தந்தமானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தந்தமானி
குஷ் இராச்சியம் மற்றும் எகிப்திய பார்வோன்
Nubian head.JPG
தந்தமானியின் பெயர் பொறித்த அமூன் கடவுளின் தலைச்சிற்பம் கொண்ட தூண்
துணைவர்பியான்கார்த்தி
வாரிசு(கள்)அத்லானெர்சா, இராணி காலிசெத், இராணி யேத்துரோ
தந்தைசபாக்கா
தாய்குவால்ஹாத்தா
அடக்கம்எல்-குர்ரு

தந்தமானி (Tantamani) பண்டைய எகிப்தின் மூன்றாம் இடைக்காலத்தின் போது பண்டைய எகிப்தைகைப்பற்றி ஆண்ட தெற்கு எகிப்தில் உள்ள நூபியாவின் குஷ் இராச்சியத்தின் பார்வோன் ஆவார். எகிப்தியர் அல்லாத பார்வோன் தந்தமானி, இருபத்தி ஐந்தாம் வம்சத்தின் இறுதி அரசன் ஆவார். இவர் எகிப்தை கிமு 664 – 656 முடிய எட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

கிமு 656-இல் 26-வது வம்ச மன்னர் முதலாம் சாம்திக் மேல் எகிப்தின் தீபை நகரத்தைக் கைப்பற்றி எகிப்தில் பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை நிறுவினார். பின்னர் தந்தமானி நூபியாவின் குஷ் இராச்சியத்தை மட்டும் இறக்கும் வரை கிமு 653 முடிய ஆண்டார்.

பார்வோன் தந்தமானியின் கல்லறையை, எல்-குர்ருவில் அகழாய்வு செய்த சார்லஸ் பென்னெட் எனும் தொல்லியலாளரால் 2003-ஆம் ஆண்டில் தந்தமானியின் பெயர் பொறித்த அமூன் கடவுளின் சிலையை கண்டுபிடித்தார்.[1]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Digging into Africa's past". November 11, 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது.

மேலும் படிக்க[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=தந்தமானி&oldid=3449755" இருந்து மீள்விக்கப்பட்டது