இரண்டாம் தாலமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இரண்டாம் தாலமி பிலெடெல்பஸ்
இரண்டாம் தாலமியின் சிற்பம்
பார்வோன், தாலமி பேரரசு
ஆட்சிக்காலம்கிமு 28 மார்ச் 284 – 28 சனவரி 246, தாலமி வம்சம்
முன்னவர்தாலமி சோத்தர்
பின்னவர்மூன்றாம் தாலமி
துணைவி(யர்)முதலாம் அர்சினோ
இரண்டாம் அர்சினோ
பிள்ளைகள்மூன்றாம் தாலமி
லிசிமச்சூஸ்
பெரிநைஸ்
பிலிஸ்டிசி
தாலமி ஆண்டிரோமச்சௌ
தந்தைதாலமி சோத்தர்
தாய்முதலாம் பெரேநைஸ்
பிறப்புகிமு 308/9
இறப்புகிமு 28 சனவரி 246 (வயது 62–63)

இரண்டாம் தாலமி பிலெடெல்பஸ் (Ptolemy II Philadelphus) பண்டைய எகிப்திய தாலமி வம்சம் ஆண்ட தாலமி பேரரசின் இரண்டாவது பேரரசர் ஆவார். இவர் தலாமி வம்சத்தை நிறுவிய தாலமி சோத்தரின் மகன் ஆவார். இவர் தாலமி பேரரசை கிமு 284 முதல் கிமு 246 முடிய 38 ஆண்டுகள் அரசாண்டவர்.பண்டைய எகிப்தியப் பண்பாட்டின் படி, இரண்டாம் தாலமியும், தம் உடன் பிறந்த சசோகதரியான இரண்டாம் அர்சினோவை திருமணம் செய்து கொண்டவர்.[1][2]

இரண்டாம் தாலமி அலெக்சாந்திரியா நூலகத்தை நிறுவியவர். மேலும் இவர் மத்தியத் தரைக் கடலில் உள்ள சைப்பிரஸ், சிசிலி மற்றும் ஏஜியன் கடல் தீவுகளையும், லெவண்ட் பகுதிகளில் தலாமி பேரரசை, கிழக்கின் செலூக்கியப் பேரரசுக்கு நிகராக விரிவுபடுத்தினார்.

இரண்டாம் தாலமி கிமு 275-இல் தெற்கு எகிப்தில் அமைந்த நூபியாவின் வடக்கு பகுதிகளைக் கைப்பற்றினார். கிமு 274-இல் செலூக்கியப் பேரரசின் கீழிருந்த சிரியாவைக் கைப்பற்றினார்.

பார்வோன்களின் கோட்பாடு மற்றும் பண்டைய எகிப்திய சமயக் கொள்கைகளின் படி, இரண்டாம் தாலமியும், தாலமி சோத்தரைப் பின்பற்றி, எகிப்தியக் கடவுள்கள் கோயில்களின் தலைமைப் பூசாரிகளுக்கு மதிப்பளித்தார்.

இரண்டாம் தாலமியின் பெற்றோர் தாலமி சோத்தர்-முதலாம் பெரேநைஸ் நாணயம் (இடது)-இரண்டாம் தாலமி மற்றும் சகோதரி & மனைவியான இரண்டாம் அர்சினோ (வலது)
இரண்டாம் தாலமி மற்றும் இராணி அர்சினோவின் பளிங்குக்கல் சிற்பம்
இரண்டாம் தாலமியின் கருங்கல் தலைச்சிற்பம்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

ஆதார நூற்பட்டியல்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ptolemy II
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
இரண்டாம் தாலமி
பிறப்பு: கிமு 309 இறப்பு: 246
முன்னர்
தாலமி சோத்தர்
எகிப்தின் பார்வோன்
கிமு 283–246
பின்னர்
மூன்றாம் தாலமி
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_தாலமி&oldid=2981152" இருந்து மீள்விக்கப்பட்டது