிடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இக்கல்லறைக் கோயிலைக் கட்டியவர் கட்டிடக் கலைஞர் இனேனி ஆவார்.

மன்னர்களின் பள்ளத்தாக்கில் உள்ள மன்னர் முதலாம் தூத்மோசின் கல்லறை, தற்போது கல்லறை எண் KV20 எனப் பெயரிடப்பட்டுள்ளது.[6]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Clayton, Peter. Chronicle of the Pharaohs, Thames and Hudson Ltd, paperback 2006, p.100
 2. Thutmose I
 3. Grimal, Nicolas. A History of Ancient Egypt. p.202. Librairie Arthéme Fayard, 1988.
 4. Ancient Egyptian Chronology, chapter 10, Egyptian Sirius/Sothic Dates and the Question of the Sirius based Lunar Calendar, 2006 Rolf Krauss pgs. 439-457
 5. Breasted (1906) p.41
 6. "KV 20 (Thutmes I and Hatshepsut)". Theban Mapping Project (2008). பார்த்த நாள் 13 October 2012.

ஆதார நூற்பட்டியல்[தொகு]

 • Jürgen von Beckerath (1997). Chronologie des Pharaonischen Ägypten. Verlag Philipp von Zabern.. 
 • Bleiberg, Edward (2001). "Thutmose I," The Oxford Encyclopedia of Ancient Egypt. Ed. Donald Redford. Vol. 3. Oxford University Press. 
 • Breasted, James Henry (1906). Ancient Records of Egypt, Vol. II. University of Chicago Press, Chicago. 
 • Erman, Adolf (1894). Life in Ancient Egypt. Macmilian and Company, London. 
 • Gardiner, Alan (1964). Egypt of the Pharaohs. Oxford University Press. 
 • Grimal, Nicolas (1988). A History of Ancient Egypt. Librairie Arthéme Fayard. 
 • Helk, Wolfgang (1983). Schwachstellen der Chronologie-Diskussion. Göttinger Miszellen, Göttingen. 
 • Maspero, Gaston. History Of Egypt, Chaldaea, Syria, Babylonia, and Assyria, Volume 4 (of 12), Project Gutenberg EBook, Release Date: December 16, 2005. EBook #17324. http://www.gutenberg.org/dirs/1/7/3/2/17324/17324-h/v4c.htm#image-0047. 
 • Shaw, Ian; and Nicholson, Paul (1995). The Dictionary of Ancient Egypt. The British Museum Press. 
 • Shaw, Ian (2003). Exploring Ancient Egypt. Oxford University Press. 
 • Smith, G Elliot (2000). The Royal Mummies (reprint). Duckworth. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_தூத்மோஸ்&oldid=2981083" இருந்து மீள்விக்கப்பட்டது