ஆறாம் தாலமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆறாம் தாலமி பிலோமீட்டோர்
தலைக்கவசம் அணிந்த ஆறாம் தாலமியின் சிற்பம்
பண்டைய எகிப்தின் தாலமி வம்ச பார்வோன்
ஆட்சிக்காலம்கிமு 180 – 164
கிமு 163 – கிமு 145, தாலமி வம்சம்
முன்னவர்ஐந்தாம் தாலமி
முதலாம் கிளியோபாட்ரா
பின்னவர்எட்டாம் தாலமி
இரண்டாம் கிளியோபாட்ரா
துணைவி(யர்)இரண்டாம் கிளியோபாட்ரா (எகிப்திய அரசி)
பிள்ளைகள்
தந்தைஐந்தாம் தாலமி
தாய்முதலாம் கிளியோபாட்ரா
பிறப்புகிமு மே/சூன் 186
இறப்புகிமு 145 (வயது 41)
அடக்கம்அலெக்சாந்திரியா, கீழ் எகிப்து

ஆறாம் தாலமி டோலமி (Ptolemy VI Philometor, [குறிப்பு 2] பிறப்பு:கிமு:186 -இறப்பு:கிமு 145) பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை ஆண்ட பண்டைய கிரேக்க தாலமி வம்சத்தின் ஆறாம் பார்வோன் ஆவார். இவர் பண்டைய எகிப்தை கிமு 180 முதல் கிமு 164 முடிய மற்றும் கிமு 163 முதல் 145 முடிய ஆட்சி செய்தார்.[1][2]

இவரது தந்தையும், பார்வோனுமான ஐந்தாம் தாலமி தனது 29 வயதில் இறந்த போது, 6 வயதான ஆறாம் தாலமி அரியணை ஏறினார். இவர் பருவ வயது அடையும் வரை இவரது தாய் முதலாம் கிளியோபாட்ரா எகிப்தின் காப்பாட்சியாராக செயல்பட்டார். ஆறாம் தாலமி தனது சகோதரியான இரண்டாம் கிளியோபாட்ராவை மணந்தார். ஆறாம் தாலமியின் குழந்தைகள் தாலமி யூபேட்டர், ஏழாம் தாலமி, கிளியோபாட்ரா தியா, (சிரியாவின் இராணி) மற்றும் மூன்றாம் கிளியோபாட்ரா ஆவார்.

சிரியா மீதான செலூக்கியப் பேரரசின் வெளிப்புற மோதல்களாலும், அவரது இளைய சகோதரன் எட்டாம் தாலமியுடன் நடைபெற்ற உள்நாட்டுப் போரினாலும் ஆறாம் தாலமியின் ஆட்சி சீர்குலைந்தது. ஆறாவது சிரியப் போரில் (கிமு] 170–168) தாலமியின் படைகள் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டன மற்றும் எகிப்து இரண்டு முறை செலூக்கியப் பேரரசின் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டது.

செலூக்கியப் பேரரசின் மோதல் முடிவடைந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, கிமு 164 இல் எட்டாம் தாலமியால் ஆறாம் தாலமி எகிப்திலிருந்து வெளியேற்றப்பட்டார். கீழ் எகிப்தில் உள்ளஅலெக்சாந்திரியா மக்கள் எட்டாம் தாலமிக்கு எதிராக திரும்பினர். எனவே கிமு 163 இல் ஆறாம் தாலமி மீண்டும் எகிப்தின் அரியணை ஏறினார். ஆறாம் தாலமியின் இந்த இரண்டாவது ஆட்சியில், செலூக்கியப் பேரரசு மற்றும் மற்றும் அவரது சகோதரருக்கு எதிரான மோதல்களில் மிகவும் வெற்றிகரமாக இருந்தார். எட்டாம் தாலமிக்கு ஆதரவாக கணிசமான ரோமானிய தலையீடு இருந்தபோதிலும், அவர் தனது சகோதரனை சிரைனிகாவுக்கு வெளியேற்றியதுடன், சைப்ரச்ஸ் பகுதியை ஒரு ஊஞ்சலாகப் பயன்படுத்துவதைத் திரும்பத் திரும்பத் தடுத்தார். செலூக்கியப் பேரரசின் சிம்மாசனத்திற்கான தொடர்ச்சியான போட்டியிடும் உரிமை கோருபவர்களை ஆதரிப்பதன் மூலம், எகிப்தின் ஆறாம் தாலமி, செலூக்கியப் பேரரசில் ஒரு உள்நாட்டுப் போரைத் தூண்ட உதவினார். கிமு 145 இல் ஆறாம் தாலமி செலூக்கியப் பேரரசின் சிரியாவை ஆக்கிரமித்து, ஓனோபாரஸ் போரில் மொத்த வெற்றியைப் பெற்றார். இருப்பினும் போரில் அவருக்கு ஏற்பட்ட காயங்கள் மூன்று நாட்களுக்குப் பிறகு அவரது மரணத்திற்கு வழிவகுத்தன. போரிலிருந்து கிடைத்த ஆதாயங்கள் உடனடியாக இழக்கப்பட்டு, எட்டாம் தாலமி எகிப்தின் அரியணை ஏறினார்.

திருமணமும் குழந்தைகளும்[தொகு]

ஆறாம் தாலமி தனது சகோதரியும், மனைவியுமான இரண்டாம் கிளியோபாட்ரா மூலம் பெற்ற குழந்தைகள்:

பெயர் படம் பிறப்பு இறப்பு குறிப்புகள்
தாலமி யூபேட்டர் கிமு 15 அக்டோபர் 166 கிமு ஆகஸ்டு 152 கிமு 152-இல் ஆறாம் தாலமியுடன் இணை ஆட்சியரக இருந்தார்.
கிளியோபாட்ரா தியா, சிரியாவின் இராணி AlexanderIBalasAndCleopatraThea.jpg கிமு 164 கிமு 121/0 செலூக்கியப் பேரரசரை மணந்தவர். சிரியா மாகாணத்தின் ஆட்சியராக இருந்தார்.
மூன்றாம் கிளியோபாட்ரா Cleopatra-III-at-Kom-Ombo.jpg கிமு 160–155 கிமு 101 எட்டாம் தாலமியை மணந்தவர்.

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


ஆறாம் தாலமி
பிறப்பு: கிமு 185 இறப்பு: கிமு 145
முன்னர்
ஐந்தாம் தாலமி
முதலாம் கிளியோபாட்ரா
எகிப்தின் தாலமிக் மன்னர்
முதலாம் கிளியோபாட்ரோவுடன்
இரண்டாம் கிளியோபாட்ரா
எட்டாம் தாலமி

கிமு 181–164
பின்னர்
எட்டாம் தாலமி
முன்னர்
எட்டாம் தாலமி
எகிப்தின் தாலமிக் மன்னர்
இரண்டாம் கிளியோபாட்ரா
எட்டாம் தாலமி
தாலமி யூபாட்டோர்

கிமு 163–145
பின்னர்
இரண்டாம் கிளியோபாட்ரா
எட்டாம் தாலமி


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆறாம்_தாலமி&oldid=3614886" இருந்து மீள்விக்கப்பட்டது