உள்ளடக்கத்துக்குச் செல்

சங் லா கணவாய்

ஆள்கூறுகள்: 34°02′49″N 77°55′50″E / 34.04704°N 77.93054°E / 34.04704; 77.93054
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங் லா
ஏற்றம்5,360 மீ (17,585 அடி)
Traversed byசிந்து பல்லத்தாகிலிருந்து பாங்காங் ஏரிக்கு செல்லும் சாலை
அமைவிடம்இந்தியா
மலைத் தொடர்இமயமலை
ஆள்கூறுகள்34°02′49″N 77°55′50″E / 34.04704°N 77.93054°E / 34.04704; 77.93054
சங் லா is located in ஜம்மு காஷ்மீர்
சங் லா
சம்மு மற்றும் காசுமீரில் உள்ள சங் லா-வின் இடவமைப்பு
சங் லா is located in இந்தியா
சங் லா
சங் லா (இந்தியா)

சங் லா கணவாய் (Chang La) இந்தியாவின் லடாக்கில் உள்ள உயரமான கணவாய் ஆகும்[1][2]. உலகிலேயே இரண்டாவது மிக உயரமான இடத்தில் உள்ள, பயணம் செய்யக்கூடிய சாலையாக கருதப்படுகிறது. லே-விலிருந்து காரு மற்றும் செக்தி கிராமங்கள் வழியாக சங் லாவை அடையலாம். இதில் கவனமாக வண்டி ஓட்ட வேண்டும், ஏனென்றால் இப்பாதை மிகவும் செங்குத்தாக இருக்கும். சங் லாவின் இரு பக்கதிலும், சுமார் 10-15 கி.மீ வரை சாலை மண் மற்றும் கரடுமுரடாகவும் இருக்கும். கோடை காலங்களில், குறிப்பாக சுற்றுலா காலங்களில், சாலையின் குறுக்கே நீரோடைகள் தோன்றுவதால், இரு சக்கர வாகனத்தில் ஏறுவது சவாலானதாக கருதப்படுகிறது. சங் லா-விலிருந்து டாங்சே அல்லது தர்புக் இடத்திற்கு இறங்குவது மீண்டும் மிகவும் செங்குத்தாக இருக்கும். இந்த இடம் மிகவும் உயரமான இடத்தில் இருப்பதால் 20-25 நிமிடங்களுக்கு மேல் இப்பகுதியில் இருப்பது உடல் நலத்தை பாதிக்கும் என அறிவுறுத்தப்படுகிறது.

லே-விலிருந்து பாங்காங் ஏரிக்கு செல்லும் போது சங் லா வழியாக மட்டுமே செல்ல வேண்டும். சங் லா வின் அர்த்தம் ” தெற்கு நோக்கி செல்” அல்லது “தெற்கில் செல்”. இதற்கு அருகில் இருக்கும் குடியிருப்பு இடாங்சே என்னும் சிறு கிராமம் ஆகும். இமயமலையில் உள்ள சங்தங் பீடபூமி செல்ல முக்கிய வழியே சங் லா கணவாய் தான். இப்பகுதியின் நாடோடி இனங்களுக்கு பெயர் சங்பா. இராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பால் தோற்றுவிக்கப்பட்ட, உலகின் மிக உயரமான ஆராய்ச்சி மையம், 17,664 அடி உயரத்தில் சங் லா பகுதியில் செயல்பாட்டில் உள்ளது[3].

படத்தொகுப்பு

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. GeoNames. "Chang La Pass". பார்க்கப்பட்ட நாள் 2009-06-17.
  2. Jina, Prem Singh (31 August 1998). Ladakh: The Land & The People. India: Indus Publishing. pp. 25–26. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7387-057-6.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "At 17,664 ft, world's highest research station becomes functional in Ladakh".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்_லா_கணவாய்&oldid=3634920" இலிருந்து மீள்விக்கப்பட்டது