கோப்திய கெய்ரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோப்திய மரபுவழி திருச்சபையினரின் தொங்கு தேவாலயம் கெய்ரோவின் மிகவும் புகழ்பெற்ற தேவாலயங்களில் ஒன்றாகும். இது மூன்றாவது அல்லது நான்காவது நூற்றாண்டுகளில் கட்டப்பட்டது.
புனித ஜார்ஜின் கன்னிமாடம்

கோப்திய கெய்ரோ (Coptic Cairo) எனப்படுவது பழைய கெய்ரோவின் ஒரு அங்கமாகும். இது பாபிலோன் கோட்டை, கோப்திய அருங்காட்சியகம், தொங்கு தேவாலயம், புனித ஜோர்ஜின் கிரேக்கத் தேவாலயம் போன்ற கோப்திய தேவாலயங்களையும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களையும் உள்ளடக்கியது. இப்பகுதிக்குத் திருக்குடும்பம் வந்துள்ளதாகவும் இங்கு தற்போது புனிதர்கள் செர்ஜியசு மற்றும் பச்சுசு தேவாலயம் உள்ள இடத்தில் தங்கியிருந்ததாகவும் நம்பப்படுகிறது.[1] தற்போதைய கட்டிடங்களும் தேவாலயங்களும் இசுலாமியர் கையகப்படுத்தலின் பின்னரே கட்டப்பட்டன எனினும் எகிப்தில் இசுலாமிய சகாப்தம் துவங்கும்வரை இப்பகுதி கிறித்தவக் கோட்டையாக விளங்கியது.[2]

மேற்சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோப்திய_கெய்ரோ&oldid=1479173" இருந்து மீள்விக்கப்பட்டது