உள்ளடக்கத்துக்குச் செல்

லடாக் மலைத்தொடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லடாக் மலைத்தொடர்

லடாக் மலைத்தொடர் (Ladakh Range) என்பது இந்தியாவின் மத்திய லடாக்கில் உள்ள ஒரு மலைத்தொடர் ஆகும், அதன் வடக்கு முனை பாகிஸ்தானில் உள்ள பால்டிஸ்தான் வரை நீண்டுள்ளது. இது சிந்து மற்றும் ஷியோக் நதி பள்ளத்தாக்குகளுக்கு இடையில் உள்ளது, இது 230 மைல்கள் (370 கிமீ) வரை நீண்டுள்ளது.[1][2] லடாக்கின் தலைநகரான லே, சிந்து நதி பள்ளத்தாக்கில் லடாக் மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ளது.

புவியியல்

[தொகு]

இம்மலைத்தொடரானது காரகோரம் மற்றும் சன்ஸ்கார் மலைத்தொடர்களுக்கு இடையே அமைந்துள்ளது. லடாக் மலைத்தொடர் தென்கிழக்கே 230 மைல்களுக்கு (370 கி.மீ), லடாக் பகுதியில் உள்ள சியோக் நதியின் முகத்துவாரப் பகுதியிலிருந்து திபெத்திய எல்லை வரை இந்தியாவின் லடாக் பகுதியில் நீண்டுள்ளது. [1][3] இம்மலைத்தொடரின் தெற்கு விரிவாக்கம் கைலாய மலை என்று அழைக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக திபெத்தில் இம்மலைத் தொடர் கைலாய மலை என்றே அழைக்கப்படுகிறது.[4]

இம்மலைத் தொடரானது சிந்து ஆற்றின் வடகிழக்குக்கரையையும் சியோக் ஆற்றின் மேற்குக் கரையையும் உருவாக்குகிறது.[5] லடாக் மலைத்தொடரின் சராசரி உயரம் சுமார் 6,000 மீட்டர் ஆகும். மேலும் பெரிய சிகரங்கள் இல்லை. அதன் சில சிகரங்கள் 4,800 மீட்டருக்கும் குறைவான உயரத்தைக் கொண்டுள்ளன.[6]

இந்த மலைத்தொடரின் முக்கியக் கனவாய்கள்e சோர்பத் பள்ளத்தாக்கு (5,090 மீட்டர்கள்), டிகர் லா (5,400 மீட்டர்கள்), கார்துங்க் லா (5,602 மீட்டர்கள்), சங் லா கணவாய் (5,599 மீட்டர்கள்) மற்றும் டிசகா லா (4,724 மீட்டர்கள்) ஆகியவை ஆகும்.[1]


மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Negi, Discovering the Himalaya, Volume 1 1998, ப. 14.
  2. Ladakh Range, Encyclopedia Britannica, retrieved 22 April 2018.
  3. Ladakh Range, Encyclopedia Britannica, retrieved 22 April 2018.
  4. Mehra, An "agreed" frontier 1992, end papers.
  5. Mehra, An "agreed" frontier 1992, ப. 15.
  6. Kaul, Rediscovery of Ladakh 1998, ப. 17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லடாக்_மலைத்தொடர்&oldid=3869224" இலிருந்து மீள்விக்கப்பட்டது