உள்ளடக்கத்துக்குச் செல்

தனீஸ்

ஆள்கூறுகள்: 30°58′37″N 31°52′48″E / 30.97694°N 31.88000°E / 30.97694; 31.88000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தனீஸ்
ḏꜥn.t
صان الحجر
சிதிலமடைந்த தற்போதைய தனீஸ் நகரம்
தனீஸ் is located in Egypt
தனீஸ்
Shown within Egypt
இருப்பிடம்சான் எல்-ஹக்கர், அல் ஷார்க்கிய ஆளுநகரம், எகிப்து
பகுதிகீழ் எகிப்து (வடக்கு எகிப்து)
ஆயத்தொலைகள்30°58′37″N 31°52′48″E / 30.97694°N 31.88000°E / 30.97694; 31.88000
வகைதொல்லியல் நகரம்
கீழ் எகிப்தில் பண்டைய தனீஸ் நகரத்தின் வரைபடம்
பார்வோன்களின் கல்லறைகள், தினீஸ் நகரம்

தனீஸ் (Tanis) (/ˈtnɪs/ TAY-niss;[1][2][3] பண்டைக் கிரேக்கம்Τάνις; வார்ப்புரு:Lang-egy [ˈcʼuʕnat];[4] அரபு மொழி: صان الحجر‎, romanized: Ṣān al-Ḥagar; Akkadian: URUṣa-aʾ-nu;[5] வார்ப்புரு:Lang-cop or ϫⲁⲁⲛⲉ[6]) தற்கால எகிப்து நாட்டின் வடக்கு எகிப்தின் நைல் நதி வடிநிலத்தில் இருந்த பண்டைய எகிப்திய நகரம் ஆகும். எகிப்தின் மூன்றாம் இடைநிலக் காலத்தின் போது, தினீஸ் நகரம் எகிப்தின் 21-ஆம் வம்சம் மற்றும் 21-ஆம் வம்சத்தினர்களின் தலைநகரமாக, கிமு 1069 முதல் கிமு 945 முடிய விளங்கியது. தற்போது இப்பண்டைய நகரம் மிகவும் சிதிலமடைந்துள்ள்து.

வரலாறு

[தொகு]

பிந்தைய எகிப்திய இருபதாம் வம்ச பார்வோன்கள் கிமு 1075-இல் தங்கள் தலைநகரத்தை, பை-ராமேசஸ் நகரத்திலிருந்து தினீஸ் நகரத்திற்கு மாற்றினர். எகிப்தின் இருப்பத்தொன்றாம் வம்சத்தினரும் தொடந்து தினீஸ் நகரத்தையே தங்களின் தலைநகரமாகக் கொண்டனர். தினீஸ் நகரத்தில் இருபத்தொன்றாம் வம்சத்தினர் அமூன் கடவுளுக்கு பெரிய கற்கோயிலைக் கட்டினர். லிபியாவின் எகிப்தின் இருபத்தி இரண்டாம் வம்சத்தினரும் தினீஸ் நகரத்தை தங்களின் தலைநகராகக் கொண்டனர்.

தொல்லியல் அகழாய்வுகள்

[தொகு]

1931-இல் பண்டைய தனீஸ் நகரத்தின் சிதிலங்களை அகழ்வாய்வு செய்யும் போது எகிப்தின் இருபத்தொன்றாம் வம்சம் மற்றும் எகிப்தின் இருபத்தி இரண்டாம் வம்சத்தவர்கள் நிறுவிய மம்மிகள் கொண்ட பிரமிடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. அகழாய்வில் பார்வோன்களின் மம்மி முகமூடிகள், தங்க கிண்ணகள், நகைகள் கொண்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைப் பெட்டிகள் மற்றும் மூத் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 15 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலம் கொண்ட புனிதக் குளம் கண்டுபிடிக்கப்பட்டது. [7]

பண்டைய எகிப்திய நகரங்கள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

படக்காட்சிகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tanis". The American Heritage Dictionary of the English Language (5th ed.). Boston: Houghton Mifflin Harcourt. 2014. பார்க்கப்பட்ட நாள் 21 September 2019.
  2. "Tanis". Collins English Dictionary. HarperCollins. பார்க்கப்பட்ட நாள் 21 September 2019.
  3. "Tanis". Merriam-Webster Dictionary. பார்க்கப்பட்ட நாள் 21 September 2019.
  4. Loprieno, Antonio (1995). Ancient Egyptian: A linguistic introduction. pp. 39, 245.
  5. "Oracc RINAP Ashurbanipal 011".
  6. Vycichl, W. (1983). Dictionnaire Étymologique de la Langue Copte, p. 328.
  7. Tanis, ANCIENT CITY, EGYPT

ஆதார நூற்பட்டியல்

[தொகு]
  • Association française d’Action artistique. 1987. Tanis: L’Or des pharaons. (Paris): Ministère des Affaires Étrangères and Association française d’Action artistique.
  • Brissaud, Phillipe. 1996. "Tanis: The Golden Cemetery". In Royal Cities of the Biblical World, edited by Joan Goodnick Westenholz. Jerusalem: Bible Lands Museum. 110–149.
  • Kitchen, Kenneth Anderson. [1996]. The Third Intermediate Period in Egypt (1100–650 BC). 3rd ed. Warminster: Aris & Phillips Limited.
  • Loth, Marc, 2014. "Tanis – 'Thebes of the North’“. In "Egyptian Antiquities from the Eastern Nile Delta", Museums in the Nile Delta, Vol. 2, ser. ed. by Mohamed I. Bakr, Helmut Brandl, and Faye Kalloniatis. Cairo/Berlin: Opaion. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783000453182
  • Montet, Jean Pierre Marie. 1947. La nécropole royale de Tanis. Volume 1: Les constructions et le tombeau d’Osorkon II à Tanis. Fouilles de Tanis, ser. ed. Jean Pierre Marie Montet. Paris: .
  • ———. 1951. La nécropole royale de Tanis. Volume 2: Les constructions et le tombeau de Psousennès à Tanis. Fouilles de Tanis, ser. ed. Jean Pierre Marie Montet. Paris: .
  • ———. 1960. La nécropole royale de Tanis. Volume 3: Les constructions et le tombeau de Chechanq III à Tanis. Fouilles de Tanis, ser. ed. Jean Pierre Marie Montet. Paris.
  • Stierlin, Henri, and Christiane Ziegler. 1987. Tanis: Trésors des Pharaons. (Fribourg): Seuil.
  • Yoyotte, Jean. 1999. "The Treasures of Tanis". In The Treasures of the Egyptian Museum, edited by Francesco Tiradritti. Cairo: The American University in Cairo Press. 302–333.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tanis, Egypt
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனீஸ்&oldid=3958346" இலிருந்து மீள்விக்கப்பட்டது