உள்ளடக்கத்துக்குச் செல்

சோபெக்நெபரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசி சோபெக்நெபரு
Neferusobek
Skemiophris (in Manetho)
அரசி சோபெக்நெபருவின் தலைச்சிற்பம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 1806–1802, எகிப்தின் பனிரெண்டாம் வம்சம்
முன்னவர்நான்காம் அமெனம்ஹத்
தந்தைமூன்றாம் அமெனம்ஹத்
இறப்புகிமு 1802
அடக்கம்வடக்கின் மஸ்குனா பிரமிடு (?)

அரசி சோபெக்நெபரு (Sobekneferu) சோபெக் எனற எகிப்திய மொழி சொல்லிற்கு பேரழகி எனப்பொருளாகும். பண்டைய எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலத்தின் போது பண்டைய எகிப்தை ஆண்ட பனிரெண்டாம் வம்சத்தின் இறுதி அரசி ஆவார். மன்னர் நான்காம் அமெனம்ஹத்த்தின் பட்டத்தரசியான சோபெக்நெபரு எகிப்தை கிமு 1806 முதல் 1802 முடிய 4 ஆண்டுகள் மட்டுமே எகிப்தை ஆண்டார்.[1] இவரது கல்லறைப் பிரமிடு, வடக்கின் மஸ்குனா உள்ளதாக தொல்லியல் அறிஞர்கள் கருதுகிறார்கள்.[2]இவர் இளம் வயதில் மறைந்தார்.[3] மன்னர் நான்காம் அமெனெம்ஹத் வாரிசு இன்றி மறைந்ததால், மன்னர் மூன்றாம் அமெனெம்ஹத்தின் மகளான சோபெக்நெபரு எகிப்தின் அரியணை ஏறினார். வாரிசு இன்றி இறந்த அரசி சோபெக்நெபருவிற்குப் பின் பதிமூன்றாம் வம்சத்தவர்களின் ஆட்சி துவகியது.

அரசி சோபெக்நெபருவின் சிதைந்த சிற்பம்

எகிப்திய அரசிகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ryholt, The Political Situation in Egypt during the Second Intermediate Period (1997), p. 15.
  2. Ryholt, Kim S. B., The Political Situation in Egypt during the Second Intermediate Period, c.1800-1550 BCE, Museum Tusculanum Press, Carsten Niebuhr Institute Publications 20, Museum Tusculanum Press (1997), p. 185, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-7289-421-0.
  3. Dodson, Hilton, The Complete Royal Families of Egypt, 2004, p. 98.

ஆதார நூற்பட்டியல்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சோபெக்நெபரு&oldid=3678246" இலிருந்து மீள்விக்கப்பட்டது