உள்ளடக்கத்துக்குச் செல்

இரண்டாம் பெப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்டாம் பெப்பி
பெப்பி, பியாப்ஸ் அல்லது பியோப்ஸ்
தாயின் மடியில் குழந்தை இரண்டாம் பெப்பி
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 2319 – 2224, எகிப்தின் ஆறாம் வம்சம்
முன்னவர்முதலாம் மெரென்ரே நெம்டியம்சாஃப்
பின்னவர்மெரன்ரே நெம்பியம்சாஃப்
துணைவி(யர்)4
தந்தைமுதலாம் மெரென்ரே நெம்பியம்சாஃப்
தாய்இரண்டாம் அன்கேஸ்சென்பெப்பி
பிறப்புகிமு 2325
இறப்புகிமு 2224
அடக்கம்சக்காராவின் தெற்கு பிரமிடு
நினைவுச் சின்னங்கள்சக்கராவின் தெற்கு பிரமிடு

இரண்டாம் பெப்பி (Pepi II); பன்டைய எகிப்தின் பழைய எகிப்து இராச்சியத்தை ஆண்ட ஆறாம் வம்சத்தின் 5-ஆம் பார்வோன் ஆவார். புது இராச்சியத்தின் எகிப்திய மன்னர்களின் பட்டியல் படி, இர்ண்டாம் பெப்பி, ஆறு வயதில் அரியணை ஏறி, பண்டைய எகிப்தை கிமு 2319 முதல் கிமு 2224 முடிய 91 ஆண்டுகள் ஆண்டதாகக் குறிப்பிடுகிறது.[2] இவரது பட்டப் பெயர் நெபர் கரே ஆகும். இரண்டாம் பெப்பியின் நீண்ட் கால ஆட்சிக் காலத்தின் போது பழைய எகிப்து இராச்சியம் வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்தது. இவரது கல்லறைப் பிரமிடு தெற்கு சக்காராவில் உள்ளது. இவரது ஆட்சியின் முடிவில் உள்ளூர் நிலக்கிழார்களின் ஆதிக்கம் பெருகத் துவங்கியதாலும், இவருக்குப் பின் வந்த இரண்டு பார்வோன்கள் திறமையற்றவர்களாக இருந்தமையாலும், ஆறாம் வம்சத்தின் ஆட்சி கிமு 2181-இல் முடிவுற்றது. பின்னர் 1725-இல் போனீசியா நாட்டின் ஐக்சோஸ் வம்சத்தவர்களின் முதலாம் இடைநிலைக்காலம் துவங்கியது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "VIth Dynasty". Archived from the original on 2009-04-17. பார்க்கப்பட்ட நாள் 2009-07-22.
  2. Pepi II

ஆதார நூற்பட்டியல்

[தொகு]
  • Dodson, Aidan. Hilton, Dyan. 2004. The Complete Royal Families of Ancient Egypt, Thames & Hudson
  • Dodson, Aidan. "An Eternal Harem: Tombs of the Royal Families of Ancient Egypt. Part One: In the Beginning". KMT. Summer 2004.
  • Shaw, Ian. Nicholson, Paul. 1995. The Dictionary of Ancient Egypt, Harry N. Abrams, Inc. Publishers.
  • Spalinger, Anthony. Dated Texts of the Old Kingdom, SAK 21, (1994), pp. 307–308
  • Oakes, Lorna and Lucia Gahlun. 2005. Ancient Egypt. Anness Publishing Limited.
  • Perelli, Rosanna, "Statuette of Pepi II" in Francesca Tiradriti (editor), The Treasures of the Egyptian Museum, American University in Cairo Press, 1999, p. 89.

வெளி இணைப்புகள்

[தொகு]



"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_பெப்பி&oldid=3408733" இலிருந்து மீள்விக்கப்பட்டது