உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெர்
கல்லறையில் மன்னர் ஜெர்ரின் கல் சிற்பம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்41 ஆண்டுகள், கிமு 3000, முதல் வம்சம்
முன்னவர்ஹோர்-ஆகா
பின்னவர்ஜெத்
துணைவி(யர்)நக்நெய்த், ஹெர்நெய்த், பெனெபூய்
பிள்ளைகள்மெர்நெய்த், ஜெத்
தந்தைஹோர்-ஆகா
தாய்கென்தாப், நெய்த்ஹோதேப்
அடக்கம்உம் எல்-காப், அபிதோஸ் நகரம்
பார்வோன் ஜெர் பெயர் பொறித்த குறுங்கல்வெட்டு, அபிதோஸ் மன்னர்கள் பட்டியல்
பார்வோன் ஜெர் பெயர் பொறித்த கல் பாத்திரம், தேசிய தொல்லியல் அருங்காசியகம், பிரான்சு

ஜெர் (Djer (or Zer or Sekhty)[1] பண்டைய எகிப்தை ஆண்ட முதலாம் வம்சத்தின் (கிமு 3100 – கிமு 2900) மூன்றாம் பார்வோன் ஆவார். இவர் கிமு 3000 ஆண்டில் பண்டைய எகிப்தை 40 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவர் மெம்பிஸ் நகரத்தை தலைநகராகக் கொண்டு எகிப்தை ஆண்டார்.

இவர் கிமு 31-ஆம் நூற்றாண்டின் நடுவில் வரை வாழ்ந்தார்.[2] இவரது மம்மியின் முன் கை மற்றும் இவரது மனைவியின் மம்மியும் எகிப்தியவியல் அறிஞர் பிளிண்டர் பெட்ரி என்பவர் அகழாய்வில் கண்டுபிடித்தார்.[3][4]

இவரது பெயர் பலெர்மோ கல், அபிதோஸ் மன்னர்கள் பட்டியல் மற்றும் துரின் மன்னர்கள் பட்டியல்களின் குறுங்கல்வெட்டுகளில் காணப்படுகிறது.

ஜெர் மற்றும் அவரது தந்தை ஹோர்-ஆகாவின் கல்லறைகள் அபிதோஸ் நகரத்திற்கு அருகே உள்ள உம் எல்-காப் பகுதியில் அகழாய்வில் கண்டுபிடிக்கபட்டது.

படக்காட்சிகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Trigger, Bruce (1983). Ancient Egypt: A Social History. Cambridge University Press. p. 70. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0521284271.
  2. Grimal, Nicolas (1994). A History of Ancient Egypt. Wiley-Blackwell. p. 528. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-631-19396-0.
  3. W. M. Flinders Petrie: The Royal Tombs of the Earliest Dynasties, 1901, Part II, London 1901, p.16-17
  4. Salima Ikram and Aidan Dodson, The Mummy in Ancient Egypt: Equipping the Dead for Eternity, Thames & Hudson, 1998, p. 109

உசாத்துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஜெர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெர்&oldid=3628054" இலிருந்து மீள்விக்கப்பட்டது