இரண்டாம் ராமேசஸ் சிலை

ஆள்கூறுகள்: 29°52′17″N 31°12′59″E / 29.8713°N 31.2164°E / 29.8713; 31.2164
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரும் எகிப்திய அருங்காட்சியகத்தின் நுழைவாயில் மண்டபத்தில் பார்வோன் இரண்டாம் ராமேசஸ் சிலை, நவம்பர் 2019
இரண்டாம் ராமேசஸ் சிலையின் மாதிரி வடிவம், கெய்ரோ புறநகர்

இரண்டாம் ராமேசஸ் சிலை, (Statue of Ramesses II) புது எகிப்திய இராச்சியத்தை 66 ஆண்டுகள் ஆண்ட 19வது வம்சத்தின் மூன்றாவது மன்னர் இரண்டாம் ராமேசஸ் ஆவார். (ஆட்சிக் காலம் கிமு 1279 – கிமு 1213). இவரது சிறந்த ஆட்சிக் காலத்தை எகிப்தியவியல் அறிஞர்கள் ராமேசியம் காலம் என்பர்.

எகிப்தின் மெம்பிஸ் நகர தொல்லியல் அகழாய்வின் போது, 1820-ஆம் ஆண்டில் ஜியோவானி பாட்டிஸ்டா கேவிக்லியா எனும் தொல்லியல் அறிஞரால் மிகப்பெரிய இரண்டாம் ராமேசஸ் சிவப்பு கருங்கல் சிலை 6 துண்டுகளாக உடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது இதன் எடை 83 டன்கள் ஆகும்.

1955 இல் எகிப்தின் பிரதமர் ஜமால் அப்துல் நாசிர் ஆணையின் பேரில் இரண்டாம் ராமேசஸ் சிலை கெய்ரோ தொடருந்து நிலைய சதுக்கத்தில் இடம் மாற்றப்பட்டது. சிலையை நிறுவிய இடத்திற்கு ராமேசஸ் சதுக்கம் எனப்பெரியப்பட்டது.[1]இவ்விடத்தில் ராமேசஸ் சிலையை முதல் முறையாக மறுசீரமைப்பு செய்தனர். 3 மீட்டர் உயரம் கொண்ட பீடத்தின் மீது 11 மீட்டர் உயரத்தில் சீரமைப்பு செய்த ராமேசஸ் சிலையை நிறுவினர். சிலையின் உடற்பகுதிகளில் இரும்பு கம்பிகளைக் கொண்டு வலு சேர்த்தனர்.[2]


காலப்போக்கில் சிலைக்கு ராம்சேஸ் சதுக்கம் ஒரு பொருத்தமற்ற இடமாக மாறியது. 2006-ஆம் ஆண்டு எகிப்திய அரசாங்கம் அதை மிகவும் பொருத்தமான இடத்திற்கு மாற்ற முடிவு செய்தது. கீசா நகரத்தின் பெரும் எகிப்திய அருங்காட்சியகத்தின் நுழைவாயில் உள்ள மண்டபத்தில் இரண்டாம் ராமசேஸ் சிலை 2018-ஆம் ஆண்டில் மாற்றி நிறுவப்படுவதற்கு முன் சீரமைக்கப்பட்டது. [3][4][5][6][7]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "97-08-07: Ramses comes home". Archived from the original on December 7, 2006. பார்க்கப்பட்ட நாள் January 4, 2007.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. Hawass, Zahi. "The removal of Ramses II Statue". பார்க்கப்பட்ட நாள் March 17, 2007.
  3. "Egypt's antiquities minister conducts inspection tour before Ramses II colossus moved to GEM display - Ancient Egypt - Heritage - Ahram Online". english.ahram.org.eg.
  4. "New move for Ramses II - Ancient Egypt - Heritage - Ahram Online". english.ahram.org.eg.
  5. "Ramses II statue to be transferred to Grand Egyptian Museum's main gallery - Egypt Today". www.egypttoday.com.
  6. "Ramses II colossus to be erected at Grand Egyptian Museum display spot - Daily News Egypt". December 26, 2017.
  7. "Ramses II gets new home". www.arabworldbooks.com.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_ராமேசஸ்_சிலை&oldid=3443895" இலிருந்து மீள்விக்கப்பட்டது