இரண்டாம் தூத்மோஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இரண்டாம் தூத்மோஸ்
கர்னாக் கோயில் வளாகத்தில் இரண்டாம் தூத்மோசின் சிற்பம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்சர்சைக்குரியது, கிமு 1493–1479, கிமு 1513–1499, எகிப்தின் பதினெட்டாம் வம்சம்
முன்னவர்முதலாம் தூத்மோஸ்
பின்னவர்இராணி ஆட்செப்சுட்டு
துணைவி(யர்)ராணி ஆட்செப்சுட்டு
பிள்ளைகள்மூன்றாம் தூத்மோஸ், நெபெருரரே
தந்தைமுதலாம் தூத்மோஸ்
தாய்முத்னோப்பிரெத்
பிறப்புகிமு 1510
இறப்புகிமு 1479
அடக்கம்தேர் எல் பகாரி

இரண்டாம் தூத்மோஸ் (Thutmose II) பண்டைய எகிப்தின் புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட பதினெட்டாம் வம்சத்தின் நான்காம் பார்வோன் ஆவார். இரண்டாம் தூத்மோஸ் எகிப்தை கிமு 1493 முதல் 1479 முடிய 14 ஆண்டுகள் ஆண்டார். இவரது பட்டத்தரசி ஆட்செப்சுட்டு ஆவார். இரண்டாம் தூத்மோசின் இறப்பிறகுப் பின்னர் அவரது பட்டத்தரசி ஆட்செப்சுட்டு எகிப்தை கிமு 1507 முதல் கிமு 1458 முடிய 21 ஆண்டுகள் ஆண்டார். ஆட்செப்சுட்டுவின் மறைவிற்குப் பின் மூன்றாம் தூத்மோஸ் அரியணை ஏறினார். 1881-இல் இரண்டாம் தூத்மோசின் மம்மி தேர் எல் பகாரியில் கண்டுபிடிக்கப்பட்டது. [1]

இரண்டாம் தூத்மோசின் கல்லறைக் கோயில் தீபை நகரத்திற்கு அருகே தேர் எல் பகாரியில் இராணி ஆட்செப்சுட்டுவின் கல்லறைக் கோயிலுடன் உள்ளது. இரண்டாம் தூத்மோசின் மம்மி கெய்ரோ எகிப்திய அருகாட்சியகத்தில் உள்ளது.

இரண்டாம் தூத்மோசின் மம்மித் தலை
இரண்டாம் தூத்மோசின் பெயர் கொண்ட சிவப்பு குறுங்கல்வெட்டு

பார்வோன்களின் அணிவகுப்பு[தொகு]

3 ஏப்ரல் 2021 அன்று எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்த 18 பார்வோன்கள் மற்றும் 4 அரசிகளின் மம்மிகளை எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு அழகிய வண்டிகளில் ஏற்றி, அணிவகுப்பாக எடுத்துச் செல்லும் போது பார்வோன் இரண்டாம் தூத்மோஸ் மம்மியும் எடுத்துச் செல்லப்பட்டது. [2][2]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_தூத்மோஸ்&oldid=3130386" இருந்து மீள்விக்கப்பட்டது