உள்ளடக்கத்துக்குச் செல்

டென் (பாரோ)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டென்
உடிமு, டேவென்
“மக்கிரெகர்-சுட்டி” அபிடோசில் உள்ள டென்னின் கல்லறையில் இருந்து.
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 2970ல் தொடங்கி 42 ஆண்டுகள்., முதலாம் வம்சம்
Coregencyமெர்நெய்த்
முன்னவர்ஜெத்,மெர்நெய்த்
பின்னவர்ஆன்டெட்சிப்
துணைவி(யர்)செமத், நாக்த்-நீத் ? குவா-நீத் ?
தந்தைஜெத்
தாய்மெர்நெய்த்
அடக்கம்கல்லறை T, உம் எல்-காப், நடு எகிப்து

ஓர்-டென், டேவென், உடிமு என்னும் பெயர்களாலும் அழைக்கப்படும் டென், எகிப்தின் துவக்க கால அரச மரபின் முதலாவது வம்சக் காலத்தில் எகிப்தை ஆட்சி செய்த ஐந்தாவது பார்வோன் ஆவான். இவர் இரு முடி அணிந்தவர். மேலும் எகிப்தை 42 ஆண்டுகள் ஆண்டவர் என பலெர்மோ கல் வெட்டுப் பலகையில் குறித்துள்ளது.

இந்தக் கலத்துக்குரிய மன்னர்களில் தொல்லியல் அடிப்படையில் சான்றுகள் அதிகம் உள்ள மன்னன் இவனாவான். தனது ஆட்சிக்காலத்தில் டென், நாட்டைச் வளம் பெறச் செய்ததுடன், பல கண்டுபிடிப்புக்களும் இவனது ஆட்சிக்காலத்துக்கு உரியவையாகக் காணப்படுகின்றன. கீழ் எகிப்து, மேல் எகிப்து இரண்டினதும் மன்னன் என்ற பெயர் பெற்ற முதல் மன்னனும், வெள்ளை, சிவப்பு ஆகிய இரண்டு முடிகளை அணிந்தவனாகக் காட்டப்படுபவனும் இவனே. அபிதோஸ் என்னும் இடத்துக்கு அண்மையில் உள்ள உம் எல்-காப்வில் உள்ள இவனது கல்லறையின் தளம் சிவப்பு, கறுப்புக் கருங்கற்களினால் ஆனது. இவ்வாறான கடினத்தன்மை கொண்ட கற்கள் கட்டிடப் பொருளாகப் பயன்பட்டது எகிப்தில் அதுவே முதல் முறை. இவனது ஆட்சிக் காலத்தில் இவனால் ஏற்படுத்தப்பட்ட அரண்மனைச் சடங்குகள் பின்வந்த ஆட்சியாளர்களாலும் பயன்படுத்தப்பட்டன. அத்துடன், இவனுக்கு அடுத்து வந்த ஆட்சியாளர்கள் இம்மன்னனுக்கு மிகுந்த மதிப்பு அளித்தனர்.

ஆட்சிக்காலத்தின் அளவு

[தொகு]

கிரேக்க வரலாற்றாளர் மனேத்தோ இந்த மன்னனை "ஔசாபைடொசு" என அழைப்பதுடன் அவரது ஆட்சிக்காலம் 20 ஆண்டுகள் என்கிறார்.[1] தூரினின் அரசமுறை நூல் அழிந்துவிட்டதால் டென்னின் ஆட்சிக்காலம் குறித்த சரியான தவல்களைப் பெறமுடியவில்லை.[2] எகிப்தியலாளர்களும், வரலாற்றாளர்களும் பலெர்மோ கல்லின் எழுத்து ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு இவனது ஆட்சிக்காலம் 42 என்று நம்புகின்றனர்.[3]

எகிப்தின் பார்வோன்களின் பட்டியல்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. William Gillian Waddell: Manetho (The Loeb Classical Library, Volume 350). Harvard University Press, Cambridge (Mass.) 2004 (Reprint), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-674-99385-3, page 33–37.
  2. Alan H. Gardiner: The Royal Canon of Turin. Griffith Institute of Oxford, Oxford (UK) 1997, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-900416-48-3; page 15 & Table I.
  3. Wolfgang Helck: Untersuchungen zur Thinitenzeit. (Ägyptologische Abhandlungen, Volume 45), Harrassowitz, Wiesbaden 1987, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-447-02677-4, page 124, 160 - 162 & 212 - 214.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]




"https://ta.wikipedia.org/w/index.php?title=டென்_(பாரோ)&oldid=3448994" இலிருந்து மீள்விக்கப்பட்டது