உள்ளடக்கத்துக்குச் செல்

ஹட்டா

ஆள்கூறுகள்: 34°21′58″N 70°28′08″E / 34.366°N 70.4689°E / 34.366; 70.4689
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலர்களுடன் கிரேக்க பௌத்த பிக்கு, கிபி 2-3ம்நூற்றாண்டு, குய்மெட் அருங்காட்சியகம்
கௌதம புத்தர் சிற்பம்

ஹட்டா (Haḍḍa) (பஷ்தூ: هډه) ஆப்கானித்தான் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள நங்கர்கர் மாகாணத்தின் காந்தரப் பிரதேசத்தின் ஜலாலாபாத் நகரத்திற்கு தெற்கே, பத்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த கிரேக்க - பௌத்தத் தொல்லியல் களமாகும்.

பின்னணி

[தொகு]

ஹட்டா பகுதியில் 1930 மற்றும் 1970களில் அகழ்வாராய்ச்சி செய்கையில், கிபி 1 - 5ம் நூற்றாண்டு காலத்திய, களிமண் மற்றும் சுண்ணாம்புச் சாந்தில், இந்தோ - கிரேக்க கலைநயத்தில் [1], வடிக்கப்பட்ட 23,000 சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டது. இத்தொல்பொருட்களில் கௌதம புத்தர் மற்றும் போதிசத்துவர்களான வச்ரபானி போன்றோர்களின் சிற்பங்களும் அடக்கம்.

இத்தொல்பொருட்களில் பல கிரேக்க ஹெலெனிய - பௌத்த நாகரீகக் கலைநயத்துடன் கூடியது. [2] ஹட்டா தொல்லியல் களத்தில் கிடைத்த அரிய கிரேக்க - பௌத்த சிற்பங்கள் பிரான்சு நாட்டின் தலைநகரமான பாரிசு நகரத்தின் குய்மெட் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[3]

கிபி 5ம் நூற்றாண்டின் போதிசத்துவர் மற்றும் சந்தேகாவின் சிற்பங்கள், ஹட்டா

சமசுகிருதம் மொழியில் ஹட்டா என்பதற்கு எலும்பு அல்லது எலும்புகள் குவித்த இடம் எனப் பொருளாகும்.

பௌத்தக் குறிப்பேடுகள்

[தொகு]

கிபி முதல் நூற்றாண்டுக் காலத்திய, காந்தாரி எழுத்துமுறையில் மட்பாண்டங்களில் எழுதப்பட்ட சர்வாஸ்திவாத பௌத்த சமயச் சாத்திரங்களின் குறிப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இக்கையெழுத்துப் பிரதிகள் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

அழிவு

[தொகு]

ஆப்கானித்தான் உள்நாடுப் போரின் போது, ஹட்டா தொல்லியல் களம் தாலிபான்களால் அழிக்கப்பட்டது.

படக்காட்சிகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hadda
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Lua பிழை: Module:Navbar:58: Invalid title பௌத்த யாத்திரைத் தலங்கள்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹட்டா&oldid=3792231" இலிருந்து மீள்விக்கப்பட்டது