நான்காம் மெண்டுகொதேப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நான்காம் மெண்டுகொதேப்
மின் கடவுளுக்கு காணிக்கை தரும் நான்காம் மெண்டுகொதேப் (வலது)
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 1998 - கிமு 1991, எகிப்தின் பதினொன்றாம் வம்சம்
முன்னவர்மூன்றாம் மெண்டுகொதேப்
பின்னவர்முதலாம் அமெனம்ஹத்
இறப்புகிமு 1991

நான்காம் மெண்டுகொதேப் (Mentuhotep IV) பழைய எகிப்து இராச்சியத்தை ஆண்ட பதினொன்றாம் வம்சத்தின் 8-வது மற்றும் இறுதி பார்வோன் ஆவார். இவர் பண்டைய எகிப்தை கிமு 1998 முதல் கிமு 1991 முடிய 7 ஆண்டுகள் ஆண்டார். இவரது ஆட்சியின் இரண்டாம் ஆண்டில் முதலாம் அமெனம்ஹத் எகிப்தின் எதிர்கால பார்வோனாக நியமிக்கப்பட்டார். குழந்தைகள் அற்ற நான்காம் மெண்டுகொதேப்பின் இறப்பிற்குப் பின், முதலாம் அமெனம்ஹத் பனிரெண்டாம் வம்சத்தின் முதல் பார்வோனாக எகிப்தை ஆண்டார். நான்காம் மெண்டுகொதேப்பின் கல்லறை அல்லது கல்லறைக் கோயில் இதுவரை அறியப்படவில்லை.

இதனையும் காணக[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. King List (chronological)
  2. Clayton, Peter A. Chronicle of the Pharaohs: The Reign-by-Reign Record of the Rulers and Dynasties of Ancient Egypt. Thames & Hudson. p72. 2006. ISBN 0-500-28628-0
  3. Mentuhotep IV's titulary on Eglyphica.de

மேலும் படிக்க[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mentuhotep IV
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
முன்னர்
மூன்றாம் மெண்டுகொதேப்
பார்வோன்
எகிப்தின் பதினொன்றாம் வம்சம்
கிமு 1998 - கிமு 1991
பின்னர்
முதலாம் அமெனம்ஹத்"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்காம்_மெண்டுகொதேப்&oldid=3449721" இலிருந்து மீள்விக்கப்பட்டது