உள்ளடக்கத்துக்குச் செல்

முதலாம் செனுஸ்ரெத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதலாம் செனுஸ்ரெத்
Sesostris, Sesonchosis
முதலாம் செனுஸ்ரெத்தின் சிலை, கெய்ரோ அருங்காட்சியகம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 1971 - 1926 அல்லது கிமு 1920 - 1875, எகிப்தின் பன்னிரண்டாம் வம்சம்
முன்னவர்முதலாம் அமெனம்ஹத்
பின்னவர்இரண்டாம் அமெனம்ஹத்
துணைவி(யர்)மூன்றாம் நெபரு
பிள்ளைகள்இரண்டாம் அமெனம்ஹத்
தந்தைமுதலாம் அமெனம்ஹத்
தாய்நெபெரிததென்னன்[1]
இறப்புகிமு 1926 அல்லது கிமு 1875
அடக்கம்எல்-லிஸ்டு பிரமிடு
நினைவுச் சின்னங்கள்வெள்ளைக் கோயில், செனுஸ்ரெத்தின் பிரமிடு
பார்வோன் முதலாம் செனுஸ்ரெத் ஹெல்லியோபோலிஸ் நகரத்தில் நிறுவிய கல்தூபி

முதலாம் செனுஸ்ரெத் (Senusret I) எகிப்தின் மத்தியகால இராச்சியத்தை ஆண்ட 12-ஆம் வம்சத்தின் இரண்டாம் பார்வோன் ஆவார். இவர் பண்டைய எகிப்தை கிமு 1971 - 1926 அல்லது கிமு 1920 - 1875 வரை ஆண்டதாக இரு வேறு கருத்துகள் உள்ளது.[2] இவரது தந்தை பார்வோன் முதலாம் அமெனம்ஹத் மற்றும் இவரது மகன் பார்வோன் இரண்டாம் அமெனம்ஹத் ஆவார்.[3]

இவரது தந்தை முதலாம் அமெனம்ஹத்தை தொடர்ந்து முதலாம் செனுஸ்ரெத்தும் எகிப்தின் தெற்கில் உள்ள நூபியாவிற்கு எதிராக படையெடுத்து வென்று தனது ஆட்சிப் பரப்பை விரிவாக்கினார். நூபியாவை கைப்பற்றியதன் நினைவாக வெற்றித் தூணை நிறுவினார்.[4] இவர் பண்டைய அண்மை கிழக்கின் கானான் மற்றும் சிரியா போன்ற நகர இராச்சியங்களுடன் அரசியல் உறவுகளைக் கொண்டிருந்தார்.இவர் தனது கல்லறைப் பிரமிடுவை எல்-லிஸ்டுவில் கட்டினார். செனுஸ்ரெத் கர்னாக்கில் வெள்ளைக் கோயில் ஒன்றை நிறுவினார்.

இவரது தந்தை முதலாம் அமெனம்ஹத்த்தின் 20-வது ஆட்சிக் காலத்திலேயே முதலாம் செனுஸ்ரேத் எகிப்தின் இணை ஆட்சியாளராக பதவி வகித்தார்.[5] முதலாம் செனுஸ்ரெத் தனது 43-வது வயதின் போது, தன் மகன் இரண்டாம் அமெனம்ஹத்தை எகிப்தின் இணை ஆட்சியாளர் பதவியில் அமர்த்தினார்.[6] துரின் மன்னர்கள் பட்டியல் படி, முதலாம் செனுஸ்ரெத் தனது 46-வது வயதில் இறந்திருக்கலாம் எனக்குறிப்பிடுகிறது.[7]

படக்காட்சிகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. W. Grajetzki, The Middle Kingdom of Ancient Egypt: History, Archaeology and Society, Duckworth, London 2006 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7156-3435-6, p.36
  2. Erik Hornung; Rolf Krauss; David Warburton, eds. (2006). Ancient Egyptian chronology. Brill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9004113851. இணையக் கணினி நூலக மைய எண் 70878036.
  3. Peter Clayton, Chronicle of the Pharaohs, Thames & Hudson Ltd, (1994), p.78
  4. Senusret I
  5. Murnane, William J. Ancient Egyptian Coregencies, Studies in Ancient Oriental Civilization. No. 40. p.2. The Oriental Institute of the University of Chicago, 1977.
  6. Murnane, William J. Ancient Egyptian Coregencies, Studies in Ancient Oriental Civilization. No. 40. p.5. The Oriental Institute of the University of Chicago, 1977.
  7. Murnane, William J. Ancient Egyptian Coregencies, Studies in Ancient Oriental Civilization. No. 40. p.6. The Oriental Institute of the University of Chicago, 1977.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Senusret I
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_செனுஸ்ரெத்&oldid=3449726" இலிருந்து மீள்விக்கப்பட்டது