உள்ளடக்கத்துக்குச் செல்

நய்நெத்செர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நய்நெத்செர்
[[File:
|frameless|alt=|சேத் திருவிழாவிற்கான ஆடை அணிந்த மன்னர் நய்நெத்செரின் சிறிய சிற்பம்]]
சேத் திருவிழாவிற்கான ஆடை அணிந்த மன்னர் நய்நெத்செரின் சிறிய சிற்பம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்43-45 ஆண்டுகள், கிமு 2740), எகிப்தின் இரண்டாம் வம்சம்
முன்னவர்நெப்ரா
பின்னவர்வாத்ஜென்ஸ் அல்லது வெக்நெக் (உறுதி செய்யப்படவில்லை)
அடக்கம்சக்காரா
அபிதோஸ் மன்னர்கள் பட்டியலில் வரிசை எண் 11-இல் பார்வோன் நய்நெத்செரின் பெயர் குறுங்கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது
மன்னர் நய்நெத்செர் மற்றும் நைல் வடிநில பெண் கடவுள் பெயர் பொறித்த உடைந்த மட்பாண்டம்
மன்னர் சேத்-பெரிப்சென் கல்லறையில் கிடைத்த மன்னர் நய்நெத்செரின் பெயர் பொறித்த உடைந்த மட்பாண்டம்.[1]
மன்னர் ஜோசெர் பிரமிடில் கிடைத்த நய்நெத்செரின் பெயர் பொறித்த பாத்திரம்


நய்நெத்செர் (Nynetjer (பிற பெயர்கள்: Ninetjer மற்றும்Banetjer) பண்டைய எகிப்தை ஆண்ட இரண்டாம் வம்சத்தின் மூன்றாம் மன்னர் ஆவார். இவர் கிமு மூவாயிரம் ஆண்டில் எகிப்தை 43 அல்லது 45 ஆண்டுகள் ஆட்சி செய்தார். சக்காரா மன்னர்கள் பட்டியல் மற்றும் துரின் மன்னர்கள் பட்டியல்களில் பார்வோன் நய்நெத்செரின் பெயர் குறுங்கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் அபிதோஸ் மன்னர்கள் பட்டியலில் வரிசை எண் 11-இல் பார்வோன் நய்நெத்செரின் பெயர் குறுங்கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இவரது கல்லறை சக்காரா நகரத்தில் உள்ளது. இவரது குழந்தைகள் வாத்ஜென்ஸ் அல்லது வெக்நெக் என்து உறுதி செய்யப்படவில்லை.

ஆட்சிக் காலம்

[தொகு]
மனன்ர் நய்நெத்செரின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளும், ஆண்டுகளும் (பலெர்மோ கல்) வலமிருந்து இடமாக படிக்க


எகிப்தின் ஐந்தாம் வம்சத்தினர் நிறுவிய பலெர்மோ கற்பலகையில் எகிப்தின் முதல் வம்சத்தினர் முதல் ஐந்தாம் வம்சத்தின் ஆட்சியாளர்கள் வரையிலான பெயர்கள், ஆட்சிக் காலம், கால்நடைகளின் கணக்கெடுப்பு, நைல் நதியின் வெள்ள நீர்மட்டம் போன்ற முக்கிய நிகழ்வுகள் குறித்துள்ளனர்.[2] மன்னர் நய்நெத்செரின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:

 • 7ஆம் ஆண்டில்: ஓரசு கடவுளின் மெய்காவலன். எகிப்தில் மூன்றாம் முறையாக கால்நடைகளின் எண்ணிக்கை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. ...(rest is missing)
 • 8ஆம் ஆண்டில்: கோயில் அஸ்திவாரம் அமைப்பதற்கான சடங்குகள்[2])நைல் நதியில் நீர் மட்டம் 1.57 மீட்டர் ஆக உயர்ந்தது.
 • 9ஆம் ஆண்டில்:நான்காம் முறையாக எகிப்தில் கால்நடைகளின் எண்ணிக்கை கணக்கெடுப்பு நடைபெற்றது. நைல் நதியில் நீர் மட்டம் 1.09 மீட்டர் ஆக உயர்ந்தது.
 • 10ஆம் ஆண்டில்: நைல் நதியில் நீர் மட்டம் உயர்வு 1.09 மீட்டர்
 • 11ஆம் ஆண்டில்:நைல் நதியில் நீர் மட்டம் உயர்வு 1.98 மீட்டர்
 • 12ஆம் ஆண்டில்:நைல் நதியில் நீர் மட்டம் உயர்வு 1.92 மீட்டர்
 • 13ஆம் ஆண்டில்:ஆறாம் முறையாக எகிப்தில் கால்நடைகளின் எண்ணிக்கை கணக்கெடுப்பு நடைபெற்றது. நைல் நதியில் நீர் மட்டம் உயர்வு 0.52 மீட்டர்
 • 14ஆம் ஆண்டில்: வடக்கு எகிப்தில் இரா கடவுளுக்கான கோயில் எழுப்பட்டது.
 • 15ஆம் ஆண்டில்:ஏழாம் முறையாக கால்நடைகளின் எண்ணிக்கை கணக்கெடுப்பு.நைல் நதியில் நீர் மட்டம் உயர்வு 2.15 மீட்டர்
 • 16ஆம் ஆண்டில் :வடக்கு எகிப்தில் அபிஸ் கடவுளுக்காக இரண்டாவது எருது ஓட்டம் நடைபெற்றது. நைல் நதியில் வெள்ள நீர் மட்டம் 1.92 மீட்டர்
 • 17ஆம் ஆண்டில்:எட்டாவது கால்நடை கணக்கெடுப்பு. நைல் நதி வெள்ள நீர் மட்டம் 2.40 மீட்டர்
 • 18ஆம் ஆண்டில்:நைல் நதி வெள்ள நீர் மட்டம் 2.21 மீட்டர்
 • 19ஆம் ஆண்டில்:ஒன்பதாவது கால்நடைகளின் கணக்கெடுப்பு.நைல் நதி வெள்ள நீர் மட்டம் 2.25 மீட்டர்
 • 20ஆம் ஆண்டில்: மன்னரின் இறந்த தாய்க்கான சடங்குகள், நைல் நதி வெள்ள நீர் மட்டம் 1.92 மீட்டர்
 • 21ஆம் ஆண்டில்:பத்தாவது கால்நடைகளின் கணக்கெடுப்பு

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
 1. W.M. Flinders Petrie: The royal tombs of the first dynasty, 1901, Part II, p.26-27, Pl VIII.13.
 2. 2.0 2.1 after Siegfried Schott: Altägyptische Festdaten, Verlag der Akademie der Wissenschaften und der Literatur, Mainz/Wiesbaden 1950, page 59–67. See also: Francesco Raffaele: Ninetjer (nswt-bity Nynetjer)

வெளி இணைப்புகள்

[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=நய்நெத்செர்&oldid=3449280" இலிருந்து மீள்விக்கப்பட்டது