எருசலேம் முற்றுகை (கிமு 597)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எருசலேம் முற்றுகை
யூத–பாபிலோன் போர் (கி.மு 601–587) பகுதி
நாள் ஏ. கி.மு 597
இடம் எருசலேம்
எருசலேம் பபிலோனியா கொள்ளையிடப்பட்டது; பபிலோனியாவின் வெற்றி
பிரிவினர்
யூத அரசு பபிலோனியா
தளபதிகள், தலைவர்கள்
யெகோயாகிம் இரண்டாம் நேபுகாத்னேச்சர்
பலம்
மிகவும் சில தெரியாது
இழப்புகள்
பலர் வெட்டப்பட்ட, மற்றவர்கள் அடிமைகளாக கொண்டு செல்லப்பட்டனர் தெரியாது

கி.மு 605 இல் பாபிலோன் அரசர் இரண்டாம் நேபுகாத்னேச்சரினால் பார்வோன் நேச்வோ ஒரு போரில் தோற்கடிக்கப்பட்ட, தொடர்ச்சியாக யூத அரசு மீதும் படையெடுப்பு நடந்தது. எருசலேமின் அழிவைத் தவிர்ப்பதற்காக யூதாவின் அரசன் யெகோயாகிம் எகிப்துடனான நட்பை விட்டு பாபிலோனுடன் உறவை ஏற்படுத்தினார். எருசலேம் கருவூலத்திலிருந்தும் கோயிலின் பொருட்கள், சில அரச குடும்பத்தினர், குறிப்பிடத்தவர்களை பணயக்கைதியாக செலுத்தினார்.[1] கி.மு 601 இல் நேபுகாத்னேச்சரின் எகிப்து மீதான படையெடுப்பு வெற்றி பெறவில்லை. பாரிய இழப்புக்களுடன் பின்னடைவுக்கு உள்ளானது. இந்தத் தோல்வியினால் பாபிலோனுடன் நட்பு கொண்டிருந்த லெவண்ட் நாடுகளில் புரட்சி ஏற்பட்டது. யூத அரசும் அதன் அரசன் யெகோயாகிம் கப்பம் செலுத்துவதை நிறுத்தி,[2] எகிப்துடன் முன்னர் போல் நட்புக் கொண்டார்.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]