ஹெல்லியோபோலிஸ் (பண்டைய எகிப்து)

ஆள்கூறுகள்: 30°07′45.6″N 31°18′27.1″E / 30.129333°N 31.307528°E / 30.129333; 31.307528
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹெல்லியோபோலிஸ்
I͗wnw or Iunu
முதலாம் செனுஸ்ரெத் நிறுவிய 120 டன் எடையும், 21 மீட்டர் உயரமும் கூடிய கருங்கல் கல்தூபி
ஹெல்லியோபோலிஸ் (பண்டைய எகிப்து) is located in Egypt
ஹெல்லியோபோலிஸ் (பண்டைய எகிப்து)
Shown within Egypt
இருப்பிடம்எகிப்து
பகுதிகெய்ரோ ஆளுநனரகம்
ஆயத்தொலைகள்30°07′46″N 31°18′27″E / 30.129333°N 31.307528°E / 30.129333; 31.307528

ஹெல்லியோபோலிஸ் (Heliopolis) பண்டைய எகிப்தின் வட எகிப்தில் பாயும் நைல் நதி வடிநிலத்தில் அமைந்த பண்டைய நகரம் ஆகும். இதனை சூரியனின் நகரம் என்பர்.[1] இந்நகரம் பண்டைய எகிப்திய சமயத்தின் மையமாக விளங்கியது. இப்பண்டைய நகரம் தற்போது கெய்ரோ நகரத்திற்கு வடகிழக்கில் ஆயின் சாம் பகுதியில் உள்ளது.

பழைய எகிப்திய இராச்சியம் (கிமு 2686 – கிமு 2181) மற்றும் மத்தியகால எகிப்திய இராச்சிய (கிமு 2055 – கிமு 1650) ஆட்சிகளில் இந்நகரம் பெரும் புகழுடன் விளங்கியது. தற்போது இந்நகரத்தின் பண்டைய எகிப்தியக் கோயில்கள், கட்டிட அமைப்புகள் பெரிதும் சிதிலமடைந்துள்ளது. பண்டைய எகிப்தின் வரலாற்று ஆவணங்கள், இந்நகரத்தில் தொல்லியல் அகழ்வாய்வுகள் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்நகரத்தில் 12-வம்சத்தின் பார்வோன் முதலாம் செனுஸ்ரெத் எகிப்திய சூரியக் கடவுள் இராவினை போற்றும் வகையில் நிறுவிய 120 டன் எடையும், 21 மீட்டர் உயரம் கொண்ட சிவப்பு கருங்கல் கல்தூபி கண்டெடுக்கப்பட்டுள்ள்து.[2] பழைய எகிப்திய இராச்சியத்தின் பிரமிடுகள் குறித்த ஆவணங்களில், இந்நகரம் சூரியக் கடவுள் இராவின் வீடு என குறித்துள்ளது.[3]

செய்திகளில்[தொகு]

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி எகிப்து சென்ற போது 25 சூன் 2023 அன்று இரண்டாம் உலக போரின் போது வீர மரணம் அடைந்த 3,799 இந்திய படைவீரர்கள் நினைவாக இந்நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தைப் பிரதமர் மோடி பார்வையிட்டு மரியாதை செலுத்தினார்.[4]

கீழ் எகிப்தின் நைல் நதி வடிநிலப் பகுதியில் கெய்ரோவிற்கு வடக்கே அமைந்த பண்டைய ஹெல்லியோபோலிஸ் நகரம்
எகிப்தின் பத்தொன்பதாம் வம்ச பார்வோன் ஹெல்லியோபோலிஸ் நகரத்தில் நிறுவிய கோயிலின் மாதிரிப்படம்[5]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Dobrowolska; et al. (2006), Heliopolis: Rebirth of the City of the Sun, p. 15, ISBN 9774160088.
  2.  Griffith, Francis Llewellyn (1911). "Obelisk". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 19. Cambridge University Press. .
  3. Bonnet, Hans, Reallexikon der Ägyptischen Religionsgeschichte. (in இடாய்ச்சு மொழி)
  4. ஹெலியோபொலிஸ் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
  5. "Model of a Votive Temple Gateway at Heliopolis (49.183)", Official site, Brooklyn Museum, பார்க்கப்பட்ட நாள் 8 July 2014.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Heliopolis, Egypt
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

ஆதார நூற்பட்டியல்[தொகு]

  • Allen, James P. 2001. "Heliopolis". In The Oxford Encyclopedia of Ancient Egypt, edited by Donald Bruce Redford. Vol. 2 of 3 vols. Oxford, New York, and Cairo: Oxford University Press and The American University in Cairo Press. 88–89
  • Bilolo, Mubabinge. 1986. Les cosmo-théologies philosophiques d'Héliopolis et d'Hermopolis. Essai de thématisation et de systématisation, (Academy of African Thought, Sect. I, vol. 2), Kinshasa–Munich 1987; new ed., Munich-Paris, 2004.
  • Reallexikon der Ägyptischen Religionsgeschichte - Hans Bonnet
  • Collier, Mark and Manley, Bill. How to Read Egyptian Hieroglyphs: Revised Edition. Berkeley: University of California Press, 1998.
  • The Routledge Dictionary of Egyptian Gods and Goddesses, George Hart ISBN 0-415-34495-6
  • Redford, Donald Bruce. 1992. "Heliopolis". In The Anchor Bible Dictionary, edited by David Noel Freedman. Vol. 3 of 6 vols. New York: Doubleday. 122–123

வெளி இணைப்புகள்[தொகு]