எருசலேம் முற்றுகை (கிமு 587)
| எருசலேம் முற்றுகை | |||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|
| யூத-பாபிலோனியப் போரின் ஒரு பகுதி | |||||||||
எரிந்து கொண்டிருக்கும் எருசலேம் (கலை விவிலியம், 1896) |
|||||||||
|
|||||||||
| பிரிவினர் | |||||||||
| யூத அரசு | புது பாபிலோனியப் பேரரசு | ||||||||
| தளபதிகள், தலைவர்கள் | |||||||||
| செதேக்கியா | இரண்டாம் நெபுகாத்நேசர் | ||||||||
| பலம் | |||||||||
| தெரியவில்லை | தெரியவில்லை | ||||||||
| இழப்புகள் | |||||||||
| பலர் கொல்லப்பட்டனர், பிற 4,200 சிறைப்படுத்தப்பட்டனர் | தெரியவில்லை | ||||||||
பொ. ஊ. மு. 589 முதல் 587 வரை எருசலேமானது முற்றுகையிடப்பட்டது. பாபிலோனுக்கு எதிரான யூதேயாவின் கிளர்ச்சிகளின் இறுதிக் கட்டத்தை இது குறித்தது. புது பாபிலோனியப் பேரரசின் மன்னனான மகா நெபுகாத்நேசர் தோராயமாக 30 மாதங்களுக்கு யூதேயாவின் தலைநகரமான எருசலேமை முற்றுகையிட்டார். பொ. ஊ. மு. 587-ஆம் ஆண்டின் கோடை காலத்தில் இந்நகரமானது இறுதியாக வீழ்ந்தது. இதற்குப் பிறகு பாபிலோனியர்கள் அமைப்பு ரீதியாக எருசலேமை அழித்தனர். சாலமோனின் கோயிலை தரைமட்டமாக்கினர்.[1][2] எருசலேம் இராச்சியமானது கலைக்கப்பட்டது. மக்களில் பெரும் பங்கினர் பாபிலோனியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
பொ. ஊ. மு. ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யூதேயா பாபிலோனியாவுக்குத் திறை செலுத்திய இராச்சியமாக உருவானது. பொ. ஊ. மு. 601-இல் யூதேயாவின் மன்னனான செகோயியாகிம், இறை தூதர் எரேமியாவின் வலிமையான கண்டனங்களைப் புறந்தள்ளி பாபிலோனின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சியில் இறங்கினார்.[2][3] தெளிவாகத் தெரியாத காரணங்களுக்காக செகோயியாகிம் இறந்தார். அவருக்குப் பின் அவரது மகன் செகோனியா ஆட்சிக்கு வந்தார்.[4][5] பொ. ஊ. மு. 597-இல் பாபிலோனியர்கள் எருசலேமை முற்றுகையிட்டனர். நகரமானது சரணடைந்தது.[2][6] நெபுகாத்நேசர் எருசலேமைச் சூறையாடினார். செகோனியா மற்றும் பிற முக்கியமான பாபிலோனிய மக்களை பாபிலோனுக்கு நாடு கடத்தினார். செகோனியாவின் சிற்றப்பனான செதேக்கியா மன்னனாக அமர வைக்கப்பட்டார்.[2][7] பிறகு எகிப்தியர்களால் ஊக்குவிக்கப்பட்ட செதேக்கியா இரண்டாவது கிளர்ச்சியைத் தொடங்கினார். ஒரு பாபிலோனிய இராணுவமானது எருசலேமைக் கைப்பற்ற அனுப்பப்பட்டது.[2]
பொ. ஊ. மு. சூலை 587 அல்லது பொ. ஊ. மு. 586-இல் யூதர்களின் திசா பாவ் நாளில் பாபிலோனியர்கள் எருசலேமைக் கைப்பற்றினர். முதலாம் கோயிலை அழித்தனர். நகருக்குத் தீ வைத்து தரைமட்டமாக்கினர்.[1][2][8] நகரத்தைச் சுற்றியிருந்த சிறிய குடியிருப்புகளும், இராச்சியத்தின் மேற்கு எல்லைக்கு அருகில் இருந்த குடியிருப்புகளும் அழிக்கப்பட்டன.[8] விவிலியத்தின் படி, செதேக்கியா தப்பிக்க முயற்சித்தார். ஆனால், எரிக்கோ நகரத்திற்கு அருகில் பிடிக்கப்பட்டார்.[9]
எருசலேமும், அதன் கோயிலும் அழிக்கப்பட்டது ஓர் ஆழ்ந்த சமய, அரசியல் மற்றும் பண்பாட்டுப் பிரச்சினைக்குக் காரணமாக அமைந்தது. விவிலிய இலக்கியத்தின் மீது இது நீண்ட காலம் நீடித்திருக்கும் தடத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, இறைதூதர்கள் சார்ந்த நூல்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது.[9][8] யூதேயா இராச்சியமானது ஒழிக்கப்பட்டு, மிசுபாவில் அதன் மையத்துடன் ஒரு பாபிலோனிய மாகாணமாக இணைத்து கொள்ளப்பட்டது.[2][9][8] தாவீது அரசமரபினர் உள்ளிட்ட யூதேயா உயர்குடியினர் பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டனர்.[8] பாரசீக அகாமனிசியப் பேரரசின் நிறுவனரான சைரசுவிடம் பாபிலோன் பொ. ஊ. மு. 539-இல் வீழ்ந்ததற்குப் பிறகு நாடு கடத்தப்பட்டிருந்த யூதர்கள் சியோனுக்குத் திரும்பி வருவதற்கும், எருசலேமை மீண்டும் கட்டமைக்கவும் சைரசு அனுமதியளித்தார். செரூப்பபேலின் தலைமைத்துவத்தின் கீழ் பொ. ஊ. மு. 516-இல் இரண்டாம் கோயிலானது கட்டி முடிக்கப்பட்டது. நூற்றாண்டுகள் கழித்து இந்நகரமும், கோயிலும் மீண்டும் அழிக்கப்பட்டன - இந்த முறை உரோமானியர்கள் பொ. ஊ. 70-இல் முதல் யூதக் கிளர்ச்சியின் போது அழித்தனர்.
பின்புலம்
[தொகு]பொ. ஊ. மு. 732 மற்றும் 720-இல் அசிரியப் பேரரசால் வடக்கு இசுரேல் இராச்சியமானது அழிக்கப்பட்டு, வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து யூதேயா அதன் சகோதரி இசுரேலிய இராச்சியத்தை இழந்தது. பொ. ஊ. மு. 734-இல் யூதேயா ஏற்கனவே அசிரியர்களுக்கு திறை செலுத்தும் ஒரு நாடாக மாறியிருந்தது. அந்த ஆண்டு யூதேயாவின் மன்னன் அகசு அசிரியாவின் மன்னனான மூன்றாம் திக்லத்-பிலேசரிடம் இராணுவ உதவிக்கு வேண்டினார்.[10] அசிரிய ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டதால் மூலம் யூதேயா அதன் முடியாட்சியையும், உள்நாட்டு நிர்வாகத்தையும் தக்க வைத்துக் கொண்டது. பொ. ஊ. மு. எட்டாம் நூற்றாண்டின் பிந்தைய பகுதியில் லெவண்டை அசிரியர் வென்ற போது அத்தாக்குதலிலிருந்து தப்பிப் பிழைத்த சில இராச்சியங்களில் ஒன்றாக யூதேயா எஞ்சியிருந்தது.[10]

பொ. ஊ. மு. ஏழாம் நூற்றாண்டின் பிந்தைய பகுதியில் புது அசிரியப் பேரரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து 26-ஆம் அரசமரபின் கீழான எகிப்து மற்றும் வளர்ந்து வந்த புது பாபிலோனியப் பேரரசு ஆகிய இரு எதிரி சக்திகளுக்கு இடையில் யூதேயா இராச்சியமானது இருந்தது.[11] வெற்றிடத்தை எகிப்தியர் நிரப்பினர். பொ. ஊ. மு. 605-இல் கர்ச்சேமிசு யுத்தத்தில் எகிப்தை மகா நெபுகாத்நேசர் தலைமையின் கீழான பாபிலோனியர்கள் தோற்கடிக்கும் வரை இப்பகுதி மீதான ஆதிக்கத்தை குறுகிய காலத்திற்கு எகிப்து தக்க வைத்திருந்தது.[11] பொ. ஊ. மு. 604 மற்றும் 603 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் நெபுகாத்நேசர் ஒட்டு மொத்த லெவண்டையும் வென்றார். முதலில் அசிரியப் பேரரசுக்கும், பிறகு எகிப்தியர்களுக்கும் திறை செலுத்தும் நாடாக முன்னர் இருந்த யூதேயாவானது புது பாபிலோனியப் பேரரசுக்குத் திறை செலுத்தும் அரசானது.[12]
விவிலிய விவரிப்பு
[தொகு]நெபுகாத்நேசரின் காலவரிசை நூலானது பொ. ஊ. மு. 597-இல் நடத்தப்பட்ட எருசலேம் முற்றுகை பற்றி தகவல்களைத் தருகின்றன போதும், பொ. ஊ. மு. 587-இல் எருசலேம் அழிக்கப்படுவதில் முடிவடைந்த முற்றுகையின் ஒரே அறியப்பட்ட பதிவுகள் எபிரேய வேதாகமத்தில் மட்டுமே காணப்படுகின்றன.[13]
பின்புலம்
[தொகு]
பொ. ஊ. மு. 601-இல் தன்னுடைய ஆட்சியின் நான்காவது ஆண்டின் போது இரண்டாம் நெபுகாத்நேசர் எகிப்து மீது படையெ டுக்க முயற்சித்தார். அம்முயற்சி தோல்வியடைந்தது. கடுமையான இழப்புகளுடன் அவரது தாக்குதலானது முறியடிக்கப்பட்டது.[9] இந்தத் தோல்வியானது பாபிலோனுக்குத் தங்களது கூட்டணியைக் கடன்பட்டிருந்த லெவண்டிலிருந்த இராச்சியங்களின் மத்தியில் ஏராளமான கிளர்ச்சிகளுக்கு வழி வகுத்தது. இதில் யூதேயா அரசும் அடங்கும். யூதேயா அரசின் மன்னனான செகோயியாகிம் இந்நிகழ்வுக்குப் பின்னர் இரண்டாம் நெபுகாத்நேசருக்குத் திறை செலுத்துவதை நிறுத்தி விட்டார். எகிப்தியருக்கு ஆதரவான நிலையை எடுத்தார்.
பொ. ஊ. மு. 597-இல் இரண்டாம் நெபுகாத்நேசர் எருசலேமை முற்றுகையிட்டார்.[9] இந்த முற்றுகையின் போது செகோயியாகிம் இறந்தார். அவருக்குப் பின் அவரது மகன் செகோனியா எட்டு அல்லது 18-ஆம் வயதில் அரியணைக்கு வந்தார். சுமார் மூன்று மாதங்கள் கழித்து 2 அதார் (மார்ச் 16) பொ. ஊ. மு. 597 அன்று நகரமானது வீழ்ந்தது. இரண்டாம் நெபுகாத்நேசர் எருசலேம் மற்றும் கோயில் ஆகிய இரு இடங்களையும் சூறையாடினார். போரில் பெற்ற அனைத்துப் பொருட்களையும் வண்டிகளில் வைத்து பாபிலோனுக்குக் கொண்டு சென்றார். செகோனியாவும், அவரது அரசவையும், பிற முக்கியமான குடிமக்களும், கைவினைஞர்களும், யூதேயாவின் யூத மக்களில் ஒரு குறிப்பிடத்தக்க அளவினருடன் சேர்த்துக் கொண்டு செல்லப்பட்டனர். மன்னர்களின் நூல் என்னும் நூலின் படி, சுமார் 10,000 பேர் இந்நிலத்திலிருந்து நாடு கடத்தப்பட்டனர். பாபிலோனியப் பேரரசு முழுவதும் சிதறியவாறு வாழ வைக்கப்பட்டனர்.[9]
இரண்டாம் நெபுகாத்நேசர் செகோனியாவின் சிற்றப்பனான செதேக்கியாவை யூதேயாவின் திறை செலுத்தும் மன்னனாக அவரது 21-ஆம் வயதில் பதவியில் அமர வைத்தார்.[9] எனினும், இறைதூதர் எரேமியா மற்றும் பிறர் வலிமையான கண்டனங்களைத் தெரிவித்த போதும் செதேக்கியா இரண்டாம் நெபுகாத்நேசருக்குத் திறை செலுத்துவதை நிறுத்திக் கிளர்ச்சியில் ஈடுபட்டார். எகிப்தியப் பர்வோன் ஓப்ராவுடன் கூட்டணிக்குள் நுழைந்தார். இரண்டாம் நெபுகாத்நேசர் எருசலேமைக் கைப்பற்றும் குறீக்கொளுடன் யூதேயாவிற்குத் திரும்பி வந்தார் (2 மன்னர்கள் 25:1).
முற்றுகை
[தொகு]நெபுகாத்நேசர் பொ. ஊ. மு. சனவரி 589-இல் எருசலேம் மீதான முற்றுகையைத் தொடங்கினார்.[14][15] அண்டைப் பகுதிகளான மோவாப், அம்மோன், எதோம் மற்றும் பிற இராச்சியங்களுக்குப் புகலிடம் தேடி பல யூதர்கள் தப்பித்து ஓடினர்.[16] முற்றுகையின் போது நகரத்திற்குப் பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என விவிலியமானது விவரிக்கிறது (2 மன்னர்கள் 25:3; துயர்நிலைகள் 4:4, 5, 9). முற்றுகைக்குப் பிறகு நகரமானது வீழ்ந்தது. இந்த முற்றுகையானது 18 அல்லது 30 மாதங்களுக்கு நீடித்திருந்தது.[15] செதேக்கியாவின் ஆட்சிக் காலத்தின் 11-ஆம் ஆண்டில்(2 மன்னர்கள் 25:2; எரேமியா 39:2), நெபுகாத்நேசர் எருசலேமின் மதில் சுவர்களை உடைத்து நுழைந்தார். நகரத்தைக் கைப்பற்றினார். செதேக்கியாவும், அவரது ஆதரவாளர்களும் தப்பிக்க முயற்சித்தனர். ஆனால் எரிக்கோவின் சமவெளிகளில் பிடிக்கப்பட்டனர். ரிபலாவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.[9] அங்கு செதேக்கியாவின் ஆதரவாளர்களும், அவரது இரு சொந்த மகன்களும் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர். செதேக்கியா பாபிலோனுக்குக் கைதியாகக் கொண்டு செல்லப்பட்டார்.(2 மன்னர்கள் 25:1–7; 2 காலவரிசை நூல்கள் 36:12; எரேமியா 32:4–5; 34:2–3; 39:1–7; 52:4–11) இறக்கும் வரை கைதியாகவே இருந்தார்.[9]
பிறகு
[தொகு]விவிலியத்தின் படி, எருசலேமின் வீழ்ச்சியைத் தொடர்ந்து பாபிலோனியத் தளபதியான நெபுசரதன் அதை அழிக்கும் பணியை முடிப்பதற்காக அனுப்பப்பட்டார். நகரமும், சாலமோனின் கோயிலும் சூறையாடப்பட்டு, அழிக்கப்பட்டது. யூதேயாவைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் நெபுசரதனால் கைது செய்யப்பட்டு பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். வெகு சில மக்கள் மட்டுமே நிலத்தைப் பேணுவதற்காக அங்கேயே இருக்க அனுமதிக்கப்பட்டனர் (எரேமியா 52:16).
கெதாலியா என்ற யூதேயாவைச் சேர்ந்த ஒருவர் எகுத் மாகாணம் என்று பெயரிடப்பட்ட யூதேயாவின் எஞ்சிய பகுதிகளின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். மிசுபாவில் ஒரு சல்திய பாதுகாவலர் நிறுத்தப்பட்டார் (2 மன்னர்கள் 25:22–24; எரேமியா 40:6–8). விவிலியம் குறிப்பிடுவதாவது, இந்தச் செய்தியைக் கேட்ட போது மோவாப், அம்மோன், எதோம், மற்றும் பிற நாடுகளுக்குத் தப்பிச் சென்றிருந்த யூதர்கள் யூதேயாவிற்குத் திரும்பி வந்தனர் (எரேமியா 40:11–12). நெதனியாவின் மகனான இசுமயேலால் இரு மாதங்கள் கழித்து கெதாலியா அரசியல் கொலை செய்யப்பட்டார். எஞ்சிய அங்கேயே தங்கியிருந்த மக்களும், திரும்பி வந்திருந்த மக்களும் பிறகு பாதுகாப்பிற்காக எகிப்திற்குத் தப்பி ஓடினர் (2 மன்னர்கள் 25:25–26, எரேமியா 43:5–7). எகிப்தில் அவர்கள் மிக்தோல், தபன்கேசு, மெம்பிசு, மற்றும் தீபைக்கு அருகிலிருந்த பத்ரோசு ஆகிய இடங்களில் அவர்கள் குடியமர்ந்தனர் (எரேமியா 44:1).
பாபிலோனியாவில், யூதேயாவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் உள்ளூர் சமூகத்துடன் கலந்த அதே நேரத்தில், ஒரு வலிமையான அடையாள உணர்வைத் தக்க வைத்துக் கொண்டனர், தொடர்ந்து "யூதேயாவிலிருந்து வந்த மக்கள்" - அதாவது யூதர்கள் என்று அங்கீகரிக்கப்பட்டனர்.[17]
உசாத்துணை
[தொகு]- 1 2 Finkelstein, Israel; Silberman, Neil Asher (2002). The Bible Unearthed: Archaeology's New Vision of Ancient Israel and the Origin of Its Sacred Texts. New York: Free Press. p. 307. ISBN 978-0-684-86912-4. கணினி நூலகம் 44509358.
Intensive excavations throughout Jerusalem have shown that the city was indeed systematically destroyed by the Babylonians. The conflagration seems to have been general. When activity on the ridge of the City of David resumed in the Persian period, the-new suburbs on the western hill that had flourished since at least the time of Hezekiah were not reoccupied.
- 1 2 3 4 5 6 7 Bickerman, E. J. (2007). Nebuchadnezzar And Jerusalem. Brill. ISBN 978-90-474-2072-9.
- ↑ Malamat, A. (1975, January). The twilight of Judah: in the Egyptian-Babylonian maelstrom. In Congress Volume Edinburgh 1974 (pp. 123–145). Brill.
- ↑ Smit, E. J. (1994). "So how did Jehoiakim die?". Journal for Semitics 6 (1): 46–56. https://journals.co.za/doi/abs/10.10520/AJA10318471_285.
- ↑ Begg, C. (1996). "The end of King Jehoiakim: the afterlife of a problem". Journal for Semitics 8 (1): 12–20. https://journals.co.za/doi/10.10520/AJA10318471_366.
- ↑ Geoffrey Wigoder, The Illustrated Dictionary & Concordance of the Bible Pub. by Sterling Publishing Company, Inc. (2006)
- ↑ The Oxford History of the Biblical World, ed. by Michael D Coogan. Published by Oxford University Press, 1999. p. 350
- 1 2 3 4 5 Lipschits, Oded (1999). "The History of the Benjamin Region under Babylonian Rule". Tel Aviv 26 (2): 155–190. doi:10.1179/tav.1999.1999.2.155. https://archive.org/details/tel-aviv_1999_26_2/page/155. "The destruction of Jerusalem by the Babylonians (586 B.C.) is the most traumatic event described in biblical historiography, and in its shadow the history of the people of Israel was reshaped. The harsh impression of the destruction left its mark on the prophetic literature also, and particular force is retained in the laments over the destruction of Jerusalem and the Temple in its midst. [...] most of Judah's inhabitants remained there after the destruction of Jerusalem. They concentrated chiefly in the Benjamin region and the northern Judean hill country. This area was hardly affected by the destruction, and became the centre of the Babylonian province with its capital at Mizpah. [...] The archaeological data reinforce the biblical account, and they indicate that Jerusalem and its close environs suffered a severe blow. Most of the small settlements near the city were destroyed, the city wall was demolished, and the buildings within were put to the torch. Excavation and survey data show that the western border of the kingdom also sustained a grave onslaught, seemingly at the time when the Babylonians went to besiege Jerusalem.".
- 1 2 3 4 5 6 7 8 9 Smith-Christopher, D. L. (1997-01-01), "Reassessing the Historical and Sociological Impact of the Babylonian Exile", Exile: Old Testament, Jewish, and Christian Conceptions, Brill, pp. 7–21, doi:10.1163/9789004497719_008, S2CID 244932444
- 1 2 Čapek & Lipschits 2019, ப. 23–24.
- 1 2 Čapek & Lipschits 2019, ப. 29–30.
- ↑ Čapek & Lipschits 2019, ப. 30.
- ↑ Lester L. Grabbe (2001). Did Moses Speak Attic?: Jewish Historiography and Scripture in the Hellenistic Period. A&C Black. p. 216. ISBN 978-1-84127-155-2.
It is so easy to forget that 587 BC is exclusively a biblical date.
- ↑ Young, Rodger C. (2004). "When Did Jerusalem Fall?". Journal of the Evangelical Theological Society: 29. http://www.rcyoung.org/articles/jerusalem.pdf. "The first date is taken from Ezek 24:1, where it is said that the final siege of Jerusalem began in the tenth month of the "ninth year." ... The tenth month of that year corresponds roughly to January 589 BC.".
- 1 2 Malamat, Abraham (1968). "The Last Kings of Judah and the Fall of Jerusalem: An Historical – Chronological Study". Israel Exploration Journal 18 (3): 137–156. https://archive.org/details/sim_israel-exploration-journal_1968_18_3/page/136. "The discrepancy between the length of the siege according to the regnal years of Zedekiah (years 9–11), on the one hand, and its length according to Jehoiachin's exile (years 9–12), on the other, can be cancelled out only by supposing the former to have been reckoned on a Tishri basis, and the latter on a Nisan basis. The difference of one year between the two is accounted for by the fact that the termination of the siege fell in the summer, between Nisan and Tishri, already in the 12th year according to the reckoning in Ezekiel, but still in Zedekiah's 11th year which was to end only in Tishri.".
- ↑ Jeremiah 40:11–12
- ↑ Hallote, Rachel (2022-09-30), "Israel, ancient and modern", The Ancient Israelite World (in ஆங்கிலம்) (1 ed.), London: Routledge, pp. 756–757, doi:10.4324/9780367815691-54, ISBN 978-0-367-81569-1, retrieved 2025-08-03