உள்ளடக்கத்துக்குச் செல்

அக்கெனதென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்கெனதென்
நான்காம் அமெனோபிசு, நபுருருரேயா, இக்னேதோன்[1]
பார்வோன் அக்கெனதெனின் சிலை, அமர்னா
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்1353–1336 BC[2] or
1351–1334 BC[3], எகிப்தின் பதினெட்டாம் வம்சம்
முன்னவர்மூன்றாம் அமென்கோதேப்
பின்னவர்சுமென்க்கரே
  • Prenomen
    Nefer-kheperu-Re, wa-en-Re (Year 1–17)[4]
    The perfect one of the manifestations of Re, the unique one of Re[4]
  • M23L2
    ranfrxprZ3ra
    wa
    n
  • Nomen
    Imen-hetep(u) netjer heqa waset (Year 1–5)[4]
    Amun is satisfied, god, and ruler of Thebes[4]
    G39N5<
    imn
    n
    HtpR8S38R19
    >

    Akh-en-Iten (after Year 5)[4]
    The one who is beneficial to the Aten[4]
  • G39N5
    it
    n
    ra
    G25x
    n
  • Horus name
    Ka nakht qai shuti (Year 1–5)[4]
    Victorious bull, high of plumes[4]
    G5
    <h0
    E1
    D40
    N29A28S9
    h0>

    Mery Iten (after Year 5)[4]
    Beloved of the Aten[4]
  • G5
    E1
    D40
    it
    n
    ra
    N36
  • நெப்டி பெயர்
    Wer nesyt em ipet swt (Year 1–5)[4]
    Great of kingship in Karnak[4]
    G16wr
    r
    swt
    n
    iimit
    p
    Q1t
    Z2

    Wer-nesut-em-Akhetaten (after Year 5)[4]
    Great of kingship in Akhetaten[4]
  • G16
    wr
    r
    swtiiAa13
    Axt
    t pr
    it
    n
    ra
  • Golden Horus
    Wetjes khau em iunu shemay (Year 1–5)[4]
    Elevated of appearances in southern Heliopolis[4]
    G8U39Y1N28
    Z2
    mO28W24
    O49
    M27

    Wetjes ren en Iten (after Year 5)[4]
    Who has elevated the name of the Aten[4]
  • G8
    U39r
    n
    V10
    n
    it
    n
    ra

துணைவி(யர்)நெஃபர்டீட்டீ
கியா
மெரிததென்
தாடுக்கிபா
பிள்ளைகள்சமென்கரே?
மெரிததேன்
மெக்கேததென்
அன்கேஸ்செனமூன்
நெபெர்நெபெருவாதென் தசெரித்
நெபெநெருருரே
இளவரசி செதெபென்ரே
துட்டன்காமன்
தந்தைமூன்றாம் அமென்கோதேப்
தாய்தீயு
இறப்புகிமு 1336 அல்லது 1334
அடக்கம்அக்கெனதென் கல்லறை, அமர்னா[5]
நினைவுச் சின்னங்கள்அமர்னா
மதம்பண்டைய எகிப்திய சமயம்

அக்கேனதேன் அல்லது நான்காம் அமென்கோதேப் (Akhenaten) (/ˌækəˈnɑːtən/;[1] also spelled Echnaton,[6] Akhenaton,[7] Ikhnaton,[8] and Khuenaten;[9][10] பார்வோன் அக்கெனதேன் புது எகிப்து இராச்சியத்தை (கிமு 1351–1334) 17 ஆண்டுகள் ஆண்ட 18-ஆம் வம்சத்தின் 9-ஆம் பார்வோன் ஆவார். இவர் கிமு 1336 அல்லது 1334-இல் மறைந்தார்.

இவர் தனது இஷ்ட தெய்வமான சூரியக் கடவுளான இராவின் சூரியக் கதிர்களின் தேவதையான அதின் வழிபாட்டை பண்டைய எகிப்தில் புகுத்தியவர். அதின் கடவுளைப் பெருமைபடுத்தும் வகையில், தனது ஐந்தாம் ஆண்டு ஆட்சியின் போது, தனது இயற்பெயரான நான்காம் அமென்கோதேப் என்பதை அக்கெனதேன் எனப்பெயர் மாற்றிக் கொண்டவர். மேலும் எகிப்தில் பல கடவுள் வழிபாட்டை ஒழித்து மக்கள் அனைவரும் அதின் கடவுளை மட்டும் வழிபடும் ஓரிறைக் கொள்கையை நடைமுறைப்படுத்தினார்.

இவரது பட்டத்து இராணி நெஃபர்டீட்டீ அழகும், அறிவும் நிரம்பியவள். அக்கேனதெனின் மறைவிற்குப் பின் பத்தொன்பதாம் வம்ச மன்னர்கள், அக்கெனதென் நிறுவிய கல்லறைகள் மற்றும் கோயில்கள் அழித்ததுடன், எகிப்திய மன்னர்களின் பட்டியலிலிருந்து அக்கெனதேனின் பெயர் நீக்கப்பட்டது. மேலும் அவரது (அதின் கடவுளின்) ஓரிறை வழிபாட்டுக் கொள்கை ஒழிந்து, எகிப்தில் மீண்டும் பாரம்பரியக் கடவுள்களின் வழிபாடு படிப்படியாக வளர்ந்தது. [11][12]

கிபி பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடைபெற்ற தொல்லியல் அகழாய்வில், பார்வோன் அக்கெனதேன் நிறுவிய அமர்னா நகரமும், அதின் கடவுளின் கோயிலும் கண்டுபிடிக்கப்பட்டது.[13]

1907-இல் பண்டைய அமர்னா அகழாய்வில் பார்வோன் அக்கெனதேன் மற்றும் அவர் மகன் துட்டன்காமனின் கல்லறைகள் கண்டிபிடிக்கப்பட்டது.[14]

நான்காம் அமென்கொதேப்பின் ஆட்சி

[தொகு]
தன் பெயரை அக்கெனதென் என மாற்றிக் கொள்வதற்கு முன்னர் அக்கெனதெனின் நினைவுச் சிற்பம், பெர்லின் நியுஸ்செஸ் அருங்காட்சியகம்

புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட எகிப்தின் பதினெட்டாம் வம்சத்தை சேர்ந்த பார்வோன் மூன்றாம் அமென்கோதேப் - இராணி தீயுவின் மகன் நான்காம் அமென்கோதேப் ஆவார். மூன்றாம் அமென்கோதேப் தனது ஆட்சியின் இறுதி எட்டு ஆண்டு காலம் வரை தன் மகன் நான்காம் அமென்கோதேப் எனும் அக்கெனதேனுடன் ஆட்சியை பகிர்ந்து கொண்டு ஆண்டார்.[15][16]

பார்வோன் நான்காம் அமென்கொதேப் எனும் பெயரை அக்கெனதென் என மாற்றிக் கொளவதற்கு முன்னிருந்த வெண்கலத் தகடு, பிரித்தானிய அருங்காட்சியகம்

தீபை நகரத்தில் மணி மகுடம் சூடிய நான்காம் அமென்கோதேப் எனும் அக்கெனதென், புதிய நகரத்தை நிறுவத் துவங்கினார். தீபை நகரத்தில், தனது இஷ்ட தெய்வமான இராவின் சூரியக் கதிர்களின் தெய்வமான அதின் கடவுளுக்கு கோயில் மற்றும் அரன்மனைகளை எழுப்பினார்.

பெயர் மாற்றம்

[தொகு]

பார்வோன் நான்காம் அமென்கொதேப் தனது ஆட்சிக் காலத்தின் ஐந்தாம் ஆண்டில் அமர்னா நகரத்தில் வருகை புரிந்து, தனது பெயரை அக்கெனதென் என அலுவல் முறைப்படி மாற்றிக் கொண்டார். [17]

சமயக் கொள்கைகள்

[தொகு]
பார்வோன் அக்கெனதென் (நடுவில்) மற்றும் தன் குடும்பத்தினருடன் அதின் எனும் சூரியக் கதிர் கடவுளை வழிபடுதல்

பண்டைய எகிப்தின் குறிப்புகள், பார்வோன் அக்கெனதென், தான் சீரமைத்த அதின் சமயக் கொள்கைகளை தன் குடிமக்கள் மீது வலுக்கட்டாயமாக திணித்தார் எனக்குறிப்பிடுகிறது.[18]எகிப்தில் முக்கியத்தும் பெற்ற அமூன் கடவுள் உள்ளிட்ட பல கடவுள்களின் பெயரை மாற்றிக் குறிப்பிட்டார்.[19] பண்டைய எகிப்தின் அனைத்து கடவுள்களையும், தான் வனங்கும் சூரியக் கடவுளான அதெனுக்கு கீழாகக் கருதி வழிபட வைத்தார். ஓரசு தெய்வத்தின் கண் வடிவத்தைத் தாயத்தாக கழுத்தில் கட்டி கொள்ள மக்களை வலியுறுத்தினார். பார்வோன் அக்கெனதெனின் இறப்பிற்குப் பின்னர் பத்தாண்டுகளில், பண்டிய எகிப்தில், பழைய சமய வழிபாடுகள் மீண்டும் படிப்படியாக வளரத்துவங்கியது.

அக்கெனதெனின் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்ட பெரும்பாலான கோயில்கள் மற்றும் கட்டிட அமைப்புகள், அவரின் இறப்பிற்குப் பின் எகிப்தின் பத்தொன்பதாம் வம்ச பார்வோன்களால் அழிக்கப்பட்டது. அழிக்கப்பட்ட கட்டிட கற்களை புதிதாக நிறுவப்பட்ட கல்லறைக் கோயில்களின் அஸ்திவாரக் கற்களாகப் பயன்படுத்தப்பட்டது.

அக்கெனதென் மற்றும் குடும்பச் சிற்பங்கள்

[தொகு]

அக்கெனதெனின் ஆட்சிக் காலத்தில் அனைத்துத் துறைகளிலும் கலைநயம் சிறப்பாக விளங்கியது. பண்டைய எகிப்தியக் கோயில்கள் மற்றும் பிரமிடுகள் மற்றும் கல்லறைகளில் அரச குடும்பத்தினர், பொது மக்கள், விலங்குகள் மற்றும் தாவரங்களின் சித்திரங்கள், உருவச்சிலைகள் நிறுவப்பட்டது.[20]

பார்வோன் அக்கெதென் நீல நிற மகுடத்தை அணிந்திருக்கும் காட்சி

பார்வோன் அக்கெதென் மற்றும் அவர்தம் இராணி நெஃபர்டீட்டீ மற்றும் குழந்தைகள் அதின் எனும் சூரியக் கடவுளின் கதிர்களை வழிபடும் சிற்பங்கங்களும், மற்றும் இராணி நெஃபர்டீட்டீயின் அழகிய சிற்பங்கள் கலைநயத்துடன் செதுக்கப்பட்டது.

பார்வோன் அக்கெதென் மற்றும் இராணி நெஃபர்டீட்டீ உருவங்கள், (கிமு 1352 - 1336)

குடும்பம் மற்றும் உறவினர்கள்

[தொகு]
பார்வோன் அக்கெதென், இராணி நெஃபர்டீட்டீ மற்றும் குழந்தைகள் அதின் எனும் சூரியக் கடவுளை வழிபடுதல்

பார்வோன் அக்கெனதெனனுக்கு நெஃபர்டீட்டீ,கியா, மெரிததென் மற்றும் தாடுக்கிபா என நான்கு மனைவியரும், சமென்கரே, மெரிததேன், மெக்கேததென், அன்கேஸ்செனமூன், நெபெர்நெபெருவாதென் தசெரித், நெபெநெருருரே, துட்டன்காமன் என எட்டு மகன்களும் இளவரசி செதெபென்ரே என்ற மகளும் இருந்தனர். [21]

வெளிநாட்டு உறவுகள்

[தொகு]
களிமண் பலகைகளில் ஆப்பெழுத்தில் எழுதப்பட்ட அமர்னா கடிதங்களில் ஒன்று
அக்கெனதெனின் தலைச்சிற்பம், அமர்னா

அக்கெனதெனின் கல்லறைக் கோயிலில் அகழாய்வில் கண்டெடுத்த முக்கியமான அமர்னா கடிதங்கள் மூலம், அக்கெனதெனின் ஆட்சி முறை, பண்டைய எகிப்தின் வெளிநாட்டுக் கொள்கைகள் அறியமுடிகிறது. மெசொப்பொத்தேமியா உள்ள மித்தானி, இட்டைட்டு, அசிரிய மன்னர்கள், எகிப்திய பார்வோன்களுக்கு, களிமண் பலகைகளில் ஆப்பெழுத்தில் எழுதிய கடிதங்கள் வாயிலாக நிதியுதவியாக கட்டித் தங்கம் கேட்டதையும், பார்வோன் அக்கெனதெனை தங்களின் பேரரசராக ஏற்றதும் தெரியவருகிறது. மித்தானி இராச்சிய மன்னர் தன் மகள் தாடுக்கெப்பாவை அக்கெனதெனுக்கு மணமுடித்துக் கொடுத்தார் என்ற செய்தி அமர்னா கடிதங்கள் மூலம் தெரியவருகிறது.

இறப்பு, கல்லறை மற்றும் வாரிசுகள்

[தொகு]

பார்வோன் அக்கெனதென் தனது ஆட்சிக் காலத்தின் 17-வது ஆண்டில் இறந்ததாக தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.[22] இவரது கல்லறை தீபை நகரத்தில் எழுப்பட்டது. இவரது மறைவிற்குப் பின் அவரது மகன் துட்டன்காமன் எகிப்தின் அரியணை ஏறினார்.

படக்காட்சிகள்

[தொகு]

பண்டைய எகிப்தின் பார்வோன்கள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Akhenaten".. அணுகப்பட்டது 2008-10-02. 
  2. "Akhenaton". Encyclopædia Britannica.
  3. Beckerath (1997) p. 190
  4. 4.00 4.01 4.02 4.03 4.04 4.05 4.06 4.07 4.08 4.09 4.10 4.11 4.12 4.13 4.14 4.15 4.16 4.17 Ronald J. Leprohon (30 April 2013). The Great Name: Ancient Egyptian Royal Titulary. SBL Press. p. 206. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-58983-736-2.
  5. "News from the Valley of the Kings: DNA Shows that KV55 Mummy Probably Not Akhenaten". Kv64.info. 2010-03-02. Archived from the original on 2010-03-07. பார்க்கப்பட்ட நாள் 2012-08-25.
  6. Dominic Montserrat, Akhenaten: History, Fantasy and Ancient Egypt, Psychology Press, 2003, pp. 105, 111
  7. "Akhenaton (King of Egypt)". Britannica.com. அணுகப்பட்டது 2012-08-25. 
  8. Robert William Rogers, Cuneiform parallels to the Old Testament, Eaton & Mains, 1912, p. 252
  9. K.A Kitchen, On the reliability of the Old Testament, Wm. B. Eerdmans Publishing, 2003. p. 486 Google Books
  10. Joyce A. Tyldesley, Egypt: how a lost civilization was rediscovered, University of California Press, 2005
  11. Lise Manniche, Akhenaten Colossi of Karnak (Cairo 6G: American University in Cairo Press, 2000), ix.
  12. Trigger et al. (2001), pp. 186–87
  13. Egypt's Golden Empire: Pharaohs of the Sun (2002; New York: PBS Distribution, 2009), Internet video.
  14. "See the KV 55 Mummy & Tutankhamen". Anubis4_2000.tripod.com. பார்க்கப்பட்ட நாள் 2012-08-25.
  15. "Pharaoh power-sharing unearthed in Egypt"Daily News Egypt. February 6, 2014,
  16. "Proof found of Amenhotep III–Akhenaten co-regency" thehistoryblog.com
  17. Dodson, Aidan; Amarna Sunset (2009). Nefertiti, Tutankhamun, Ay, Horemheb, and the Egyptian Counter-Reformation. The American University in Cairo Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-977-416-304-3 pp. 8, 170
  18. Hornung, Erik (1992-01-01). "The Rediscovery of Akhenaten and His Place in Religion". Journal of the American Research Center in Egypt 29: 43–49. doi:10.2307/40000483. 
  19. Allen, James P. (2005). "Akhenaton". In Jones, L (ed.). Encyclopedia of Religion. Macmillan Reference. pp. 217–21.
  20. "The Age of Akhenaten". 2017-04-20. http://www.nationalgeographic.com/magazine/2017/05/akhenaten-revolutionary-egypt-king-art-architecture/?sf72336685=1. 
  21. Schemm, Paul (2010-02-16). "A Frail King Tut Died From Malaria, Broken Leg". USA Today. https://www.usatoday.com/tech/science/discoveries/2010-02-16-king-tut_N.htm. 
  22. Allen (2006), p. 1

ஆதார நூற்பட்டியல்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
அக்கெனதென் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி



"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கெனதென்&oldid=3752400" இலிருந்து மீள்விக்கப்பட்டது