உள்ளடக்கத்துக்குச் செல்

முதலாம் அமெனம்ஹத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதலாம் அமெனம்ஹத்
எகிப்திய பார்வோன் முதலாம் அமெனம்ஹத்தின் கல்லறையில் நினைவுச்சின்னம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 1991–1962 ; (கிமு 1939–1910), எகிப்தின் பன்னிரண்டாம் வம்சம்
முன்னவர்நான்காம் மெண்டுகொதேப்
பின்னவர்முதலாம் செனுஸ்ரெத்
துணைவி(யர்)நெபரிதாத்ஜெனெம்
பிள்ளைகள்முதலாம் செனுஸ்ரெத், மூன்றாம் நெபெரு, நெபருசெரித், கயெத்
தந்தைசெனுஸ்ரெத்
தாய்நெபர்ரெத்
அடக்கம்முதலாம் அமெனம்ஹத்தின் பிரமிடு, எல்-லிஸ்ட், எகிப்து

முதலாம் அமெனம்ஹத் (Amenemhat I - Amenemhet I) பொற்காலத்திய எகிப்தின் மத்தியகால இராச்சியத்தை ஆண்ட பனிரெண்டாம் வம்சத்தை நிறுவியவரும், வம்சத்தின் முதல் பார்வோனும் ஆவார்.[1] இவர் கிமு 1991 - கிமு 1962 முடிய 29 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்.[2] மேலும் இவர் கிமு 1939 முதல் கிமு 1910 முடிய ஆட்சி செய்ததாக தொல்லியல் வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.[3]

இவர் மெசொப்பொத்தேமியா மற்றும் தெற்கு எகிப்திற்கு கீழ் உள்ள நூபியா பகுதிகளை இராணுவ நடவடிக்கைகள் மூலம் வென்றவர் என குனும்ஹொதேப் கல்வெட்டுக்கள் கூறுகிறது.[4]

மறைவு மற்றும் முதலாம் அமெனம்ஹத்தின் பிரமிடு

[தொகு]

முதலாம் அமெனம்ஹத் தன் மகன் முதலாம் செனுஸ்ரெத்தால் அல்லது மெய்காவலர்களால் கொல்லப்பட்டதாகவும் பல்வேறாக பண்டைய எகிப்திய இலக்கியங்கள் கூறுகிறது. மேல் எகிப்தின் (தெற்கு எகிப்து) நைல் நதியின் மேற்கே அமைந்த முதலாம் அமெனம்ஹத்தின் கல்லறைக் கோயில் பிரமிடு மென்மையான சுண்ணாம்புக் கற்களால் நிறுவப்பட்டுள்ளது.

படக்காட்சிகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Amenemhat I
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Amenemhet I, KING OF EGYPT
  2. D Wildung, L'Âge d'Or de L'Égypte - le Moyen Empire, Office de Livre, 1984
  3. Erik Hornung; Rolf Krauss; David A Warburton, eds. (2006). Ancient Egyptian chronology. Brill. ISBN 9004113851. கணினி நூலகம் 901251009.
  4. Pharaoh: Amenemhat I (Sehetepibre) euler.slu.edu

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_அமெனம்ஹத்&oldid=3449723" இலிருந்து மீள்விக்கப்பட்டது