எட்டாம் தாலமி
எட்டாம் தாலமி | |
---|---|
![]() | |
பண்டைய எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்ச பார்வோன் | |
ஆட்சிக்காலம் | கிமு 169–164 ஆறாம் தாலமி மற்றும் இரண்டாம் கிளியோபாட்ராவுடன் கிமு 144-116 இரண்டாம் கிளியோபாட்ரா மற்றும் மூன்றாம் கிளியோபாட்ராவுடன், தாலமி |
முன்னவர் | ஆறாம் தாலமி மற்றும் இரண்டாம் கிளியோபாட்ரா |
பின்னவர் | ஒன்பதாம் தாலமி மற்றும் மூன்றாம் கிளியோபாட்ரா |
| |
துணைவி(யர்) | இரண்டாம் கிளியோபாட்ரா |
பிள்ளைகள் | ஒன்பதாம் தாலமி, பத்தாம் தாலமி, நான்காம் கிளியோபாட்ரா |
தந்தை | ஐந்தாம் தாலமி |
தாய் | முதலாம் கிளியோபாட்ரா |
பிறப்பு | ஏறத்தாழ கிமு 184 |
இறப்பு | கிமு 28 சூன் 116 (வயது: 68) |

எட்டாம் தாலமி (Ptolemy VIII Euergetes II Tryphon) பண்டைய எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்சத்தின் 7வது பார்வோன் ஆவார். மன்னர் ஐந்தாம் தாலமிக்கும், இராணி முதலாம் கிளியோபாட்ராவுக்கும் பிறந்த எட்டாம் தாலமி. இவர் அரியணை போட்டியில் தனது மூத்த உடன்பிறப்புகளான ஆறாம் தாலமி மற்றும் இரண்டாம் கிளியோபாட்ராவுடன் அரசியல் மற்றும் இராணுவ ரீதியாக பிணக்குகள் கொண்டிருந்தார்.
ஆறாம் சிரியா போரின் போது, எட்டாம் தாலமி தனது சகோதரர்களுடன் எகிப்தின் ஆட்சியைப் பகிர்ந்து கொண்டார். போரின் போது ஆறாம் தாலமி சிரியா நாட்டுப் போர் வீரர்களிடம் பிடிபட்டார். எனவே எட்டாம் தாலமி முழு உரிமையுடன் எகிப்தை ஆண்டார். சிரியா போர் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கையால் சிரியா படைகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட ஆறாம் தாலமி கிமு 168-இல் எகிப்தின் அரியணை ஏறினார். இருவருக்கும் இடையே பிணக்குகள் தீரவில்லை. கிமு 164-இல் எட்டாம் தாலமியை எகிப்திலிருந்து சைப்ரஸ் தீவிற்கு துரத்தி விட்டு, மீண்டும் ஆறாம் தாலமி எகிப்தின் அரியணை ஏறினார்.
கிமு 145-இல் ஆறாம் தாலமியின் மறைவிற்குப் பின்னர், சைப்பிரஸ் தீவிலிருந்து எகிப்திற்கு திரும்பி வந்த எட்டாம் தாலமி, தனது சகோதரியான இரண்டாம் கிளியோபாட்ராவுடன் எகிப்தின் ஆட்சியை பகிர்ந்து கொண்டார்.
எட்டாம் தாலமி தனது உறவுப் பெண் மூன்றாம் கிளியோபாட்ராவை மண்ந்து கொண்டு, எகிப்தின் இணை ஆட்சியாளராக பதவி கொடுத்தார். இதனால் கீழ் எகிப்தில் கிரேக்கர்கள் கிமு 132 முதல் 126 முடிய கிளர்ச்சி செய்தனர். இக்கிளர்ச்சியை இரண்டாம் கிளியோபாட்ரா அடக்கி கீழ் எகிப்தை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தார். இதனால் மேல் எகிப்தை எட்டாம் தாலமியும், இரண்டாம் மனைவியான மூன்றாம் கிளியோபாட்ராவும் இணைந்து ஆட்சி செய்தனர். ஆனால் எகிப்திய மக்கள் எட்டாம் தாலமியின் பக்கம் நின்றதால், கீழ் எகிப்தை ஆண்ட இரண்டாம் கிளியோபாட்ராவை போரில் வீழ்த்தி, எகிப்து முழுவதும் தனது குடும்ப ஆட்சியின் கீழ் கிமு 116 முடிய ஆண்டார். எட்டாம் தாலமியின் மறைவுக்குப் பின்னர் அவரது மகன் ஒன்பதாம் தாலமி மன்னராகவும், அவரது தாய் இரண்டாம் கிளியோபாட்ரா இணை ஆட்சியாளராகவும் செயல்பட்டனர்.
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
ஆதார நூற்பட்டியல்[தொகு]
- Chrubasik, Boris (2016). Kings and Usurpers in the Seleukid Empire: The Men who would be King. Oxford: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780198786924.
- Peter Green, Alexander to Actium (University of California Press, 1990) ISBN 0-520-05611-6
- Hölbl, Günther (2001). A History of the Ptolemaic Empire. London & New York: Routledge. பக். 143–152 & 181–194. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0415201454.
- Peter Nadig, Zwischen König und Karikatur: Das Bild Ptolemaios’ VIII. im Spannungsfeld der Überlieferung (C.H. Beck, 2007) ISBN 978-3-406-55949-5
வெளி இணைப்புகள்[தொகு]
- Ptolemy Euergetes II at LacusCurtius — (Chapter X of E. R Bevan's House of Ptolemy, 1923)
- The Will of Ptolemy VIII பரணிடப்பட்டது 2014-12-24 at the வந்தவழி இயந்திரம்