பதினொன்றாம் தாலமி
Appearance
பதினொன்றாம் தாலமி | |
---|---|
பண்டைய எகிப்தை ஆண்ட தாலமி வம்ச பார்வோன் | |
ஆட்சிக்காலம் | கிமு 80 |
முன்னையவர் | மூன்றாம் பெரெனிஸ் |
பின்னையவர் | பனிரெண்டாம் தாலமி |
துணைவர் | மூன்றாம் பெரெனிஸ் |
தந்தை | பத்தாம் தாலமி |
தாய் | சிரியாவின் கிளியோபாட்ரா செலினே |
பதினொன்றாம் தாலமி (Ptolemy XI Alexander II), பண்டைய எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்சத்தின் 11-வது பார்வோன் ஆவார். இவர் பத்தாம் தாலமி-மூன்றாம் பெரெனிஸ் தம்பதியரின் மகன் ஆவார்.[1]
கிமு 81-இல் ஒன்பதாம் தாலமி இறக்கும் போது, அவரது மகள் மூன்றாம் பெரெனிஸ் இருந்தார். பதினொன்றாம் தாலமி தனது சித்தப்பா மகள் ஒன்பதாம் தாலமியின் மகளான மூன்றாம் பெரெனிசை மணந்தார். திருமணம் முடிந்த 19 நாட்களுக்குப் பிறகு 11-ஆம் தாலமி காரணமின்றி தனது மனைவியான மூன்றாம் பெரனிஸை கொன்றார். இதனால் அலெக்சாந்திரியா மக்கள் கோபம் கொண்டு 11-ஆம் தாலமியை அரியணையிலிருந்து அகற்றினர். எனவே பனிரெண்டாம் தாலமி எகிப்தின் அரியணை ஏறினார்.
இதனையும் காண்க
[தொகு]அடிக்குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]Peter Green, Alexander to Actium (University of California Press, 1990), pp. 553–554 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-05611-6
- ↑ Llewellyn Jones, Lloyd (2013) [2012]. "Cleopatra Selene". In Bagnall, Roger S.; Brodersen, Kai; Champion, Craige B.; Erskine, Andrew; Huebner, Sabine R. (eds.). The Encyclopedia of Ancient History (13 Vols.). Vol. III: Be-Co. Wiley-Blackwell. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-405-17935-5.
வெளி இணைப்புகள்
[தொகு]- Ptolemy XI Alexander II entry in historical sourcebook by Mahlon H. Smith