மெனஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மேல் மற்றும் கீழ் எகிப்தைக் காட்டும் வரைபடம்

மெனஸ்(Menes, கி.மு.3100-3050)அல்லது நார்மர், பண்டைய எகிப்தின் அரச மரபில் வந்த முதல் அரசர் ஆவார். எகிப்து நாட்டை ஒருங்கிணைத்த முதல் மனனர். எகிப்தை ஒருங்கிணைத்ததன் மூலம் மனித நாகரிகத்திற்கு பெரும்பங்காற்றியவர். இவர் கி,மு 3100-ல் பிறந்தவர் என பொதுவாக நம்பபடுகிறது. அதற்கு முன்பு எகிப்து ஒருங்கிணைந்த நாடாக இருக்க வில்லை. மாறாக இரு சுதந்திரமான முடியரசுகளைக் கொண்டிருந்தது. வடக்கில் நைல் ஆற்றின் கழிமுகப் பகுதியில் கீழ் எகிப்து என்றும், தெற்கில் நைல் பள்ளத்தாக்கில் இருந்தது மேல் எகிப்து என்றும் அழைக்கப்பட்டது. (தென்)மேல் எகிப்தை விட, (வட)கீழ் எகிப்து பண்பாட்டில் அதிக முன்னேற்றமடைந்ததாக இருந்தது. இந்த வடக்கு எகிப்தை வெற்றி கொண்டு, அதன் மூலம் எகிப்து முழுவதையும் ஒருங்கிணைத்தவர் தெற்கு எகிப்தின் (மேல் எகிப்தின்) மன்னராகிய மெனசே ஆவார்
மெனஸ் தென் எகிப்திலிருந்த தினிஸ்(Thinis)என்னும் நகரைச் சார்ந்தவர். இவர் வடக்கு முடியரசை வெற்றி கொண்டதும் தம்மை " மேல் மற்றும் கீழ் எகிப்து அரசர்" எனக் கூறிக் கொண்டார். இதே பட்டத்தையே, பின்னர் வந்த பாரோவா (Pharaohs) அரசர்களும் பல்லாயிரம் ஆண்டுகள் வர சூடிக் கொண்டார்கள். இரு முடியரசுகளுக்கும் இடையே இருந்த பழைஅ எல்லையின் அருகே மெம்பிஸ் (Memphis)என்ற புதிய நகரை மெனஸ் நிறுவினார். இந்நகரம் மையப் பகுதியில் அமைந்திருந்ததால், ஒருங்கிணைந்த எகிப்தின் தலை நகராவதற்கு பொருத்தமாக இருந்தது. இந்நகரம் பல நூற்றாண்டுகள் வரை எகிப்தின் தலைசிறந்த நகரங்களுல் ஒன்றாகவும் ஒரு கணிசமான காலத்திற்கு அதன் தலைநகராகவும் விளங்கியது. இன்றைய கெய்ரோ நகருக்கு அருகிலேயே மெம்பிஸ் நகரின் சிதைவுகள் இன்றும் காணப்படுகிறது.

உசாத்துணை[தொகு]

மைக்கேல் ஹெச்.ஹார்ட், 100 பேர் (புதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை), மீரா பதிப்பகம்-2008

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெனஸ்&oldid=2224113" இருந்து மீள்விக்கப்பட்டது